குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Wednesday, January 30, 2013
சித்தர்கள் அருளிய காயத்ரி மந்திரங்கள் சரியானதா?
Thursday, January 17, 2013
காம ரகசியம் - 05: காம உணர்வினை அடக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்
Wednesday, January 16, 2013
காம ரகசியம் - 04: ஆண்களிலும் பெண்களிலும் காமசக்தி செயற்படும் முறை
உதாரணமாக ஒரு ஒரு பணக்காரர் தனது மனைவியுடன் வெளியே செல்லும் போது கவனித்தீர்கள் என்றால் தெரியும், மனைவியிற்கு பலவித அலங்காரம் செய்து, ஒப்பனைகள் செய்து அழகாக்கி காண்பவர் காணும் வண்ணம் தன் மனைவி அழகானவள் என விளம்பரப்படுத்தி செல்வார், இதன் உள்ளார்ந்த நோக்கம்தான் என்ன? தன் அழகான மனைவி மூலம் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்கிறார். இது ஒரு வியாபார உத்தி! இந்த நிலையில் ஆண் அடிமையாகிறான், அவனுடைய அழகு, அவனுடைய செல்வம், அவனுடைய திறமை மறைக்கப்படுகிறது. எப்போது மனிதன் இயற்கை விதிகளை மீறி செயற்படுகிறானோ அதன் விளைவுகளை அவன் கட்டாயம் அனுபவிக்கத்தான் வேண்டி இருக்கும், அதில் இயற்கை எதுவித ஏற்றத்தாழ்வினையும் காட்டுவதில்லை.
இப்படியான அடிமைப்பட்ட தாழ்ந்த நிலையிலிருந்து மீள்வதற்கு ஆணிற்கான ஒரேவழி தியானம் மட்டுமே! தியானித்தல் இல்லையென்றால் ஆண் தன் அழகை இழந்து பெண்பின்னால் பைத்தியம் ஆகத்தொடங்குகிறான். ஆனால் ஆணால் இலகுவாக தியானிக்க முடிவதில்லை, பெண் இருத்தி தியானிப்பதைவிட ஆண் தியானத்தில் அமர்வது மிகக்கடினம். நான்கு ஐந்து ஆண், பெண் பிள்ளைகள் பெற்ற தாய்மாரைக்கேட்டால் சொல்வார்கள் வயிற்றில் பெண் பிள்ளை இருக்கும் போது மிகவும் அமைதியாக இருக்கும், ஆனால் ஆண் பிள்ளை இருக்கும் போது அடிக்கடி தாயின் வயிற்றை கண்டபடி உதைத்தவண்ணம் இருப்பான்.
பெண் இலகுவாக ஆழமான தியானத்திற்கு செல்லக்கூடிய தன்மை உடையவள், அதேவேளை அவர்களுடைய காம சக்தி மறைத்தன்மை உடையது. அதனால் அவர்களை காமம் தூண்டி அதீத சக்தியினை வேறு திசையில் செலுத்துவதில்லை. இது ஒரு பெண் தன் பெண்தன்மையுடன் இருக்கும் போது மட்டுமே நிகழ்கிறது. இயற்கையில் அவர்களில் காம சக்தி அதிகரித்து அவர்களை அதீத காமத்திற்கு இட்டுச் செல்வதில்லை, அவ்வாறு அதிகரிக்கும் போது உடலியற் தொழிற்பாட்டினூடாக ஒவ்வொரு மாதமும் அவர்களின் அதிகரிக்கும் காம சக்தி வெளியேற்றப்பட்டு உடலும் மனமும் அமைதிப்படுத்தப்படுகிறது. பொதுவாக ஆண்கள் துறவறம் ஏற்று நீண்ட பிரம்மச்சரியம் இருப்பது மிக அரிதான விடயம், ஆனால் பெண் துறவிகள் இயல்பிலேயே பிரம்மச்சரியம் காப்பது இலகுவான ஒன்றாகும். ஏனெனில் இயற்கையில் பெண் தனது உடல் மூலம் காமசக்தியினை வெளியேற்றும், தியானம் இன்றியே இலகுவாக அடையும் தன்மையினை பெற்றுள்ளாள்.
ஆனால் ஆண் ஒருவனால் அப்படி இருக்க முடியாது. அவனுடைய காமசக்தியினை உயர்நிலைப்படுத்துவதற்கு ஆழமான தியானம் கட்டாயம் அவசியமான ஒன்றாகும். இப்படி காமசக்தியினை ஆழமான தியானத்தின் மூலம் உயர்சக்தியாக்காமல் ஆணால் பெண்ணிற்கு பின்னால் பைத்தியக்காரத்தனமாக காம இச்சையுடன் அலையாமல் இருக்க முடியாது.
காமம் என்பது ஆணின் மிகப்பெரிய தளை (கட்டுண்ட நிலை. இந்த நிலையினை அவிழ்க்க தியானத்தின் மூலம் முயலவேண்டும். இப்படி முயற்சிக்கும் போது ஆணின் காமசக்தி கீழ்முகமாக வீணாகமல் மேல் நோக்கிச் செல்லத்தொடங்கும். அழகான பெண்ணிற்காக அலையாமல் தியானத்தின் மூலம் அவன் தன்னுள் அழகாக ஆணினைப்படைக்க வேண்டும். ஆனால் இயல்பின் ஆண் பெண்ணை விட முட்டாள்! தன்னுடைய முட்டாள்தனத்தினை மறைக்க, தனது காம சக்தி கீழ்முகமாய் சென்று உலகத்தினை அழிவு நோக்கி செலுத்த ஆரம்பிக்கிறான். அப்படி உருவான பைத்தியக்காரத்தனத்தில் தான் உலக வரலாறு எழுதப்பட்டுள்ளது. உலக யுத்தங்கள், கற்பழிப்புகள், மற்றவரை அழித்தல் என்பவையெல்லாம் ஆணின் காமசக்தி கீழ் நோக்கி செலுத்தப்பட்டதால் வந்த வினைகளே!
ஆகவே தன்னை அறிந்துகொள்ள விளையும் ஒவ்வொருவரும் தமது காமசக்தி செயற்படும் முறையினை தெளிவாக அறிந்துகொள்வது அவசியம்!
இறை சாதனைகள் (தியானம், ஜெபம், பிரார்த்தனை) ஒவ்வொரு நாளும் குறித்த நேரத்தில்தான் கட்டாயம் செய்ய வேண்டுமா?
இந்தக் கேள்விக்கான பதிலினை ஒரு உதாரணம் மூலம் விளங்க்கிகொள்வோம்.
உங்களுக்கு நாட்டு ஜனாதிபதியின் நட்பு, அதன் மூலம் உதவி தேவைப்படுகிறது என ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் ஜனாதிபதியின் தனிப்பட்ட அலைபேசி இலக்கத்தினை தருகிறார், இதுவே இறை சாதனையில் தீட்சை எனப்படுகிறது. பெறப்படும் மந்திரம் குறித்த தெய்வ சக்தியின் தனிப்பட்ட அலைபேசி இலக்கம் போன்றது. அதனைத்தரும் குரு ஏற்கனவே அந்த தெய்வ சக்தியுடன் பரீட்சயமான நண்பர்.
Tuesday, January 15, 2013
காம ரகசியம் - 03: காமத்தின் மீதான வெறுப்பு சரியா?
Monday, January 14, 2013
காம ரகசியம் - 02
ஆக காமத்தினைப்பற்றிய புரிதலில் மனிதனது வரைவிலக்கணங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டிய விடயங்களாகும்! இப்படிப்புரிந்து கொள்ளும்போது காமத்தின் மீதான தவறான பார்வைகள் விலக்கப்பட்டு காமத்தினை ஆரோக்கியமாக அணுகும் தன்மை இளைஞர்களின் மனதில் கட்டாயம் உருவாகும், இதன் மூலம் நல்லதொரு ஆரோக்கியமான சமூகம் உருவாகும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை!
Sunday, January 13, 2013
காம ரகசியம் - 01
மனிதனால் அதிகமாக விரும்பப்படும், மனதினை ஆட்டிப்படைக்கும் விடயம் "காமம்", இன்றை உலகில் இதுபற்றி பலவித விழிப்புணர்வு இருந்தாலும் இதனை சரியான முறையில் வெளிப்படையாக அணுகும் வழிமுறையினை உலகிற்கு தந்தவர் ஓஷோ, ஏனெனில் காமத்தினைப் பற்றிய ரகசிய விஞ்ஞானம் இந்தியாவில் தாந்திரீகத்தின் ஊடாகவும், சீனாவில் தாவோவியலின் ஊடாகவும், மேற்கத்தைய நாகரீகத்தில் ரொசிகிருஷேஷியன் போன்ற இரகசிய சங்கங்களினாலும் தமது குழுக்களூக்கிடையில் மட்டுமே வெளிப்படுத்தி வந்தனர், இதனை மாற்றி அமைத்து வெளிப்படையாக கூறியவர் ஓஷோ மாத்திரமே எனலாம். இந்த தொடரில் ஓஷோவின் காமம் - தாந்திரீகம்-பாலுணர்வு தொடர்பான தகவல்களை தொகுத்து தரலாம் என எண்ணுகிறோம்.
