பஞ்ச கோசம் என்பது மனிதனில் உள்ள ஐந்து உடல்களா?

இன்று யோகம் கற்பிக்கும் பலரும் பஞ்ச கோசம் என்பது மனிதனை சுற்றி உள்ள நுண்மையான ஐந்து உடல்கள் என்றும் பலவாறு கூறி வருகிறார்கள். முதலில் கோசம் என்பதற்கு உடல் என்பது பொருள் இல்லை. 

இரண்டாவது கோசம் என்றால் உறை என்று பொருள் கூறிவருவது ஓரளவு சரியானது. ஆனால் அது யோகத்தில் ஏன் அவற்றை கோசம் என கூறுகிறோம் என்பதற்கு சரியான விளக்கம் இல்லை. 

கோசம் என்றால் பொக்கிஷம் அல்லது புதையல் என்று பொருள். மனிதனில் இருக்கும் பிராண சக்தி புதைந்து கிடக்கும் இடம்தான் பஞ்ச கோசங்கள்.

மனிதனது தேவை போக மிகுதியாக உள்ள பிராணன் உடலில் சேர்ந்தால் அது அன்னமய கோசம் .

பிராணனில் சேர்ந்தால் பிராணமய கோசம்

புத்தியில் சேர்ந்தால் விஞ்ஞான மய கோசம்

மனதில் சேர்ந்தால் மனோமயகோசம்

ஆத்மாவில் சேர்ந்தால் ஆனந்தமய கோசம்

இது ஒருமனிதன் எவ்வளவு பிராணனை, எங்கு சேர்க்கிறான் என்பதை குறிக்கும் யோகமொழி.

இது சாதாரண மனிதனிற்கு இயற்கை நிர்ணயித்த வாறும், ஆன்ம மன பரிணாமங்களுக்கு ஏற்றவாறு அவனது கோச நிலை இருக்கும். அதனை யோக, தந்திர  சாதனைகள் மூலம் அதிகரித்துக்கொள்ள முடியும். 

Comments

 1. அருமையான விளக்கங்கள் ஐயா.

  சில சந்தேகங்கள்.

  1. பலரும் அதை 5 உடல்கள் என்றே சொல்கிறார்கள். அன்னமய உடல் தான் கண்ணிற்கு தெரியும். மற்றது astral உடல்கள், தியானம் கைகூட கூட தெரியும் என்று .

  2. ஒரு மனிதனுக்குள் மூன்று குணங்களும் (சாத்விகம், தாமசம், ரஜோ) உண்டு அல்லவா. மனிதன் எக்குணத்தில் அதிகம் இருக்கிறான் (domination) என்பதை கோசங்கள் காட்டுமா ஐயா?

  ReplyDelete
 2. மேலும் இரண்டாவது கோசமான பிராணன் பற்றி ஒரு சந்தேகம் ஐயா.

  மிகுதியாக பிராணன் எவ்வாறு பிராணனில் போய் சேரும் ஐயா? அதுவே மிகுதியாகத் தானே உள்ளது?

  ReplyDelete
 3. வருகைக்கு நன்றி.

  1. எல்லாமே சூக்ஷ்மமானது, உடலில் நோய் இல்லை என்றால் அன்னமயகோசம் நன்றாக இருக்கிறது, பிராண சேமிப்பு இருக்கிறது என்று கூறலாம், பொதுவாக விளங்கி கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியினை எடுத்துக்கொள்ளலாம். இதுபோல் ஒவ்வொரு கோசத்தின் இயல்பைக்கொண்டு அறிந்துகொள்ளலாம்.

  2. குணங்கள் என்பது கோசத்தில் சேரும் பிராணனின் அளவினை குறிக்கும். சாத்விகம் இருந்தால் மட்டுமே கோசம் விருத்தியாகும், இராஜசம் இருந்தால் இயங்கு நிலையில் இருக்கும், அதேவேளை சேமிப்பை குறைக்கிறது. தாமசம் என்பது இராஜசத்தால் இழந்த நிலை அல்லது சேமிப்பு இருந்தும் இயக்கம் இல்லாத நிலையை குறைக்கும்.

  3. பிராணன் என்பது எப்போதும் இயங்கு நிலையில் இருப்பது, இந்த இயக்கம் இல்லாமல் சேமிப்பாகும் நிலையே பிராணமய கோசம், மேலும் இந்த ஐந்து கோசங்களும் ஒவ்வொரு சக்கரங்களே நிலைஸ்தானங்கள். இதுபற்றி நேரம் கிடைக்கும்போது விளக்குவோம்.

  ReplyDelete
 4. அய்யா,
  அருமையான விளக்கம்.

  சேர்மைராஜ் அவர்களின் கேள்வியும் தங்களின் விளக்கமும் வெகு அருமை அய்யா.
  நன்றிகள் பல
  வி.ரவீந்திரன்.

  ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு