சித்த வித்யா என்றால் என்ன?

“சித்த வித்யா” என்றால் என்ன?  பொதுவாக சித்தம் என்பது ஆழ்மனம் என்று தற்கால விஞ்ஞானம் குறிப்பிடும் மனதின் பகுதியினை தெய்வ ஞானத்துடன் ஒடுக்கி பிரபஞ்ச ஞானத்தினை பெறும் முறையாகும். தாரணையால் எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ,தியான சாதனையினால் உணர்வை அறிய வேண்டிய பொருளுடன் ஒடுக்கும்போது உணர்வு அறியப்படும் பொருளாய் மாறி நிற்கும், பின்னர் அப்பொருள் பற்றிய அறிவு சித்தத்தில் பதியும். இதனை மேல்மனத்திற்கு கொண்டுவந்து மொழியில் விளங்கப்படுத்தினால் அந்த அறிவு சித்த வித்யா எனப்படும். இது குருமுகமாய் தியான சாதனையின் பலனாய் வரும் ஒரு சித்தியாகும். 

இதற்காகவேண்டியே அக்காலத்தில் மனதை சப்த ஒலிகளால் ஒழுங்குபடுத்தத் ஒலியமைப்பு கோர்வையாக இசைக்கும் வண்ணம் யாப்பு இலக்கணம் எனப்படும் பாடல் வரைமுறை அமைக்கப்பட்டது. இப்படி பாடலை பாராயணம் செய்யும்போது மனம் படிப்படியாக தாரணை நிலையினை அடையும். தாரணை நிலையடைந்த மனம் எதுவித முயற்சியும் இன்றி தியான நிலையினை அடையும். இந்த யோக இரகசியத்தின் அடிப்படையிலேயே சித்தர் பாடல்கள் பொருள் காணப்படவேண்டியவை. இந்த நிலையில் அறியப்படும் விளக்கம் அந்தப்பாடலை பாடிய ஆசிரியர் எந்த நிலையில் இருந்து பாடினாரோ அந்த நிலையில் விளங்கி கொள்ள முடியும். அல்லாமல் அகராதியின் துணையினை மட்டும் கொண்டு பொருள் காண முற்படும்போது மயக்கங்களையும், மறைப்புகளையும் வேண்டுமென்றே சித்தர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அதேவேளை இந்த ஞானம் பாமரனுக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காக எளிய பேச்சு மொழியில் பாடல்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

ஸ்ரீ வித்தை, காயத்ரி சாதனை மூலம் சித்த வித்யா என்ற சித்தியினை அடையமுடியும். இதனையே லலிதா சகஸ்ரநாமம் ஸித்தேஸ்வரி ஸித்த வித்யா ஸித்த மாதா" என்று குறிப்பிடுகிறது.  இந்த ஆற்றலால் பல்வேறு நன்மைகளும் உண்டும் 

Comments

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு