பரிணாமக் கோட்பாடு என்ன சொல்கிறது? பயன்படுத்தப்படாதது, சூழலுக்கு தக்கணப் பிழைக்காதது அழிந்துபோகும்! அறிவும் சரி! விலங்கினமும் சரி!
இன்று நாம் அனைத்தையும் யாரோ ஒருவன் வருவான் எம்மை மீட்பான் என்று மந்தைக்கூட்ட மனப்பாங்கில்தான் அனைத்தைப் பற்றியும் உரையாடிக்கொண்டிருக்கிறோம்!
ஒவ்வொருவரும் தமது கடமை என்ற எண்ணத்தில் செயலாற்ற வேண்டிய துறைகள் இரண்டு
1) எமது பாரம்பரிய சித்த ஆயுர் வேத மருத்துவம்.
2) எமது பாரம்பரிய பசு சார்ந்த மண்வளம் பேணும் விவசாயம்.
இவை இரண்டும் எமது ஆரோக்கியமும், இருப்பும் சார்ந்தது!
இரண்டும் செயலில் இருக்க என்ன செய்யலாம்?
பல்கலைக்கழகங்கள் கற்பிக்கும் என்று கற்பனை செய்யாமல் நாமே சுயமாக கற்க முயற்சிக்க வேண்டும்.
நாம் கணினி, பொறியியல் என்று வேறு எந்தத்துறையில் பட்டம் பெற்றாலும் இவற்றை எமது சுயகற்கைகளாக அறிவுக்காக கற்கவேண்டும்! எமது பிள்ளைகளுக்கு கற்பிப்பதற்குரிய வசதிகளை ஏற்படுத்தி வைக்கவேண்டும்.
இப்படி அதிகமானோர் கற்க, தேவைகள் உருவாக அந்தத்துறை முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கும்!
முதல் முயற்சி யாழ்ப்பாண பாரம்பரிய வைத்திய நூலான பரராசசேகரத்தினை அனைவரும் கற்கத் தூண்ட சிறு சிறு வீடியோக்களாக தினசரி வெளியிடலாம் என்று முயற்சிக்கிறோம்!
ஆதரவு தருவீர்கள் என்று எண்ணுகிறோம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.