மந்திர யோகம் (04): மந்திரத்தின் பண்பு


சென்ற பதிவில் மந்திரம் ஒன்றின் அமைப்பு எப்படி இருக்கும் என்று பாத்தோம், இந்தப்பதிவில் மந்திரம் ஒன்றின் பண்பு எப்படி இருக்கும் என்று பார்ப்போம். மந்திரத்திற்கு ஏழு பண்புகள் இருக்கும். அவையாவன் ரிஷி, சந்தஸ், தேவதை, பீஜம், சக்தி, கீலகம், நியாசம் என்பன. இந்த ஏழைப்பற்றிய தத்துவார்த்த விளக்கம் பற்றி கீழே பார்ப்போம்.

  1. ரிஷி: பிரம்மம் என்ற பேரொளியின் அதிர்வுகளில் இருந்தே இந்த பிரபஞ்சம் தோற்றம் பெறுகிறது, ஒவ்வொரு பொருளிற்கும், எண்ணத்திற்கும் பிரபஞ்ச சக்தியின் குறித்த அதிர்வு காணப்படும். அந்த சக்தி அதிர்வினை தமது தியான சக்திமூலம் உணரக்கூடியவர்களையே பழங்காலத்தில் ரிஷிகள் எனப்பட்டனர். அவர்கள் பிரபஞ்சிலுள்ள தெய்வ சக்தியினை முதலில் உணர்வின் மூலம் அறிந்து பின்னர் சப்தத்திற்கு மாற்றி மந்திரங்களை அமைத்தனர். உதாரணமாக வானொலியினை எடுத்துக்கொண்டால் ஒலிபரப்பு நிலையத்திலிருந்து சப்த அலைகள் மின்காந்த அலைகளாக வானப்பரப்பில் பரப்பப்படும், இந்த அலைகள் தகுந்த வாங்கிகள் மூலம் வானொலியினை மட்டிசைப்பதன் (Synchronizing)  மூலம் வானத்தில் உள்ள மின்காந்த அலைகள் மீண்டும்  சப்த அலைகளாக மாற்றப்படும், இதைப்போல் பிரம்மம் என்ற பேரொளி தெய்வசக்திகளை பிரபஞ்ச்சத்தில் பரப்பிய வண்ணம் உள்ளன, அவற்றை மனம், உடல் கொண்டு தியானம் மூலம் ஈர்த்து ஒலிவடிவத்திற்கு மாற்றும் செயன்முறையினை முதன்முதலாக செய்தவகளே அந்த மந்திரத்தின் ரிஷிகள் எனப்பட்டனர். அதாவது குறித்த தெய்வ சக்தி செயற்படும் அதிர்வெண்ணை முதலில் கண்டு பிடித்தவர்களே ரிஷிகள். இவர்கள் மந்திர உபாசனையில் முதலில் நினைக்கப்படவேண்டியவர்களாக பாரம்பரியமாக கொள்ளப்பட்டு வருகிறது. ஏனெனில் பூவுலகில் அவர்களூடாகவே அந்த மந்திரம் செயற்படும் படி பிரபஞ்ச மனதில் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. ஆகவே மந்திர உபாசனையில் அந்த மந்திரத்தினை கண்ணறிந்த ரிஷியினை முதலில் நினைப்பது கட்டாயம். இதனால் தான் ரிஷிகளை மந்திர திருஷ்டா என அழைப்பவர், அதாவது மந்திரத்தினை பிரபஞ்சத்தில் இருந்து கண்டறிந்தவர்கள் என்று பொருள். 
  2. சந்தஸ்: எங்களுக்கு வானொலியில் குறித்த அலைவரிசையில் குறித்த வானொலி நிலையம் இயங்கும் என்பாத்து தெரியும், ஆனால் அதனை அடைவதற்கு மீற்றரினை (frequency) எத்தனையில் வைக்கவேண்டும் என்ற ஒழுங்கு இருக்கிறது, இதுவே சந்தஸ் எனப்படும். இது பொதுவாக ஏழு வகைப்படும் காயத்ரி, உஷ்ணிக், அனுஷ்டுப், ப்ருகதி, பங்க்தி, திருஷ்டுப், ஜகதி ஆகியவை, இந்த அலைவரிசைகள் ஒரு மந்திரத்தினை எப்படி உச்சரிக்க வேண்டும் என்ற முறையினை கூறும், இந்த ஏழு சந்தஸ்களும் சூரியனின் ஏழு குதிரைகளாக உருவகப் படுத்தப்படுகிறது. சூரியன் மூலமே பூவுலகிற்கு எல்லா தெய்வ சக்திகளும் வருகின்றது என்பதினால் சூரியனே மந்திர சக்திகளின் அதிர்வு உருவாக்கப்படுகிறது.
