குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, June 29, 2025

பூஜை - உபாஸனை என்றால் என்ன?

 

பூஜை என்பது என்ன நாம் சிறந்த ஒருவரின் அருகில் செல்வதன் மூலம் சிறப்பினைப் பெறுவது. நாம் ஒரு அமைச்சரின் நட்பினைப் பெற்றால் அந்த நட்பின் பலனாக நாம் விரும்பியோ விரும்பாமலோ எமக்கு சில செல்வாக்கு, நன்மை அதிகாரம் வந்து சேரும். அதைப்போல நாம் ஏதாவது ஒரு பிரபஞ்ச மகாசக்தியை பூஜிப்பதன் மூலம் அந்த மகாசக்திக்கு அண்மையில் நாம் இருப்பதால் எமக்கு அறிந்தோ அறியாமலோ சில சிறப்பியல்புகள் வந்து சேரும்.

உபாசனை என்பது நாம் சிறப்பான ஒருவரின் அருகில் இருந்து பழகும் போது அவரது பண்புகளாலும், ஆற்றலாலும் நாம் உருமாறி அவரைப்போன்ற சிறப்பான குணவியல்புகளைப் பெறுதல். எப்படி தீயிற்கு அருகில் செல்லும் போது எமது உடலில் சூடு உருவாகுவதுபோல், பனிக்கட்டிக்கு அருகில் செல்லும் போது உடல் குளிச்சியடைவது போல் உயர்ந்த தெய்வசக்தியிற்கு அருகில் செல்லும் போது எம்மிக் அந்த தெய்வசக்தியின் பண்புகள் உருவாகி நாம் தெய்வ குணமுடியவர்களாக மாறுதல் உபாசனை எனப்படும்.

ஆகவே நீங்கள் எந்தத் தெய்வத்தை பூஜை செய்தாலோ, உபாசனை செய்தாலோ இந்த மாற்றம் உங்களில் வரவேண்டும். இப்படி மாற்றம் வரும் போது மனம் சுத்தியாகி ஏகாக்கிரம் அடைந்து தியான சமாதி நிலையை அடைவதன் மூலம் உண்மையான் பூஜை, உபாசனையின் இலக்கு அடையப்படுகிறது.

நாம் ஒரு இலட்சியமாக தெய்வீக சக்தியை உபாசிப்பதன் மூலம் அந்த இலட்சிய தெய்வீக சக்திகளின் பண்புகளை பெறுவதே இந்த இறைசாதனையின் நோக்கமாகும்.

காயத்ரி உபாஸனை செய்தால் காயத்ரி சித்த சாதனையில் கூறப்பட்டுள்ள பண்புகள் உங்களில் விழிப்படைந்துள்ளதா என்பதை ஆராயுங்கள், எந்தப் பண்பு விழிப்படையவில்லை என்பதை அறிந்த அதற்காக உங்களில் இருக்கும் அசுத்த நிலைப் பண்புகள் எவை என்பதைக் கண்டுபிடியுங்கள்.

காயத்ரி உபாஸனையின் பயனாக பிரபஞ்ச ஒழுங்குடன் ஒன்றி புத்தி செயற்படும் நிலை வாய்க்கிறது

மகாகணபதி உபாஸனையினூடாக புலங்கள், தத்துவங்களைக் கட்டுப்படுத்தி அன்னையின் பேராற்றலைத் தாங்கும் உடலும் மனமும் வாய்க்கிறது.

மகாலக்ஷ்மி உபாசனையினூடாக இலட்சியமுடைய செல்வம், அருள் நிறைந்த வாழ்க்கை வாய்க்கிறது. ஸாதகன் இலட்சியமுடையவனாகிறான்.

இராஜசியாமளை உபாசனையால் மனதின் எவ்வகை விருத்திகளிலும் தோயாத புத்தியோக வாழ்க்கையும், அனைத்தையும் வசப்படுத்திய வாழ்வும் அமைகிறது.

புத்தியோக வாழ்வில் வெற்றிபெற்றவனுக்கு மகாவாராஹி உபாசனை புலன் கள் அடங்கிய ஆத்ம சைதன்ய அனுபவம் கிடைக்கிறது.

இவ்வளவும் சாதித்தவனுக்கு அன்னையின் உண்மைச் ஸ்வரூபமான ஸ்ரீ லலிதையின் உபாஸ்னை கிட்டுகிறது.'

ம்ருயுஞ்ஜெய உபாஸனை ஒருவனுக்கு அம்ருதீகரண உடலையும், ஆரோக்கியத்தையும், பிராப்த கர்மத்தால் ஏற்படும் அகால மரணத்தைத் தடுத்து இறைத் தன்மையை உணரும் வாழ்வின் இலட்சியத்திற்கு தேவையான ஆயுள் ஆரோக்கியத்தைத் தருக்கிறது. எப்படி வெள்ளரிப்பழம் பழுத்தவுடன் கொடி தானாக விடுகிறதோ, அதுபோல் ஒருவன் ஞானம் பெற்றவுடன் பற்றுக்கள் தானாக அறும் என்ற ஞானத்தையும், ஆன்மீகம் என்ற போர்வையில் வாழ்க்கையின் கடமையிலிருந்து ஓடாமல் சாதிக்கும் உடல் உறுதியைத் தருகிறது.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -25

"மாவினை அகற்ற: முருக அருளால் அறியாமை மற்றும் கர்ம வினைகளை எரித்து மோக்ஷம் பெறுதல்" ********************************************** ...