ஒருவன் தவறு செய்யும் போது தனது அகத்திற்கு உடனடியாக ஒருவித அதிர்ச்சியைத் தருகிறான். அதை அவன் உணர்வு அறிந்து கொண்ட அடுத்த கணம் அவனது மேல் மனம் உடனடியாக அதை மறுப்பதற்குரிய நடவடிக்கையை எடுக்கும். ஏனென்றால் அந்த தவறை தான் ஏற்றுக்கொண்டவுடன் அதனால் தனக்கு அவமானம், தண்டணை, வேண்டத்தகாத அனுபவம் மற்றவர்களிடமிருந்து வரும் என்ற எண்ணம். இந்தப் பயமும் எண்ணமும் அவனின் அர்த்தமற்ற காரணம் கற்பித்தல், சரியான காரணமற்ற குதர்க்கம், தன்னை எப்படி பாதுகாத்துக் கொள்ளுதல் என்ற சிந்தனை, அந்தப்பிழைக்கு எப்போதும் மற்றவர்கள்தான் காரணமாக இருக்கிறார்கள் என்ற வகையில் நடத்தையை உருவாக்கும்.
ஆனால் இந்த எண்ணங்கள் ஒருவித குரூர நடத்தையை தொடர்ச்சியாக உருவாக்கும். மீண்டும் மீண்டும் அத்தகைய தவறினைச் செய்யத்தூண்டும் படிப்படியாக ஒரு பழக்கமாக உருவாகி எது சரி எது பிழை என்பதைப் பற்றிய சிந்திக்கும் இயல்பினை இல்லாமல் ஆக்கும். இது பிழையான, இருண்ட, பலவீனமான அகத்தினை உருவாக்கி தீய பண்புகளை உருவாக்கும்.
ஒருவன் தனது பிழைகளையும், பலவீனங்களையும் ஒப்புக்கொள்ளுதல் என்பது அவனது ஆன்ம தைரியத்தையும் அகத்தூய்மையையும் காட்டுகிறது. ஆகவே ஒருவன் தனது பிழைகளை ஏற்று அதற்குரிய மன்னிப்பினை கேட்பது அவனது அகத்தூய்மையை அதிகரிக்கும். இது மிகவும் தைரியமான செயல். அது அவனுடைய அகவலிமையை அதிகரிக்கும். அப்படி உருவாகும் அகவலிமையுடன் அவன் அத்தகைய தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வதிலிருந்து மீண்டு வர உறுதி கிடைக்கும். இதைச் செய்வதால் அவன் தன்னைப் படிப்படியாக புடம் போட்டு முன்னேற்றப்பாதையில் செல்ல ஆரம்பிப்பான். இது அவனது உலகவாழ்க்கையிலும், ஆன்ம முன்னேற்றத்திலும் சரியான பாதையைக் காட்டும்.
குருதேவர்
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.