பரராசசேகரம் சிரரோக நிதானம் என்ற முதல் நூல் முதல் முதலாக 1928ம் ஆண்டு ஏழாழை பொன்னையாப்பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணம் சைவப்பிரகாச யந்திர சாலையில் ஐப்பசி மாதம் வெளியிடுகிறார்.
இந்த வெளியீட்டின் முன்னுரையில் கீழ்வரும் தகவல்களைக் குறிப்பிடுகிறார்:
1. அந்த நூல் இற்றைக்கு 400 வருடங்களுக்கு முன்னர் இயற்றப்பட்டது.
2. தனியொருவரால் இயற்றப்படவில்லை.
3. மொத்தம் 12000 பாடல்கள் காணப்பட்டது,
4. தன்னிடம் கிடைத்த செய்யுட்தொகை ஏழாயிரத்திற்கு சற்று அதிகம் என்று கூறுகிறார்.
5. நூலை பதிப்பிற்குத் தயார் செய்தபின்னர் கிடைத்த ஏட்டுப் பிரதியில் உள்ள பாயிரச்செய்யுளைச் சேர்த்து அச்சிட்டதாகக் கூறுகிறார்.
6. கிடைத்த ஏட்டுப்பிரதிகள் சிலதில் தன்வந்திரி வைத்திய சிந்தாமணி என்று முகப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
இதன் பின்னர் மொத்தமாக ஏழு பாகங்களாக பரராசசேகரத்தை 1936ம் ஆண்டளவில் ஏழாலை ஐ. பொன்னையப்பிள்ளை அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
இதுவே எமக்குக் கிடைக்கக்கூடிய ஒரேயொரு மூல நூல் பதிப்பாகும்!
இதன் பின்னர் யாழ்ப்பாணத்து லங்கா சித்தாயுள் வேதக்கல்லூரியின் வைத்தியர்கள் இணைந்து 1999 களில் மீள்பதிப்புக்கு உள்ளாகியது.
2003ம் ஆண்டளவில் கரவெட்டி ஸ்ரீபதி சர்மா அவரகள் ஐந்தாம் பாகத்தை மாத்திரம் வெளியிட்டிருக்கிறார்கள்.
பிறகு 2016ம் ஆண்டளவில் வடமாகாண சுதேச வைத்திய திணைக்களம் ஐந்து பாகங்களை மீள்பதிப்புச் செய்துள்ளது.
அதன் பிறகு 2019, 2020 களில் வைத்திய கலாநிதி சிவசண்முகராஜா அவர்கள் இவற்றை சுருக்க உரையுடன் முழுமையாகப் பதிப்பித்துள்ளார்.
உரையைக் கேட்க நாளை காலை 0730 இற்கு கீழ்வரும் தளத்தில் பாருங்கள்;
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.