தூய அறிவிற்கு புத்தி என்பது சமஸ்க்ருதச் சொல். புத் என்ற அடிச்சொல் விழிப்படைந்த என்ற பொருளைத் தரும். தி - தீ என்பது அறிவு என்று பொருள்! காயத்ரி மந்திரத்தில் தீமஹி என்பதன் பொருள் அறிவு என்பதாகும்.
புத்தி என்றால் விழிப்படைந்த அறிவு என்று பொருள் சொல்லலாம்.
இந்த தூய அறிவு என்பது சலனமுறும் மனதின் தடுமாறிக் கொண்டிருக்கும் எண்ணச் சுழல்களிலிருந்து விடுபட்ட ஏகாக்கிர மனமும்; கொதித்துக் கொண்டிருக்கும் உணர்ச்சிகளிலிருந்தும் விடுபட்டு தான் பார்க்கும் விஷயங்களை வழு (Bias) இன்றி, முன் துணிபு (Prejudice) இன்றி பார்க்கும் மனதின் ஆற்றல்.
வழமையான மனம் தனது தொடர் பழக்கவழக்கங்கள், உணர்ச்சிகளது அடிமைத் தனங்கள் போன்றவற்றிற்கு அடிமைப்பட்டு அந்த அடிப்படையிலேயே தனது பார்வையை (Perception) உருவாக்கிக் கொள்ளும். இப்படியான மனம் உள்ளதை உள்ளபடி பார்க்கும் வல்லமை அற்றதாகும். காரின் முன் கண்ணாடியில் தூசி, அழுக்கு, பனி படிந்தால் ஓடுபவருக்கு வீதியின் ஒழுங்கு தெரியாதது போல் அதிக மனச் சலனம், உணர்ச்சிக் கொந்தளிப்பு உள்ளவர்களது மனது தம்மைச் சூழ நடக்கும் நடைமுறை உண்மைகளை அறிவதில்லை.
ஆகவே புத்தியை விழிப்படையச் செய்யாமல் நாம் பார்க்கும் பார்வைகள் எதுவும் எமக்கு உண்மையான அறிவினைத் தருவதில்லை. தெளிவில்லாத கண்ணாடியினூடாகப் பார்க்கும் சாரதி முட்டி மோதிக் கொள்வது போல் புத்தி விழிப்படையாமல் வாழ்க்கையை ஓட்ட முனைபவர்கள் விபத்தடைவது நடைபெறுகிறது.
இப்படி புத்தியை விழிப்படையச் செய்ய எம்மைவிட உயர்ந்த ஒரு பேரறிவுடன் ஒன்றச் செய்வதையே மூவுலகிலும் புத்தியைத் தூண்டும் அந்தப் பேரொளியை எம்மில் இருத்தி தியானிப்போமாக என்று ஸ்ரீ காயத்ரி மந்திரத்தினூடாக தியானிக்கிறோம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.