மந்திர யோகம் (04): மந்திரத்தின் பண்பு
- ரிஷி: பிரம்மம் என்ற பேரொளியின் அதிர்வுகளில் இருந்தே இந்த பிரபஞ்சம் தோற்றம் பெறுகிறது, ஒவ்வொரு பொருளிற்கும், எண்ணத்திற்கும் பிரபஞ்ச சக்தியின் குறித்த அதிர்வு காணப்படும். அந்த சக்தி அதிர்வினை தமது தியான சக்திமூலம் உணரக்கூடியவர்களையே பழங்காலத்தில் ரிஷிகள் எனப்பட்டனர். அவர்கள் பிரபஞ்சிலுள்ள தெய்வ சக்தியினை முதலில் உணர்வின் மூலம் அறிந்து பின்னர் சப்தத்திற்கு மாற்றி மந்திரங்களை அமைத்தனர். உதாரணமாக வானொலியினை எடுத்துக்கொண்டால் ஒலிபரப்பு நிலையத்திலிருந்து சப்த அலைகள் மின்காந்த அலைகளாக வானப்பரப்பில் பரப்பப்படும், இந்த அலைகள் தகுந்த வாங்கிகள் மூலம் வானொலியினை மட்டிசைப்பதன் (Synchronizing) மூலம் வானத்தில் உள்ள மின்காந்த அலைகள் மீண்டும் சப்த அலைகளாக மாற்றப்படும், இதைப்போல் பிரம்மம் என்ற பேரொளி தெய்வசக்திகளை பிரபஞ்ச்சத்தில் பரப்பிய வண்ணம் உள்ளன, அவற்றை மனம், உடல் கொண்டு தியானம் மூலம் ஈர்த்து ஒலிவடிவத்திற்கு மாற்றும் செயன்முறையினை முதன்முதலாக செய்தவகளே அந்த மந்திரத்தின் ரிஷிகள் எனப்பட்டனர். அதாவது குறித்த தெய்வ சக்தி செயற்படும் அதிர்வெண்ணை முதலில் கண்டு பிடித்தவர்களே ரிஷிகள். இவர்கள் மந்திர உபாசனையில் முதலில் நினைக்கப்படவேண்டியவர்களாக பாரம்பரியமாக கொள்ளப்பட்டு வருகிறது. ஏனெனில் பூவுலகில் அவர்களூடாகவே அந்த மந்திரம் செயற்படும் படி பிரபஞ்ச மனதில் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. ஆகவே மந்திர உபாசனையில் அந்த மந்திரத்தினை கண்ணறிந்த ரிஷியினை முதலில் நினைப்பது கட்டாயம். இதனால் தான் ரிஷிகளை மந்திர திருஷ்டா என அழைப்பவர், அதாவது மந்திரத்தினை பிரபஞ்சத்தில் இருந்து கண்டறிந்தவர்கள் என்று பொருள்.
- சந்தஸ்: எங்களுக்கு வானொலியில் குறித்த அலைவரிசையில் குறித்த வானொலி நிலையம் இயங்கும் என்பாத்து தெரியும், ஆனால் அதனை அடைவதற்கு மீற்றரினை (frequency) எத்தனையில் வைக்கவேண்டும் என்ற ஒழுங்கு இருக்கிறது, இதுவே சந்தஸ் எனப்படும். இது பொதுவாக ஏழு வகைப்படும் காயத்ரி, உஷ்ணிக், அனுஷ்டுப், ப்ருகதி, பங்க்தி, திருஷ்டுப், ஜகதி ஆகியவை, இந்த அலைவரிசைகள் ஒரு மந்திரத்தினை எப்படி உச்சரிக்க வேண்டும் என்ற முறையினை கூறும், இந்த ஏழு சந்தஸ்களும் சூரியனின் ஏழு குதிரைகளாக உருவகப் படுத்தப்படுகிறது. சூரியன் மூலமே பூவுலகிற்கு எல்லா தெய்வ சக்திகளும் வருகின்றது என்பதினால் சூரியனே மந்திர சக்திகளின் அதிர்வு உருவாக்கப்படுகிறது.
