குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, July 02, 2018

என் மாணவன்: சாதனா உரையாடல் - 12

ஏன் தன்னை அறியும் முயற்சியில் இருப்பவனும், காயத்ரியின் பேரொளியை தன்னில் அடைய முயற்சிக்கும் சாதகன் தான் மனைவி மக்களை விட்டு சாமியாராக ஓடினால் தான் சாதனை செய்யலாம் என்று கருதாதவன் எனக்கூறப்பட்டது?

தன்னை அறியும் முயற்சி செய்பவன் முதலில் செய்யவேண்டியது தன்னுள், அகத்தில் தன்னை ஒழுங்கு செய்துகொள்வது. இதற்கு புறச்சூழல்தான் தன்னை செல்வாக்கு செலுத்துகிறது என்று உறுதியாக நம்புவன் எந்த இறைசாதனையிலும் முன்னேறுவது கடினம். ஆன்ம முன்னேற்றத்தில் புறச்சூழலில் பங்கு பெருமளவு இருந்தாலும் அந்தப்பூறச்சூழலை கட்டுப்படுத்தும் ஆற்றல் சாதகனுக்கு ஆரம்பத்தில் இருக்காது. ஆகவே முதல் முயற்சி தன்னுள் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். 

அடுத்து குடும்பம் என்ற அமைப்பு உண்மையில் தனது இதயத்தை, மனதை விசாலமாக்க ரிஷிகளால் உருவாக்கப்பட்ட ஒரு முறை. ஒருவன்/ஒருத்தி தான், தனது சுகம் என்று சுய நலமாகன எண்ணத்தில் இருந்து தனக்கு சமமாக இன்னொரு உயிரை மதித்து அதனது ஆன்ம, பௌதீக் முன்னேற்றத்தில் தன்னால் இயன்ற உதவிகளை செய்து தானும் உயர்ந்து மற்றைய ஆன்மாவினையும் உயர்த்தி, பின்னர் இன்னொரு உயிரிற்கு உடல் தரும் முறையே குடும்பம். ஆக உண்மையில் குடும்பம் என்ற அமைப்பு மனிதனும் உடல், மனத்தேவைகளை சரியான வழியில் பூர்த்தி செய்து, பின்னர் தான்மட்டும் ஆன்ம முன்னேற்றம் பெறாமல் தனது மனைவி, பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கும் பாடுபடும் அமைப்பு. 

இது பிராமணக்குழந்தைகள் உப நயனம் ஆகும்போது தமது பூணூலில் உள்ள எண்ணிக்கையுடன் திருமணமானபின்னர் ஒன்று சேர்த்து, பின்னர் குழந்தைகள் பிறக்கும் போது ஒவ்வொரு இழைகளாக சேர்த்துக்கொள்ளும் பாரம்பரியத்தின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டது. உப நயனத்தில் தான் பிரம்மத்தை அடையும் வழியை த்னது  வாழ்வின் இலட்சியமாக வரித்துகொண்ட பிரம்மச்சாரி, திருமணத்தின் பின்னர் அந்தப்பொறுப்பை தனது மனைவிக்காகவும் ஏற்றுக்கொள்கிறான். பின்னர் பிறந்த குழந்தைகளுக்காகவும் ஏற்றுக்கொள்கிறான். 

இப்படி தனக்காக மட்டும் வாழாமல், ஆன்ம சாதனை செய்யாமல், பிற உயிர்களுக்கும் சேர்த்து ஆன்ம முன்னேற்றத்திற்கும் பாடுபடும் பண்பை உருவாக்கும் பண்பை உருவாக்குவதே குடும்பத்தின் நோக்கம். இதை கிரஹ்ஸ்த யோகம் என்று கூறுவார்கள். 

இப்படி கிருஹஸ்த யோகத்தில் தனது குடும்பத்தின் ஆன்ம முன்னேற்றத்திற்கு பாடுபட்டு, தனது மனதைப்பண்படுத்திக்கொண்டு, தனது தபஸ் சக்தியை உயர்த்திக்கொண்ட ஆன்மா தனது குடும்பம் சாராத  எல்லா உயிர்களையும் தனது குடும்பத்தினர் போல் பாவித்து அவர்களது ஆன்ம முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் நிலை அடைந்தவர்களே ரிஷிகள் எனப்பட்டார்கள். முற்காலத்தில் வஷிஷ்டர் - அருந்ததி போன்ற ரிஷிகளும் ரிஷிபத்தினிகளும் தமது குழந்தைகளுக்கு போதிக்கும் ஞானம்போல் மற்றக்குழந்தைகளுக்கும் தமது வீட்டில் ஞானம்போதிப்பதையே குருகுலம் எனப்பட்டது. அதாவது தான் பிறந்த குலத்தை மறந்து குருவின் ஞானம் என்ற குலத்தை அடைந்து ஞானம் பெறலே குருகுலக்கல்வி. 

இப்படி கணவனின் ஆன்ம முன்னேற்றத்திற்கு மனைவி தனது சாதனையையும், மனைவியின் ஆன்ம முன்னேற்றத்திற்கு கணவன் தனது சாதனையையும், கணவனும் மனைவியும் தமது குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும், வளர்ந்து அறிவு விழிப்படைந்த குழந்தைகள் தமது பெற்றோருக்காக தமது சாதனையையும் அர்ப்பணித்து வாழ்வதே உண்மையான ஆன்மீகம். இதனாலேயே நாம் குருமண்டல நாமவளியின் முதலில் "தாயே நமஹ, தந்தையே நமஹ" என்று கூறுகிறோம். 

பொதுவாக அறிவியலில் தூய அறிவியல் (pure science) பிரயோக அறிவியல் (applied science) என இரண்டு பகுதி உண்டு. தூய அறிவியல் ஆய்வுகூட நிலையில் எப்படி இரசாயனங்கள், உயிர்கள் செயல்படுகிறது என்று புரிந்துகொள்ள உதவுவது. (How chemical and life forms are reacting in Laboratory condition). ஆனால பிரயோக அறிவியலில் இயற்காயான சூழலில் எப்படி இந்த தாக்கங்கள் நடைபெறுகிறது என்ற அறிவியலாகும். 

குடும்பத்துடன் செய்யும் சாதனை என்பது பிரயோக அறிவியலாகும். துறவறம் ஆய்வுகூட நிலையில் செய்யப்படும் தூய அறிவியல் போன்றது. பிரயோக அறிவியலே உலகின் இயக்கத்திற்கு ஆதாரம். ஆனால் பிரயோக அறிவியல் தூய அறிவியலின் விதிகள், கண்டுபிடிப்புகளிலேயே தங்கியுள்ளது. அதுபோல் துறவிகளான சங்கரர், இராமானுஜர், விவேகானந்தர் போன்றோ காலத்துக்கு காலம் ஆய்வுகூடங்களில் தனித்திருந்து கண்டுபிடித்த தூய அறிவியல் போன்ற ஆன்மீக விதிகளை சமூகத்திற்கு பிரயோக அறிவியல் ஆக்கப்பட வேண்டும் என்பதே குருமண்டலம் காட்டும் வழிகளாகும்.  

ஆகவே குடும்பத்தில் இருந்து சாதனை செய்வதே பெரும்பாலானோர்க்கு உகந்த வழி. இதன் அர்த்தம் துறவறம் தாழ்ந்தது என்பதல்ல, துறவறம் மிகுந்த வைராக்கியமும், பற்றின்மையும் அற்ற பரிணாமத்தில் உயர்ந்த ஆன்மாக்கள் உலகின் பரிணாமத்தை திருப்ப தமது ஆற்றலை அர்ப்பணித்து செயற்பட காலத்திற்கு காலம் தேர்ந்தெடுக்கும் வழியாகும். கிருகஸ்தத்தில் இருந்து இத்தகைய வைராக்கியமும், பற்றின்மையும் பெற்ற ஆன்மா தனது கடமைகள் முடிந்தபின்னர் துறவறத்தை ஏற்றுக்கொள்ளல் குருமண்டலத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அல்லாமல் தமக்கு வாய்த்த கடமைகளை செவ்வனே செய்யாமல் தப்பியோட நினைப்பவர்கள் எந்த ஆன்ம முன்னேற்றமும் பெறமாட்டார்கள். 

இதனாலேயே தன்னை அறியும் முயற்சியில் இருப்பவனும், காயத்ரியின் பேரொளியை தன்னில் அடைய முயற்சிக்கும் சாதகன் தான் மனைவி மக்களை விட்டு சாமியாராக ஓடினால் தான் சாதனை செய்யலாம் என்று கருதாதவன் என்மாணவன் எனக்கூறப்பட்டது. 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

குரு அகத்திய காயத்ரி சாதனா அனுபவம் - வாழ்க்கை எப்படி சீராகியது என்று ஒரு சாதகியின் அனுபவம்

சாதனை அனுபவம்   இரண்டரை வருடங்களுக்கு முன் என்னிடம் காயத்ரி சாதனை செய்வதற்கு சுமனன் அண்ணா வழிகாட்டுகிறார் நீங்களும் சாதனை செய்ய விண்ணப்பியுங...