காகபுஜண்ட மகரிஷியிற்கு ஜீவ சமாதி உண்டா?

இன்று பலரும் ஜீவ சமாதி செல்கிறோம் என்றும், பரிகாரம் என்றும் சொல்லி வருகிறார்கள்.  சித்தர்கள் சமாதி அடையும் நிலைகள் பல உள்ளன. காகபுஜண்டர், அகத்தியரை மகரிஷிகள் என்றே அழைக்கிறோம். மகரிஷிகள் என்று அழைக்கப்படுபவர்கள் உடலிருந்து ஆன்மாவினை ஒளிநிலைப்படுத்தி  மகாகாரண பஞ்சாட்சரம் என்ற "சி" கார தத்துவத்தினை அடைந்தவர்கள். இவர்கள் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து இருப்பவர்கள். பிரபஞ்சத்தின் எந்த மூலையில் இருப்பவரும் தனது உணர்வால் - மனதால் அல்ல! தொடர்பு கொள்ளக்கூடியவர்கள். உணர்வு ஜாக்ர, ஸ்வப்ன, சுழுத்தி எனும் சாதாரண நிலையில் இருக்கும்போது இவர்களின் உண்மை தொடர்பு கிடைப்பதில்லை. உணர்வு துரியத்தை அடையும்போது மட்டுமே அவர்கள் தொடர்பு கிடைக்கின்றது. 

மேலும் காகபுஜண்டர் காகமாக இருக்கிறார்கள் என்று காகத்திற்கு சோறு வைத்தால் அது ஜீவகாரண்யமே அன்றி யோக சாதனை ஆகாது. காகம் என்பது பஞ்ச பட்சிகளில் ஒன்று, பஞ்ச பட்சி என்பது பஞ்ச பூதம், 
  • நிலம் - வல்லூறு
  • நீர் - ஆந்தை, 
  • நெருப்பு - காகம், 
  • காற்று - கோழி, 
  • ஆகாயம் - மயில். 

பஞ்ச பூதம்
வித்தெழுத்து
ஆதார தளம்
ஐந்து பூத கலப்பு உறை நிலை
ஓம்
மூலாதாரம்
நிலம் – ப்ருதிவி `
சுவாதிஷ்டானம்
நீர் – அப்பு
மணிப்பூரகம்
தீ – அக்னி
சி
அனாகதம்
வாயு
விசுத்தி
ஆகாயம்
புருவமத்தி – ஆக்ஞா
பஞ்ச பூத ஒடுக்க நிலை
ஓம்
சஹஸ்ராரம்

இனி பஞ்சாட்சரத்தின் தத்துவ ஒடுக்கம் பார்ப்போம் 
  • ந-ம-சி-வ-ய = ஸ்தூல பஞ்சாக்ஷரம். 
  • சி-வ-ய-ந-ம = சூக்ஷ்ம பஞ்சாக்ஷரம். 
  • சி-வ-ய-வ-சி = அதி சூக்ஷ்ம பஞ்சாக்ஷரம். 
  • சி-வ = காரண பஞ்சாக்ஷரம் எனப்படும்.
  • சி = மகா காரண பஞ்சாக்ஷரம்
காகம் என்பது அக்னி தத்துவம், அத்தத்துவத்தில் தன்னை ஒடுக்கியவர் மகாகாரண சரீரம் அடைந்தவர், இதனையே தனது பெருநூல் காவியத்தில்

கர்த்தனை போல் நான்இருந்து வாழுவேனே
வாழுவேன் திரிலோகம் தெரிந்து கொண்டேன்
மாளாமல் நின்றிடுவேன் திரிலோகத்தும்
காகபுசுண்டர் பெருநூல் காவியம். பாடல் 236..& 237

காகமாய் மரத்தின்மேல் நிற்பேணப்பா
கவலையாய் நீ இருந்தால நா னுள் நிற்பேன்.
காகபுசுண்டர் பெருநூல் காவியம். பாடல் 239

மேலே குறிப்பிட்ட வரியில் காகம் எனபது அக்னி தத்துவம் மரம் என்பது உடல், ஆக எமது உடலில் உள்ள அக்னி தத்துவத்தின் மூலம் எமது உணர்வால் தொடர்பு கொள்ளக்கூடிய மகரிஷிதான் காகபுஜண்டர். அதாவது அண்டத்தில் மகாகாரண சரீரம் என்ற சிகார தத்துவமாய் சிவனாய் நிற்பவரும், பிண்டத்தில் அக்னிதத்துவமாய் இருந்து வழிகாட்டக்கூடியவரே காகபுஜண்ட மகரிஷி!  

Comments

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு