குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, May 03, 2015

ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்
இன்று சித்ரா பௌர்ணமி நன்னாளில் ஆர்வமுள்ள சாதகர்களுக்கு காயத்ரி உபாசனை சாதனை பாடங்களை கற்பிப்பதற்கு குருமண்டலத்தின்  உத்தரவு கிடைத்துள்ளது.

இதனை நடைமுறைப்படுத்துவதில் ஆளணி பற்றாக்குறை (நாம் தனியொருவராகவே இவை அனைத்தையும் செய்ய வேண்டி) இருப்பதால் முதலில் பதிவு செய்யும் 50 அன்பர்கள் மட்டுமே இந்த 2015 ஆண்டில் சேர்த்துக்கொள்ளப்படுவர். அதன் பின்னர் இதில் கற்கும் மாணவர்களது நேர பங்களிப்புடன் பலரை இணைத்துக்கொள்ளப்படும்.  

இதன்படி ஆர்வமும், சிரத்தையும், குருபக்தியும் உள்ள எவரும் இதனை கற்றுக்கொள்ள முடியும். உங்கள் மனத்தடையை தவிர வேறு எந்த தடைகளும் இல்லை! 

இந்த பாடங்கள் ரிஷி பரம்பரையினரின் பிரம்ம ஞான உபதேசங்கள் எளிய முறையில் அனுபவ பயிற்சிகளாகவும், எளிமையான மொழியில் விளக்கங்களாகவும் தரப்படும். 

இதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் முதலாவதாக கீழ்வரும் விண்ணப்ப படிவத்தினை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவம்

இது தொடர்பான அனைத்து கேள்விகள், தொடர்புகள்  கீழ்வரும் மின்னஞ்சலில் மாத்திரம் தொடர்பு கொள்ளவும்: sumanangs@gmail.com 

இதன்பின்னர் எமது உதவி குழுவிடமிருந்து உங்களுக்கு வசதியான ஒரே நேரத்தில் ஸ்கிப்பினூடாக  பதினைந்து நிமிட நேர்முக உரையாடல்  நடைபெறும். 

இதன்போது கற்கை நிபந்தனைகளுக்கு உறுதி அளித்தால். குருநாதர் அனுமதியின் பின்னர்  முதலாவது பாடமும் வினாத்தாளும் மின்னஞ்சல் உடாக அனுப்பப்படும்.  இதற்கு வாரம் ஒரு நாள் குறித்த நேரம் ஒதுக்கி படித்து விளங்கி கொண்டு பின்னர் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையினை டைப் செய்து திருத்தத்திற்கு எமக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

உங்களது விடைகள் திருப்தியாக இருந்தால் உங்களுக்கு அடுத்த பாடம் அனுப்பி வைக்கப்படும். 

இந்த முறையில்  மொத்தம் எண்பது பாடங்கள் மூலம் நீங்கள் காயத்ரி உபாசனையின் அடிப்படைகளை விளங்கி கொள்வீர்கள். 

இந்த பாடத்திட்டத்தில் நீங்கள் எவற்றை எல்லாம் கற்று கொள்வீர்கள் என்பதற்கான பாடத்திட்டம் கீழ்வருமாறு; 

பகுதி ஒன்று: காயத்ரி உபாசனை மாணவர் 

குருபரம்பரை வரலாறு, குரு வணக்க முறை, குரு சாதனை 

ஐயமும் தெளிவும், காயத்ரியும் பிராணனும், காயத்ரி சாதனைக்குரிய ஏற்பாடுகள், காயத்ரி பிராண ஆகர்ஷண சாதனை ,காயத்ரி மந்திர அடிப்படை சாதனை,  பாவனை மூலம் தெய்வ சக்தியை சூக்ஷ்ம உடலில் ஏற்கும் பயிற்சி, காயத்ரி பிராண வளர்ச்சி சாதனை, காயத்ரி அடிப்படை பிரணாயாமம், காயத்ரி கும்பக பிரணாயாம சாதனை, காயத்ரியும் முக்குண வளர்ச்சியும், மந்திர இரகசியம்,  காயத்ரியும் பிரபஞ்ச சூக்ஷ்ம சக்திகளும், காயத்ரியும் உடலின் சூக்ஷ்ம கிரந்திகளும்,  எமது துன்பங்களுக்கான காரணம்,  பிரபஞ்ச ஞானத்தை பெறுவதற்கான இரகசிய வழி,  காயத்ரியும் உடல் மனச்சுத்தியும், காயத்ரியும் பாவ விமோசனமும், காயத்ரி உபாசனையின் நியமங்கள், காயத்ரி உபாசனையின் முக்கிய அங்கங்கள், 

