சித்த ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படை ஸ்தூலத்தை விட சூக்ஷ்மம் வலிமையானது. ஆகவே நோய்க்கான காரணம் சூக்ஷ்மத்திலிருக்கிறது. அந்த சூக்ஷ்மத்தைப் புரிந்து கொள்ள மனிதனின் அமைப்பு எப்படி இருக்கிறது என்பதை தமது தியான சாதனையால் மனதை நுண்மையாக்கி புரிந்து கொண்டதை மூலதத்துவமாக்கித் தந்துள்ளார்கள் என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
மனிதனின் சூக்ஷ்மத்தன்மையினை புரிந்துக் கொள்ள முடியாதவன் பிணி தீர்க்க முடியாது! சித்த ஆயுர்வேதத்தின் ஆழம் ஸ்தூல உடலைத் தாண்டி மனிதனைப் புரிந்துக் கொள்ளுதல் என்பதில் இருக்கிறது. இன்று நவீன அறிவியல் இதை புரிய கருவிகள் மூலம் முயன்றுக் கொண்டிருக்கிறது.
இன்று கொரோனோ வைரசைப் பற்றிய கட்டுரை படிக்க நேரிட்டது. ஒரு மனிதன் கொரோனோ positive என்று காண்பிக்க அவனது உடலில் 70 பில்லியன் வைரசுகள் இருக்க வேண்டும். இந்த 70 பில்லியன் வைரசுகளின் நிறை 0.0000005 கிராம், ஆக ஒரு வைரசின் நிறை 0.85 attogram (0.000,000,000,000,000,000,85 gram), தற்போது 03 மில்லியன் மக்களுக்கு நோய் ஏற்படுத்திய மொத்த வைரசுகளின் நிறை 1.5 கிராம் மட்டுமே!
ஆக 1.5 கிராம் எடை வைரசுகளுக்கு இவ்வளவு பலமா? ஆம் வெளியே ஸ்தூலமான உலகம் மட்டும் தான் உண்மை என்று கற்பனை செய்துக் கொண்டிருக்கும் மனிதனின் அறியாமையால் இத்தகைய நுண்மையான கிருமிகள் பலம் பெறுகிறது என்று கொள்ளலாம்.
ஆகவே இப்படி சூக்ஷ்மமான வைரசு இவ்வளவு தாக்கம் தருமென்றால் அதைவிட சூக்ஷ்மமான உயிரின் - ஆன்மாவின் அளவு பற்றி திருமூலர் இப்படிக் கூறுகிறார்;
"மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவியது கூறது ஆயிரமானால்
ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாமே''
(திருமந்திரம், சீவன், பா.2011)
அதாவது ஒரு பசுவின் மயிரினை நூறாகப் பிரித்து (0.001) அதைப் பிறகு ஆயிரமாக பகுத்து (0.000,01), அந்தக் கூறை நூறாயிரம் ஆக்கினால் வரும் அளவு ஆன்மாவின் அளவு என்கிறார். பசுவின் மயிரின் அளவு 0.01 மில்லி மீற்றர் என்றால் உயிரின் அளவு. 0.000,000,000,01 மில்லி மீற்றர்
ஆன்மாவின் அளவு 0.000,000,000,01 மில்லி மீற்றர்
COVIND - 19 இன் அளவு 0.000,000,125 மில்லி மீற்றர்
ஆக COVID - 19 உயிரை விட 12500 மடங்கு பெரியது!
ஆகவே 80 கிலோ உள்ள ஸ்தூல உடலை மிகச் சூட்சுமமான வரைசுகள் கட்டுப்படுத்தினால் வைரசுகளை கட்டுப்படுத்த அதை விட 12500 மடங்கு நுண்மையான உயிரின் ஆற்றல் பயன்படலாம் அல்லவா?
ஆகவே சூக்ஷ்மமான உயிரின் ஆற்றலைப் பயன்படுத்த மூலதத்துவமும், மனிதன் என்ற பிண்டம் அமைக்கப்பட்டிருக்கிறது என்ற தத்துவமும் புரிந்திருக்க வேண்டும்!
{இந்தப்பதிவு சித்தர் பாடல்களில் கற்றறிந்தவற்றை சிந்தித்து ஒப்பிட்டு கருதுகோள்களையே முன்வைக்கிறது; ஆகவே அறிவியல் கதைக்கிறோம் என்று விதண்டாவாதங்கள், குதர்க்கங்கள் முன்வைக்க வேண்டாம்; ஆக்கப்பூர்வ கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.}
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.