மாந்தோப்புக்குச் சென்றால் உங்களுக்குப் பிடித்தது என்ன என்று கேட்டேன் மகளிடம்!
மாம்பழம் என்றாள் மகள்
ஏன் பிடிக்கிறது என்றேன்?
மாம்பழம் நாவுக்குச் சுவையானது என்றாள்!
பிடிக்காதது எது என்றேன்?
கீழேயிருக்கும் குப்பை, அழுக்கு, சருகு என்றாள்!
ஏன் அவற்றைப் பிடிக்காது என்றேன்?
அவற்றில் பாம்பு, பூரான் இருக்கும், பயமாக இருக்கும் என்றாள்!
அப்படியானால் அப்படி அழுக்கு நிறைந்த மாமரம் எப்படி சுவையான மாம்பழத்தை தருகிறது என்று சிந்தித்தீர்களா? என்றேன்
இல்லையப்பா! என்றாள்
மாமரம் தனது வேர்களை ஆழமாக்கிக் கொண்டு தனக்குரிய நீரையும், போசணையையும் அழுக்கான மண்ணிலிருந்து எடுத்துக்கொள்ளும், தனது வளர்ச்சியை, சக்தி தரும் சூரியனை நோக்கி வைத்துக்கொள்ளும்! இப்படி எங்கிருந்து எதைப் பெறவேண்டும்? தெளிவான இலக்கினைக் கொண்டிருப்பதால் சுவையான மாம்பழத்தை உருவாக்கும். அழுக்கு என்று மண்ணையும், சருகையும், குப்பையையும் விட்டு விலகுவது இல்லை! அதற்காக அழுக்கான மண்ணுக்குள் புதைந்து விடுவதும் இல்லை! அதன் நோக்கம் சூரியனை நோக்கி வளர்வதுதான்!
இதுபோலதான் நாமும் எம்மைச் சூழ நடக்கும் தீமைகள், வேதனைகள், எரிச்சல்கள் அனைத்தையும் எமக்கு பாடமாக, அனுபவமாக்கி அந்த உரம்பெற்ற மனதினது துணைகொண்டு சூரியனைப் போன்ற பிரகாசமான அறிவை நோக்கி மனதைச் செலுத்த வேண்டும். இப்படி அறிவும், அனுபவமும் வளர நாமும் பழுத்து மற்றவர்களுக்கு சுவைதரும் கனிபோன்று பயனுள்ளவர்களாக இருப்போம்!
ஆகவே மாந்தோப்பில் இருக்கும் குப்பை, சருகு, பாம்பு, பூரானைப் பார்த்து பயந்து விடுவதுபோல் வாழ்க்கையில் நடக்கும் தீமைகள், வருத்தங்களைப் பார்க்காமல் மாமரம் போல் மற்றவர்களும் பயன் தருபவர்களாக இருந்தல் வேண்டும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.