பகுதி ஒன்றினை ஒழுங்காக கற்று அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தவர்கள் முறையான காயத்ரி உபாசனை பத்ததி கற்பிக்கப்பட்டு உபாசனைக்குரிய வழிமுறைகள் கற்பிக்கப்படும். இந்த உபாசனையினை தினசரியோ, வாரம் ஒருமுறையோ செய்தவண்ணம் பகுதி இரண்டு கற்கையினை ஆரம்பிக்க வேண்டும், 

பகுதி இரண்டு: காயத்ரி உபாசகர் 
பகுதி இரண்டில் கீழ்வரும் விடயதானங்கள் கற்பிக்கப்படும்.  

உபாசனையின் அங்கங்களான பிராண பிரதிஷ்டை, தீக்ஷை, ரிஷி, அங்க, ஷடங்க  நியாச முறைகளும் அவற்றின் விஞ்ஞான விளக்கங்களும், ஆசமனம், உபாசனையில் தெய்வ சக்தியை ஈர்க்கும் பிரணாயாம முறைகள், ஆவாகனாதி தூப, தீப உபசார முறைகளும் அவற்றிற்கான விளக்கங்கள். அர்ச்சனை, மந்திர ஜபம், மானச ஜெப முறைகள், க்ஷமாபானம், 

பகுதி இரண்டு கற்றல் முடியும்போது நீங்கள் பிரபஞ்ச ஞான சக்தியை உபாசிக்கும் காயத்ரி உபாசகர் என்ற நிலையினை பெறுவீர்கள். இந்த கற்கை மூலம் தெய்வ உபாசனை என்பது வெறுமனே ஒரு கண்மூடித்தனமான ஒரு நம்பிக்கை இல்லை என்பதயும் எமது முயற்சியாலும் இதற்கு முன்னர் இந்த முயற்சியில் வெற்றி பெற்று சூக்ஷ்ம நிலையில் உள்ள  குருமண்டலத்தின் உதவியாலும் பெறப்படும் ஒரு பேறு என்பதனை நன்கு விளங்கி கொள்வீர்கள்.  
மூன்றாவது காயத்ரி உபாசனை தத்துவ விளக்கம் 

இந்த பகுதியில் காயத்ரி ஸ்ம்ருதி, காயத்ரி உபநிஷதம், காயத்ரி இராமாயணம், காயத்ரியிற்கான மகரிஷிகளது பாஷ்யம் என்பன விளங்கப்படுத்த படும். இதன் மூலம் காயத்ரி பற்றி மகரிஷிகள் என்ன இரகசியங்களை கூறியிருக்கிறார்கள் என்பதனை விளங்கி கொள்ள முடியும். 


நான்காவது யாக விஞ்ஞானம் 

காயத்ரியும் யஞமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவை. ஆகவே காயத்ரி சாதகன் கட்டாயம் அக்னியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதனை தெரிந்திருக்க வேண்டும். இந்த பகுதியில் யாக விஞ்ஞானம், யக்ஞ சிகிச்சை,  யாக தத்துவம், சாஸ்திரங்கள் கூறும் வேள்வியின் மகிமை, யாக சாதநியினால பெறக்கூடிய நன்மைகள், வேள்வியும் பாபநாசமும், வேள்வியும் விஞ்ஞானமும், யாகமும் குணமாற்றமும், ரோக நிவாரண ஹோமத்திரவியங்கள், சப்த பரிணாமங்கள், யாக பூமி நிர்ணயம், சுபதின நிர்ணயம், ஜபமாலா இலக்கணம், யாக விதானம், தினசரி காயத்ரி ஹோமம், இல்லற வேள்வி. 

ஐந்தாவது காயத்ரி லகு அனுஷ்டான சாதனை 

மேலே கூறிய நான்கு நிலைகளிலும் காயத்ரி பற்றிய உண்மைகளை கற்ற உங்களுக்கு காயத்ரி மந்திரத்தின் மூலம் குறைந்த காலத்தில்  உங்கள் உடல், மன, பிராண சக்திகளை அதிகரித்து எப்படி சக்தி பெறுவது எனும் வழியினை சொல்லித்தரும். 

இப்படி காயத்ரி லகு அனுஷ்டானம் செய்பவர்கள் படிப்படியாக குருமண்டலத்தின் ஈர்ப்பினை பெற்று மிக உயர்ந்த சாதனைகளுக்கு தயாராவார்கள். 

இவற்றை எல்லாம் வாசித்து விட்டு பிரமித்து நாம் குடும்பஸ்தர்கள், மாணவர்கள், தொழில் செய்பவர்கள், நேரம் இல்லை என உங்களுக்கு நீங்களே தடைகளை  ஏற்படுத்தி கொண்டு விலகி விடாமல் இப்படியான விடயத்தினை பார்த்து வாசிக்க கிடைத்ததே ரிஷிகளின் அழைப்பு உங்களுக்கு உள்ளது என்ற நேர்மறை மனோபாவத்துடன் (Positive attitude) கற்கையில் இணையுங்கள். 

கற்கைக்கான குரு தட்சணை

மின்னஞ்சல், இணையம் மூலம் கற்பதற்கு எதுவித கட்டணமும் இல்லை. பாடங்கள் மின்னஞ்சல் மூலமாக அனுப்ப படும் அவற்றை அச்சிட்டு உங்கள் பாவனைக்கு வைத்துக்கொள்வதனை நீங்களே செய்து கொள்ளவேண்டும். 

எமது நேரத்தை எமது குருநாதரின் பணியாக வாழ்கையின் தர்மத்தின் ஒரு பகுதியாக மற்றவர்களுக்கு கற்பிப்பதற்காக  தருகிறோம். அதற்கு எதுவித கட்டணமும் இல்லை. உங்களிடம் இருந்து நாம் எதிர்பார்ப்பது இவற்றை சிரத்தையுடன் கற்று அதன்மூலம் பெறும் சக்தியையும், ஞானத்தையும் உங்களது வாழ்க்கை அனுபவத்திற்கு கொண்டு வந்து உங்கள் வாழ்க்கையினை மகிழ்ச்சியும், இன்பமும் உள்ளதாக்கி இனிய குடும்பத்தை, சமூகத்தை உருவாக்கினால் அதே மிகப்பரிய குருதட்சணை!

மேலும் எதிர்காலத்தில் தெய்வ, யோக சாதனை தொடர்பாக நூற்களாக ஏதும் வெளியிடுவதாக, அல்லது கலந்துரையாடல்கள் நடைபெறுவதாக ஏற்பாடுகள் இருந்தால் நீங்களாக முன்வந்து அவற்றின் செலவுகளை பகிர்ந்து செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.  

நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் 
  • ஒருபாடத்தை படித்து தகுந்த வினாக்களுக்கு விடையினை நீங்கள் அனுப்பி வைக்காமல் எக்காரணம் கொண்டும் அடுத்த பாடம் அனுப்ப படமாட்டாது. 
  • உங்கள் தொடர்பாடல் மரியாதையான முறையிலும், குரு சிஷ்ய பாவத்திலும் இருக்க வேண்டும். 
  • ஒவ்வொரு சாதனைகள் பயிற்சிகள் தரப்படும் போதும் அவற்றை உங்களது சொந்த வாழ்க்கையின் தன்மைக்கு ஏற்றவாறு செய்ய முடியுமா என்பதனை நிதானமாக துணிந்து கொண்டு செய்ய தொடங்க வேண்டும். 
  • இவ்வாறு நிபந்தனைகளை கடைப்பிடித்து செய்ய முடியாமல் போகும்போது எம்மால் முடியாது என்று கைவிட்டுவிடாமல் மீண்டும் மீண்டும் முயற்சிக்க வேண்டும். இப்படி முயற்சிக்கும்போது குருவருளாலும் இறையருளாலும் நீங்கள் நம்பவே முடியாத பல நன்மைகள் பெறுவீர்கள். 
இந்த  கற்கையில் உங்கள் சிரத்தையும் முயற்சியும்தான்  மூலதனமே அன்றி வேறு எதுவும் இல்லை. தாகம் உள்ளவர்கள் பெற்று பயனடைவதகாகவே இந்த ஏற்பாடு, 

அன்புடன் 

2 comments:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

குரு அகத்திய காயத்ரி சாதனா அனுபவம் - வாழ்க்கை எப்படி சீராகியது என்று ஒரு சாதகியின் அனுபவம்

சாதனை அனுபவம்   இரண்டரை வருடங்களுக்கு முன் என்னிடம் காயத்ரி சாதனை செய்வதற்கு சுமனன் அண்ணா வழிகாட்டுகிறார் நீங்களும் சாதனை செய்ய விண்ணப்பியுங...