- தேவதா: இது குறித்த தெய்வ சக்தி, அதாவது எந்த தெய்வ சக்தி என்பதினை குறிக்கும், காயத்ரி, கணபதி, துர்கா,ம்ருத்யுஞ் ஜெய இப்படி அந்த மந்திரத்தின் மூலம் கவர வேண்டிய தெய்வ சக்தியினை தேவதை குறிப்பிடும்.
- பீஜம் (seed): ஒரு மரத்தில் அதன் மூலம் அதன் விதையில் இருப்பது போல் குறித்த தெய்வ சக்தியின் மூல சக்தி அந்த மந்திரத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும். இந்த ஒலியே குர்த்த தெய்வ சக்தியினை சூஷ்மமாக பஞ்ச பூதங்க்களினூடாக செயற்படுத்தும் இந்த ஒலியிருந்தால்தான் மந்திரம் சக்தி பெறும்.
- சக்தி (Power): விதையிருந்தாலும் அதற்கு நீர் ஊற்றி, சூரிய ஒளி இருந்தால்தான் வளரும் என்பது போல் பீஜ மந்திரத்தினை வளப்படுத்த சக்தி அவசியம் இந்த சொல் சக்தி எனப்படும்.
- கீலகம் (Axle): இதற்கு முன்னர் கூறப்பட ரிஷி, சந்தஸ், தேவதா, பீஜம், சக்தி என்பன புறப்பிரபஞ்சத்தில் உள்ள சக்திகளை குறிப்பவை, இவற்றை குறித்த மந்திரத்தின் மூலம் எமது சுஷ்ம உடலாகிய அகப்பிரபஞ்சத்தில் விழிப்படைய வைப்பதே மந்திர சாதனையின் நோக்கம், இதனை செய்வதற்கு ஒரு அச்சு தேவை, வானொலி உதாரணத்தினை எடுத்துக்கொண்டால் வானொலிப்பெட்டி என்பது மனம் முதலிய மனதினில் சூஷ்ம உடலாகும். அதனையும் சப்த அலைகளையும் இணைக்கும் வானொலியின் ஆண்டெனாவே மந்திரத்தில் கீலகம் என்ற பகுதியாகும். இது பிரபஞ்ச தெய்வசக்தியினையும் மந்தித சுஷ்மா உடலினையும் இணைக்கும் பகுதியாகும். இதன் மூலம் மந்திர சக்தி உடலில் ஒருங்கிணைக்கப்படும்.
- நியாசம்: மேற்கூறிய ஆறு பகுதிகளையும் உடலில் சரியான பகுதியில் இருத்தும் செய்முறை நியாசம் எனப்படும். இது கிட்டத்தட்ட வானொலிப்பெட்டியினை உள்ளே சீரமப்பதினை ஒத்தது, மேற்கூறிய ஆறுபகுதிகளை ஏற்பதற்குரிய உடலின் பகுதிகளை ஒழுங்கு படுத்தும் செயன்முறைதான் நியாசம் எனப்படும். மனித உடலின் முக்கியமான தெய்வ சக்தியினை ஏற்கும் கேந்திரங்கள் இரண்டு உள்ளன, முதலாவது கைகளில் உள்ள ஐந்து விரல்களும் உள்ளங்கைகளும் , இரண்டாவது இருதயம், உச்சந்தலை, தலை முடி கட்டும் இடம் (வைணவ பிராமணர்கள் மழித்து விட்டு சிகை முடியும் இடம்), தோள்கள் இரண்டும், மூன்று கண்களும், இருக்கைகளை தட்டும் ஓசை.
Friday, January 11, 2013
மந்திர யோகம் (03): மந்திரங்களின் அமைப்பு
- நமஹ: இது மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் என்ற நான்கு அந்தக்கரணங்களையும் வணங்கும் தெய்வ சக்தியுடன் ஒன்றாக்குதல் என்று பொருள், நமஹ எனும் போது குறித்த தெய்வ சக்தி எமது அந்தக்கரணங்களில் விழிப்படைந்து அந்த சக்தியினை ஈர்த்து அதுவாகவே ஆகிறது. ஓம் கணேசாய நமஹ என்றால் கணேசரின் சக்தி அந்தக்கரணங்களில் மெது மெதுவாக பதியத்தொடங்கும்.
- ஸ்வாஹ: இது அக்னியிற்கு அர்ப்பணிக்கும் மந்திர முடிவு, இதன் மூலம் மந்திர சக்தி அக்னியில் சேர்க்கப்படுகிறது, அதாவது புற பிரபஞ்ச பஞ்ச பூத அக்னி தத்துவத்தில் மந்திரம் கலந்து பிரபஞ்ச சக்தியினை செயற்படுத்த தொடங்குகிறது. பொதுவாக இப்படியான முடிவுள்ள மந்திரங்கள் ஜெபிக்கும் போது அருகில் விளக்கு, அல்லது ஊதுபத்தி போன்ற அக்னி ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும்.
