மந்திர யோகம் (02): மந்திரம் என்றால் என்ன?

மந்திர யோகம் என்பது மந்திர சாதனை மூலம் மனதினை வசப்படுத்தி இறையான பிரம்மத்திடம், சிவத்திடம் ஆன்மா ஒன்ற உள்ள ஒரு எளிமையான  வழியாக எமது முன்னோர்கள் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள்.   அதாவது மனதில் மந்திரத்தின் மூலம் சித்த விருத்திகளை குறைத்து படிப்படியாக எண்ணம் ஒடுங்கி மனம் அடங்கி சாதகர் தெய்வத்துடன்/தெய்வ சக்தியுடன் ஒன்றும் நிலையினை ஏற்படுத்துவது தான் மந்திர யோகம் எனப்படும்.

மந்திரங்கள் குறித்த ஒலிகளை உருவாக்க கூடிய சொற்களின் கோர்வைகளால் ஆக்கப்பட்டிருக்கும். இந்த ஓவ்வொரு ஒலியும் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியுடன் பரிவுறும் (Resonance) ஆற்றல் உள்ளதாக இருக்கும். மனித வாழ்க்கையினை அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருடார்த்தங்களாக எமது முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். இந்த நான்கினையும்  அடைந்து வாழ்பவனே உண்மையில் பூரண இன்பமுடைய  மனிதனாக பூமியில் வாழ்ந்து இறைவனை அடைகிறான். இந்த நான்கும் பிரபஞ்சத்தில் உள்ள சக்திகளால் பாதிப்படைகிறது. இந்த அளவினை கூட்டவோ குறைக்கவோ மந்திரங்களை பாவிக்கலாம்.

மந்திரங்கள் என்றால் என்ன என்று மேலும் சில விளக்கங்களை பார்க்கலாம்.
சமஸ்கிருதத்தில் மந்த்ர என்றால் என்ன என்பது பற்றி முன்னைய பதிவிலும் பார்த்தோம். அதற்கு இன்னுமொரு விளக்கமும் கொடுக்கலாம் மன் என்றால் மனம், திர என்றால் பிராணன் மனமும் பிராணனும் கலக்க செய்வது மந்திரம் எனப்படும்.

தாந்திரீக அடிப்படையில் உலகத்தின் தோற்றம் நாதத்துவனியில் இருந்தே இந்த பிரபஞ்சம் உற்பத்தியாகியது எனக் கூறப்படுகிறது. சப்தம் சித் சக்தியின் சூஷ்ம ரூபம் ஆகையால் சப்தத்தின் முலம் பிரபஞ்ச மகா சக்தியினை கவரலாம் என்பது தந்திரிக்க அடிப்படைகளில் ஒன்று.

அடுத்த பதிவில்  மந்திரங்களின் பகுதிகள் எவை எனப் பார்ப்போம்.  

Comments

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு