குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, July 04, 2018

சிலைத்திருட்டும் கடவுள் கூறும் ஞானமும்

அண்மையில் ஒரு நண்பர் தமிழ் நாட்டில் கோயிலில் உள்ள சிலைகள் எல்லாம் திருடப்பட்டு போலிச் சிலைகளை வைத்திருக்கிறார்கள், இவர்களை எல்லாம் கடவுள் தண்டிக்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டார். 

மேலும் கடவுள் இப்படியானவர்களை எல்லாம் ஏன் வைத்திருக்கிறார் என என்னிடம் கேள்வியும் தொடுத்தார். 

அதற்கு நானும் வெகு சிரத்தையுடன் "இந்த திருட்டையெல்லால் செய்விப்பதே, கடவுள்தான் பின்னர் எப்படி அவர்களையெல்லாம் தண்டிப்பார்"? என்றேன். 

உடனே அந்த நபரிற்கு தூக்கி வாரிப்போட்டதுபோல் முகபாவனையுடன் "ஆன்மீகவாதியான நீங்கள் இப்படிச் சொல்லலாமா? என்றார். 

நானும் பிரம்ம சூத்திரம் என்ன சொல்லுகிறது என்றேன், அவருக்கு பிரம்ம சூத்திரம் என்னவென்பது தெரியவில்லை.  அதற்கு சரி " சர்வம் கலு இதம் பிரம்மம் - இங்கே எல்லாமே பிரம்மம்" , பிரம்மம் என்றால் உங்கள் புரிதலுக்கு கடவுள் என்று வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு, பார்த்தீர்களா இங்கே எல்லாம் பிரம்மம் என்றால் திருட்டை செய்பவனும் பிரம்மத்தின் கூறுதானே என்றேன். 

அதற்கு நீங்கள் வெறும் தத்துவம் பேசுகிறீர்கள் என்றார், 

நானும் விடவில்லை தத்துவம் என்பது உண்மையைக்கூறுவது, தத்துவம் சொல்லுவது பொய்யாகாது, ஆகவே திருட்டை செய்வது கடவுள் என மேலும் குழப்பினேன். 

அவருக்கோ குழப்பம் மேலிட அப்படியானால் திருட்டை செய்வது சரியா என்றார்? 

அதற்கு நான் இல்லை, பிழை கட்டாயம் தண்டனை கிடைக்கும் என்றேன். 

இதற்கு அவர் மேலும் குழம்பி நீங்கள் என்னை குழப்புகிறீர்கள் என்றார். 

நானும் குழப்பம்தான் தெளிவுக்கு வழி, ஆகவே குழம்பித்தான் தெளியவேண்டும் என்றேன். 

அதற்கு அவர் இந்தக்குழப்பத்தை என்னால் தாங்கமுடியாது, நீங்கள் கூறவருவதை தெளிவாக கூறிவிடுங்கள் என்றார். 

அதற்கு நான் திருமூலர் இறைவன் எங்கு இருக்கிறார், கோவில் எங்கு இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்? 

அவர்,
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே‘

என்று கூறியுள்ளார் என்றார், 

சரி, இப்போது நாம் என்ன செய்கிறோம்? கோயிலிற்கு போவது எதற்காக? கோயில் கட்டுவது எதற்காக? 

கோயில் போவது எமது குறைகளை சொல்லி அழ,
செய்த பாவங்களில் இருந்து தப்ப,
தனது செல்வச் செருக்கை காட்ட, 
ஒருவித மனப்பயத்தில்,

கோயில் கட்டுவது ஏன்? 
தனது பெயரை சரித்திரத்தில் புகழ் நிலை நாட்ட,
தானக்கும் சந்ததிக்கும் புண்ணியம் கிடைக்க, 
கோயில் கட்டினால் உபரி வருமானத்தை கணக்கு காட்டலாம், 

இப்படிச் சொல்ல அப்படியானால் எமது முன்னோர்கள் எல்லாம் முட்டாள்களா ஆகமங்கள், சாஸ்திரங்கள் இயற்றி கோயில் கட்டிவைத்துள்ளார்கள், இவை எல்லாம் பொய்யா? 

அதற்கு நாம், உண்மை எமக்குள் இருக்கின்றது அதை அறிய கஷ்டமானவர்களுக்கு ஒரு மாதிரியுரு (model) தேவையல்லாவா, அதற்காக கட்டப்பட்டதுதான் கோவில், அதாவது இயல்பின் மனிதன் ஐந்து புலன் கள் வழி செல்பவன். அவனை அவன் செல்லும் வழியில் உண்மையை அறியவைத்து, பின்னர் உள்ளே உண்மையை அறியும் உத்திக்காக செய்யப்பட்டவையே கோயில்கள் என்றோம். 

அப்படியானால் நாம் கோயிலிற்கு செல்வதால் ஒருபலனும் இல்லையா என்றார்? ஏன் இல்லை நிச்சயமாக உண்டு ஆகமவிதிப்படி கட்டப்பட்ட கோயிலை சென்று தரிசித்து அந்தக்கோயிலின் அமைப்பை ஆழ்மனதில் பதிப்பித்து வாருங்கள், அவை ஆழ்மனத்தில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் ஆற்றலுள்ள குறியீட்டு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. அல்லாமல் கோவிலில் சென்று வீணா உங்கள் புலம்பல்களை கொட்டாதீர்கள். 

மேலும் கோவில்களின் அமைப்பு மனப்பிராண சக்திகளை அதிகரிக்கும் வல்லமை உள்ளன. அங்கு சென்று உங்கள் குறைகளை கொட்டினால் அவை உங்களுக்கும் அதிகரித்து, சமூகத்திலும் அதிகரிக்கும். அதுவே இப்போது நடைபெறுகிறது. திருடுவதற்கும், ஏமாற்றுவதற்கும், கடவுளிடம் சென்று வேண்டி கோயிலில் உள்ள ஆற்றலிடம் சேர்த்து இன்று திருட்டும் கொள்ளையையும் அதிகரித்துள்ளோம். இறை என்பது ஒரு சக்தி, அதற்கு நல்லதும் கெட்டதும் ஒன்றுதான். இதனால்தால் புராணங்களில் கடவுளே அசுரனுக்கும் வரத்தை தருகீறார், தேவரையும் காப்பாற்றுகிறார். 

ஆகவே எமது எண்ணங்களும், மனமும்தான் கோயிலின் சக்தியால் அதிகரிக்கப்படுகிறது. 

அவரும் ஆமோதித்து தலை ஆட்டிவிட்டு நீங்கள் முதலில் கூறிய "இந்த திருட்டையெல்லால் செய்விப்பதே, கடவுள்தான் பின்னர் எப்படி அவர்களையெல்லாம் தண்டிப்பார்" என்பதற்கு விளக்கம் சொல்லவில்லையே என்றார் விடாக்கண்டனாக!

 நானும் சிரித்துக்கொண்டு "ஒவ்வொரு காலத்திலும் சமூகம் உண்மையை மறந்து அறியாமையில் மூழ்கி துன்பம் உறும்போது இறைசக்தி உண்மையை அறியும் தூண்டலை ஏற்படுத்தும், கடந்த ஆயிரம் ஆண்டுகளில் எமது முன்னோர்கள் சமூகத்திற்கு ஞானத்தை வழங்க, சமூக செழிக்க ஏற்படுத்தப்பட்ட கோயில்கள் முற்காலத்தில் அரசரின் அதிகாரப்பசிக்கும், புகழ்வேட்கைக்கும் சிக்கி நாசமாகி, இன்றும் அதே நிலைதான். ஆக மக்கள் தமக்குள் இறைவனைக் கண்டு நல்ல பண்புகளை ஏற்படுத்தி, நல்லதொரு சமூகத்தை உருவாக்க தான் கோயிலில் இல்லை, உனக்குள் இருக்கிறேன் எனக் காட்ட இந்த திருட்டுகளை நடாத்துகிறார்" என்றேன். 

அதற்கு அவர் மேலும் ஆதங்கத்தோடு "இதைச் செய்பவர்களுக்கு தண்டனை கட்டாயம் இருக்கும்தானே? என்றார், 

அதற்கு நானும் சிரித்துக்கொண்டு "ஒவ்வொரு செயலுக்கும் கட்டாயம் விளைவு உண்டு, அந்த விளைவை தடுக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை, ஆக இந்த செயலை செய்பவர்கள் அதற்குரிய விளைவை கட்டாயம் பெறுவார்கள்" 

நான் கூறவந்த கருத்தின் விளக்கம், உண்மையில் மனிதர்களின் சமூகத்தின் மனத்தில் அறம் குன்றி, எதற்காக நாம் கோயிலிற்கு செல்கிறோம், பூஜை செய்கிறோம், திருவிழா எடுக்கிறோம் என்ற உண்மையெல்லாம் அறியாமையின் விளைவாக மறந்து, தன் புகழிற்கும், பணத்திற்கும், அதிகாரத்திற்கும் என மாறியபொழுது கோயில் திருட்டுக்கூடமாகி விட்டது, ஆகவே கடவுள் எம் உள்ளே இருக்கிறார், அந்தக்கடவுளை எம்முள் உணர எமது குணம் தெய்வ குணமாக இருக்க வேண்டும், தெய்வ குணம் எம்முள் வளர்ந்தால் கோயிலில் தெய்வ சக்தி வளரும் என்று மேலும் விளக்கி விட்டு உரையாடலை முடித்துக்கொண்டோம். 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...