  3. தேவதா: இது குறித்த தெய்வ சக்தி, அதாவது எந்த தெய்வ சக்தி என்பதினை குறிக்கும், காயத்ரி, கணபதி, துர்கா,ம்ருத்யுஞ் ஜெய இப்படி அந்த மந்திரத்தின் மூலம் கவர வேண்டிய தெய்வ சக்தியினை தேவதை குறிப்பிடும். 
  4. பீஜம் (seed): ஒரு மரத்தில் அதன் மூலம் அதன் விதையில் இருப்பது போல் குறித்த தெய்வ சக்தியின் மூல சக்தி அந்த மந்திரத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும். இந்த ஒலியே குர்த்த தெய்வ சக்தியினை சூஷ்மமாக பஞ்ச பூதங்க்களினூடாக செயற்படுத்தும் இந்த ஒலியிருந்தால்தான் மந்திரம் சக்தி பெறும். 
  5. சக்தி (Power): விதையிருந்தாலும் அதற்கு நீர் ஊற்றி, சூரிய ஒளி இருந்தால்தான் வளரும் என்பது போல் பீஜ மந்திரத்தினை வளப்படுத்த சக்தி அவசியம் இந்த சொல் சக்தி எனப்படும். 
  6. கீலகம் (Axle): இதற்கு முன்னர் கூறப்பட ரிஷி, சந்தஸ், தேவதா, பீஜம், சக்தி என்பன புறப்பிரபஞ்சத்தில் உள்ள சக்திகளை குறிப்பவை, இவற்றை குறித்த மந்திரத்தின் மூலம் எமது சுஷ்ம உடலாகிய அகப்பிரபஞ்சத்தில் விழிப்படைய வைப்பதே மந்திர சாதனையின் நோக்கம், இதனை செய்வதற்கு ஒரு அச்சு தேவை, வானொலி உதாரணத்தினை எடுத்துக்கொண்டால் வானொலிப்பெட்டி என்பது மனம் முதலிய மனதினில் சூஷ்ம உடலாகும். அதனையும் சப்த அலைகளையும் இணைக்கும் வானொலியின் ஆண்டெனாவே மந்திரத்தில் கீலகம் என்ற பகுதியாகும். இது பிரபஞ்ச தெய்வசக்தியினையும் மந்தித சுஷ்மா உடலினையும் இணைக்கும் பகுதியாகும். இதன் மூலம் மந்திர சக்தி உடலில் ஒருங்கிணைக்கப்படும். 
  7. நியாசம்: மேற்கூறிய ஆறு பகுதிகளையும் உடலில் சரியான பகுதியில் இருத்தும் செய்முறை நியாசம் எனப்படும். இது கிட்டத்தட்ட வானொலிப்பெட்டியினை உள்ளே சீரமப்பதினை ஒத்தது, மேற்கூறிய ஆறுபகுதிகளை ஏற்பதற்குரிய உடலின் பகுதிகளை ஒழுங்கு படுத்தும் செயன்முறைதான் நியாசம் எனப்படும். மனித உடலின் முக்கியமான தெய்வ சக்தியினை ஏற்கும் கேந்திரங்கள் இரண்டு உள்ளன, முதலாவது கைகளில் உள்ள ஐந்து விரல்களும் உள்ளங்கைகளும்  , இரண்டாவது இருதயம், உச்சந்தலை, தலை முடி கட்டும்  இடம் (வைணவ பிராமணர்கள் மழித்து விட்டு சிகை முடியும் இடம்), தோள்கள் இரண்டும், மூன்று கண்களும், இருக்கைகளை தட்டும் ஓசை. 

முதலாவது கர நியாசம் எனப்படும் 

இரண்டாவது அங்க நியாசம் எனப்படும். 

மேற்கூறிய ஆறு இடங்களிலும் மனிதரின் தேவைக்கு ஏற்ப குறித்த தெய்வ சக்தி சில சொற்களின் மூலம்  வெவ்வேறு  விதமாக விழிப்பிக்கப்படும். 

அடுத்த பகுதியில் ஒரு மந்திர உதாரணத்தின் மூலம் இவற்றை மேலும் விளங்கி கொள்வோம். 

Comments

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு