மந்திர யோகம் (03): மந்திரங்களின் அமைப்பு

சென்ற பதிவில் மந்திரம் என்றால் என்ன? என்று பார்த்தோம்,
 
இந்தப்பதிவில் மந்திரத்தின் பகுதிகள் என்ன என்று பார்ப்போம், இவை எல்லா மந்திரங்களிலும் காணப்படும் பொதுவான அமைப்புகளாகும், சிலவற்றில் சிலது இல்லாமல் இருக்கும்,
 
ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒரு உடல் இருக்கும், அதாவது மந்திரம் என்றால் மனித உடல் போன்று கருதினால் அதன் தலை போன்றது "ஓம்' என்ற பிரணவம், தலை அல்லது மூளை இல்லாமல் எந்தவொரு செயலும் உடலில் நடைபெறாது என்பது போல் எல்லா மந்திரத்திற்கு முன்னும் ஓம் சேர்க்க வேண்டும். சில  தாந்திரிக மந்திரங்களில் இவற்றிற்கு விதிவிலக்கு உண்டு, பொதுவான மந்திரத்தின் அமைப்பு கீழ்வருமாறு காணப்படும்.
 
அந்த மந்திரத்திற்குரிய தேவதை, ஓம் ஐ தொடர்ந்து ஸ்ரீ என்பதுடன் தொடங்கும், உதாரணமாக  ஓம் கணபதி.... என்றவாறு, இருக்கும். அத்துடன் சில சக்தியலைகளை ஈர்க்க   பீஜட்சரங்களும் சேர்ந்து வரும்.  
 
 
அடுத்த பகுதி சாதகரின் மனவிருப்பத்தினை, சங்கல்பத்தினை குறிப்பதாக இருக்கும்.  பொதுவாக ஸர்வ சித்திப்ப்ரதாய, மனோவாஞ்சிதம் போன்ற வார்த்தைகள் இவற்றை குறிக்கும்.
 
கடைசிப்பகுதி பல்லவம் எனப்படும், அதாவது முடிவுப்பகுதி, இது எழு வகையாக உள்ளது,
  •  நமஹ: இது மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் என்ற நான்கு அந்தக்கரணங்களையும் வணங்கும் தெய்வ சக்தியுடன் ஒன்றாக்குதல் என்று பொருள், நமஹ எனும் போது குறித்த தெய்வ சக்தி எமது அந்தக்கரணங்களில் விழிப்படைந்து அந்த சக்தியினை ஈர்த்து அதுவாகவே ஆகிறது.  ஓம் கணேசாய நமஹ என்றால் கணேசரின் சக்தி அந்தக்கரணங்களில் மெது மெதுவாக பதியத்தொடங்கும்.
  • ஸ்வாஹ: இது அக்னியிற்கு அர்ப்பணிக்கும் மந்திர முடிவு, இதன் மூலம் மந்திர சக்தி அக்னியில் சேர்க்கப்படுகிறது, அதாவது புற பிரபஞ்ச பஞ்ச பூத அக்னி தத்துவத்தில் மந்திரம் கலந்து பிரபஞ்ச சக்தியினை செயற்படுத்த தொடங்குகிறது. பொதுவாக இப்படியான முடிவுள்ள மந்திரங்கள் ஜெபிக்கும் போது அருகில் விளக்கு, அல்லது ஊதுபத்தி போன்ற அக்னி ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும்.
  • ஸ்வதா: ஸ்வாஹா என்பது பிரபஞ்ச்சத்தில் சக்தியினை செயற்படுத்தும் அமைப்பு என்றால், ஸ்வதா என்பது அகப்பிரபஞ்சத்தில் உள்ள சக்தியினை செயற்படுத்தும் மந்திர முடிவாகும். பொதுவாக ஸ்வதா என்ற முடிவுடன் மந்திரத்தினை ஜெபித்து அக்னியில் சேர்க்கும் போது அவரவர் முன்னோர்களுக்கு அந்த தெய்வ சக்தி சேரும்.
  • வஷட்: தீய சக்தியினை அழிக்கும் தெய்வசக்தியாக மந்திரம்  மாறி பயன்தரும்.
  • வௌஷட்: இது எதிர் சக்திகளை குழப்பி சாதகனிற்கு அமைவாக மாற்றும்.
  • ஹும்: இது எதிரிகள் மேல் கோபசக்தியினை உருவாக்கும்.
  • பட்: சாதகனுக்கு எதிரான சக்தியினை விரட்டும்.
 
இந்த பல்லவங்களை சரியான பீஜட்சரங்களுடன் சேர்த்து பல காரிய சாதகங்களுக்கு உபயோகிக்கலாம். (எச்சரிக்கை: இதனை குரு மாத்திரமே சாதகனுக்கு உகந்த  வகையில் எந்த பீஜாட்சரம் பலன் தரும் என்று அறிந்து உபதேசிப்பார், அல்லாமல் மனம் போனபோக்கில் நாமாக செய்து பார்த்தல் வீணான விளைவுகளை தரும்). அதனை தகுந்த குருவிடம் அறிந்து கொள்ளவும். இது மந்திரங்களின் அடிப்டையினை புரிந்து கொள்ள உதவும் ஒரு அடிப்படை தகவல் மாத்திரமே.
 
 பொதுவாக மந்திரங்கள் அனைத்தும் இப்படியான அமைப்புடனேயே காணப்படும்,
 
இந்தப்பதிவி மந்திரம் ஒன்றின் அமைப்பு எப்படி இருக்கும் என்று பார்த்தோம், அடுத்த பதிவில் ஒரு மந்திர சாதனையின் அங்கங்கள் எவை  என்பது பற்றி பார்ப்போம்.

Comments

  1. இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு