குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, January 30, 2013

சித்தர்கள் அருளிய காயத்ரி மந்திரங்கள் சரியானதா?


அண்மையில் நண்பர் ஒருவர் கீழ்வரும் கேள்வியினை கேட்டிருந்தார்;
சித்தர்கள் தமது நூற்களில் சில காயத்ரி மந்திரங்களை கொடுத்துள்ளார்கள், அவைதான் உண்மையான காயத்ரி மந்திரங்களா? இப்போது உங்கள் பதிவுகளில் கூறும் காயத்ரி மந்திரமான ஓம் பூர் பூவஹ ஸ்வஹ எனத்தொடங்குவது வடமொழியினருக்கு உரியது, தமிழர்கள், சித்தர்கள் இதனைப்பற்றி கூறவில்லை, ஆகவே எது சரியானது? அத்துடன் மற்றைய தெய்வங்களுக்கும் காயத்ரி மந்திரங்கள் காயத்ரி மந்திரம் உள்ளனவே, அதற்கு என்ன காரணம்?
இந்தக்கேள்வி மிக அருமையான கேள்வி, அதற்கு எமது அறிவுக்கு எட்டியவரையில் பதிலினைக் கூறுகிறோம்.
இதன் அடிப்படைகளை விளங்கிக்கொள்ள சில மந்திர சாஸ்திர அடிப்படைகளை விளங்கவேண்டும்.
முதலாவதாக காயத்ரி என்பது காரணப்பெயர்; காயம்+த்ரயாதே, காயம் ஆகிய உடலினை காப்பாற்றுவது என்பது பொருள், உடலினை காப்பாற்ற பிராணனினை இரட்சிக்க வேண்டும்.பிராணணின் அசைவு மனதினால், மனதில் எழும் எண்ணங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. மனது சப்தத்தினால், ஒலியினால் தொடர்பு கொள்ளக்கூடியது, அப்படியான ஒரு ஊடகம் தான் மந்திரம்.
மந்திரங்கள் உச்சரிக்கும் போது ஒரு மட்டிசைவுடன் ஒலிப்பதை சந்தஸ் என்பர், இப்படி மந்திரங்களுக்கு சந்தஸுகள் உண்டு, அவை காயத்ரி, அனுஷ்டுப், உச்சணிக் என வகைப்படும். ஒவ்வொரு சந்தஸும் ஒவ்வொரு வகையில் மனிதனது மனதுடன், பிராணனுடம் தொடர்பு கொள்ளும் தன்மை உடையது.
காயத்ரி சந்தஸில் அமையும் மந்திரங்கள் பிராணனை இரட்சித்து பிராணனுடன் கலக்கும் தன்மை உடையது. காயத்ரி சந்தஸ் மந்திரங்கள் பிராண சக்தியினை அதிகரிக்கும் தன்மை உடையது. அடிப்படையில் எந்த தெய்வ சக்திக்கும் மனச்சக்தி, பிராண சக்தி என்ற இரு கூறுகள் காணப்படும். மந்திரத்தின் பொருள் மனச்சக்தியினை செயர்படுத்தும், சந்தஸ் பிராண சக்தியினை செயற்படுத்தும். ஆகவே காயத்ரி சந்தஸ் உடைய எந்த தெய்வ மந்திரங்களும் குறித்த தெய்வ சக்தியினை பிராண சக்தியுடன் கலந்து ஜெபிப்பவரது ஸ்தூல சூஷ்ம உடலில் விழிப்பிக்க செய்யும்.
இந்த அடிப்படையிலேயே போகர், அகத்தியர் முதலிய சித்தர்கள் த‌ம‌து நூற்க‌ளில் கூறும் காய‌த்ரி ம‌ந்திர‌ங்க‌ள் எல்லாம்! அவ‌ர்க‌ள‌து ம‌ந்திர‌ங்க‌ள் க‌வ‌னமாக‌ பீஜாட்ச‌ர‌ங்க‌ளை கோர்த்து காய‌த்ரி ச‌ந்த‌ஸில் அமைத்திருப்பார்க‌ள். ஆக‌வே காய‌த்ரி என்ப‌து ச‌ந்த‌ஸினை குறிக்கும் சொல்லேய‌ன்றி குறித்த‌ ஒரு ம‌ந்திர‌த்தினை குறிக்கும் சொல் ம‌ட்டும‌ல்ல‌!
அப்ப‌டியென்றால் த‌ற்போது காய‌த்ரி ம‌ந்திர‌ம் ம‌ந்திர‌ம் என‌ ப‌ர‌வலாக‌ கூற‌ப்ப‌டும் "ஓம் பூர் புவ‌ஹ் ஸ்வ‌ஹ‌, த‌த் ஸ்விதுர்வ‌ரேண்ய‌ம் ப‌ர்கோ தேவ‌ஸ்ய‌ தீம‌ஹி, தியோ யோந‌ஹ‌ ப்ர‌சோத‌யாத்" என‌ப்ப‌டும் ம‌ந்திர‌ம் காயத்ரி ம‌ந்திர‌ம் இல்லையா? என‌க் கேட்ப‌து விள‌ங்குகிற‌து.
அதுவும் காய‌த்ரி ச‌ந்த‌ஸில் அமைந்த‌ ச‌விதா ம‌ந்திர‌ம், ம‌ற்றைய‌ காய‌த்ரி ம‌ந்திர‌ங்க‌ள் குறித்த‌ தெய்வ‌ ச‌க்தியினையும், பிராண‌ ச‌க்தியினையும் க‌ல‌ந்த‌ க‌ல‌வை. இதை விள‌ங்கிகொள்ள‌ த‌த்துவ‌ அறிவு ச‌ற்று அவ‌சிய‌ம், பிர‌ப‌ஞ்ச‌ ஆதியில் பிர‌ம்மம், பிரகிருதி அல்ல‌து சிவ‌ம் என்ப‌தில் இருந்து ச‌க்தி தோன்றிய‌து, இந்த‌ ஆதி மூல‌மான‌ பிர‌ம்ம‌ம் , பிரகிருதி அல்ல‌து சிவ‌ம் அடிப்ப‌டை என்றால் ச‌க்தி பிராண‌ன் என‌ப்ப‌டும். இவ்வாறு ப‌ரிணாமித்த‌வையே ம‌ற்றைய‌ தெய்வ‌ ச‌க்திக‌ள்.இந்த‌ அடிப்ப‌டையில் பிரம்ம சக்தியினையும் பூமியிற்கு பிராணசக்தியினை வழங்கும் சூரியனும் இணைந்த அதியுயர் சக்திதான் சவிதா!மனித உடலில் இருந்து அதிகளவு சக்தியினை பெறக்கூடிய அதிர்வினைத்தான் சவிதாவாக விஸ்வாமித்திரர் கண்டறிந்தார். மற்றைய காயத்ரி சந்தஸ் மந்திரங்களை விட சக்தி அதிர்வில் ஓம் பூர் புவ‌ஹ் ஸ்வ‌ஹ‌, த‌த் ஸ்விதுர்வ‌ரேண்ய‌ம் ப‌ர்கோ தேவ‌ஸ்ய‌ தீம‌ஹி, தியோ யோந‌ஹ‌ ப்ர‌சோத‌யாத்" என‌ப்ப‌டும் ம‌ந்திர‌ம் அதிக பிராண சக்தியினை கவருவதால் பெரியோர்களால் இந்த மந்திரமே காயத்ரி மந்திரம் என வழங்கப்படலாயிற்று.
எனினும் குருபரம்பரையில் இவற்றை அறியப்பெறுபவர்கள் சித்தர்கள் கூறிய காயத்ரி மந்திரம்தான் சரி, வடமொழி மந்திரம் பிழை என விவாதிடுதில்லை! ஏனெனில் காயத்ரி என்பதன் உண்மைப்பொருள் குரு பரம்பரையாக வருபவர்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டிருக்கும். அனைவரும் இந்த உண்மையினை அறிந்து குழப்பமற்று பயன் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் குருநாதரின் ஆசியுடன் இதை இங்கு வெளிப்படுத்தியுள்ளோம்.
ஆகவே குழப்பம் வேண்டாம், சித்தர்கள் காயத்ரி எனக்கூறி சொல்லியுள்ள மந்திரங்களும் சரியானது! வடமொழியில் காணப்படும் எல்லாத்தெய்வகாயத்ரி மந்திரங்களும் சரியானவையே! அது எப்போது என்றால் அதனை காயத்ரி சந்தஸில் உச்சரிக்கும் போது.
அதெப்படி காயத்ரி சந்தஸில் உச்சரிப்பது? இதைப்பற்றி நாம் ஏற்கனவே காயத்ரி ஜெபசாதனை என்ற பதிவில் குறிப்பிட்டுள்ளோம்.
மற்றைய காயத்ரி சந்தஸில் உள்ள மந்திரங்களை ஜெபிப்பது எப்படி என்பதனை சுருக்கமாக விளக்குகிறோம்.
காய‌த்ரி ச‌ந்த‌ஸ் ம‌ந்திர‌ங்க‌ள் ஐந்து இட‌ங்க‌ளில் நிறுத்து உச்ச‌ரிக்க‌வேண்டும். உதார‌ண‌மாக‌ காயத்ரி மந்திரம் ஐந்து இடங்களில் நிறுத்தி ஜெபிக்க வேண்டும். முதலாவது நிறுத்தல் "ஓம்"; இரண்டாவது நிறுத்தல் "பூர் புவ ஸ்வஹ"; மூன்றாவது நிறுத்தல் "தத் ஸவிதுர்வரேண்யம்"; நான்காவது நிறுத்தல் "பர்கோ தேவஸ்ய தீமஹி"; ஐந்தாவது நிறுத்தல் "தியோ யோ நஹ ப்ரசோதயாத்", காயத்ரியினை ஜெபிக்கும் போது மேற்கூறிய ஒவ்வொரு பதத்திலும் நிறுத்தி ஜெபிக்கவேண்டும்.
சித்தர்களின் ருத்திர காயத்ரி மந்திரம் ஓம் சிறீங் றீங் மகா மசிமசி நசிமசி ருத்ராய ஸ்வாஹா ஆக இருப்பின்;
முதலாவது நிறுத்தல் "ஓம்"
இரண்டாவது நிறுத்தல் "சிறீங் றீங்" 
மூன்றாவது நிறுத்தல் "மகா மசிமசி நசிமசி"
நான்காவது நிறுத்தல் "ருத்ராய";
ஐந்தாவது நிறுத்தல் "ஸ்வாஹா" என்றவாறு வரும். 

இவற்றை குருமுறையாக அறிந்து செய்வதே சிறப்பு. அடிப்படைகளை விளங்கிக்கொள்ள இங்கு இவற்றை வெளியிடுகிறோம்.

ஸத்குரு பாதம் போற்றி!

1 comment:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...