- ஸ்வதா: ஸ்வாஹா என்பது பிரபஞ்ச்சத்தில் சக்தியினை செயற்படுத்தும் அமைப்பு என்றால், ஸ்வதா என்பது அகப்பிரபஞ்சத்தில் உள்ள சக்தியினை செயற்படுத்தும் மந்திர முடிவாகும். பொதுவாக ஸ்வதா என்ற முடிவுடன் மந்திரத்தினை ஜெபித்து அக்னியில் சேர்க்கும் போது அவரவர் முன்னோர்களுக்கு அந்த தெய்வ சக்தி சேரும்.
- வஷட்: தீய சக்தியினை அழிக்கும் தெய்வசக்தியாக மந்திரம் மாறி பயன்தரும்.
- வௌஷட்: இது எதிர் சக்திகளை குழப்பி சாதகனிற்கு அமைவாக மாற்றும்.
- ஹும்: இது எதிரிகள் மேல் கோபசக்தியினை உருவாக்கும்.
- பட்: சாதகனுக்கு எதிரான சக்தியினை விரட்டும்.
Thursday, January 10, 2013
மந்திர யோகம் (02): மந்திரம் என்றால் என்ன?
தாந்திரீக அடிப்படையில் உலகத்தின் தோற்றம் நாதத்துவனியில் இருந்தே இந்த பிரபஞ்சம் உற்பத்தியாகியது எனக் கூறப்படுகிறது. சப்தம் சித் சக்தியின் சூஷ்ம ரூபம் ஆகையால் சப்தத்தின் முலம் பிரபஞ்ச மகா சக்தியினை கவரலாம் என்பது தந்திரிக்க அடிப்படைகளில் ஒன்று.
Wednesday, January 09, 2013
மந்திர யோகம் (01): தமிழர்கள் மந்திரம் சொல்லலாமா?
இந்த தொடர்பதிவுகளில் மந்திர யோகம் பற்றிய அடிப்படைகளை விளக்கலாம் என்று எண்ணி உள்ளோம்.
தமிழர்கள் மந்திரம் சொல்லலாமா? சமஸ்கிருதம் தெரிய வேண்டுமல்லவா? அது வடமொழி தெரிந்தவர்கள் தானே சொல்லலாம்!
மேற்கூறிய கருத்துக்கள் அண்மையில் ஒரு நண்பர் ஆதங்கத்துடன் எம்மிடம் வினாவினார், அதற்கு விளக்கமாக எமது மனதில் எழுந்த கருத்துகளை தொகுத்த வடிவமே இந்த கட்டுரை தொடர்!
இதற்கு முதலாவது பதில் "அடேயப்பா அப்படியென்றால் தமிழர்கள் தண்ணீர் குடிக்கலாமா? காற்றினை சுவாசிக்கலாமா? என்று கேட்பது போலல்லவா இது இருக்கிறது?" மந்திரம் மனித மனதையும், உணர்வையும்,ஆன்மாவினையும்,உடலினையும் ஒன்றிணைக்கும் சாதனமல்லவா? அவற்றை பயன்படுத்துவது மனிதனின் அடிப்படை உரிமை! அதனை அறியாமையினால் காரணமே தெரியாத ஒன்றால் மறுக்கின்றோம் என்றால் அது எமது மடமை என்பதனை அறிந்து கொள்ளவேண்டும் நண்பா!
அடுத்து எமக்கு ஒருவிடயத்தினை பற்றி தெரியவில்லை என்றால் அதனை குதர்க்க புத்தியுடன் அணுகாமல் அவை பற்றி அறிந்தவர்களிடமோ அல்லது நல்ல நூற்களை கற்றோ தெரிந்து கொள்ள வேண்டும், பொறுமையாக சீர்தூக்கி ஆராய வேண்டும், இப்படி அணூகுவீர்களானால் உண்மை விளங்கும். அதற்கான எமக்கு தெரிந்த விடயங்களை இங்கு பதிவிடுகிறோம், உங்களை போல் சந்தேகம் உள்ள பல்லாயிரக்கணக்கான தமிழ் சகோதரர்கள் இதனால் பலனடைவர் என்று எண்ணி குருதேவரை பணிந்து விடயத்தினுள் புகுவோம்.
முதலாவதாக மந்திரம் என்ற சொல்லின் விளக்கத்தை பார்ப்போம். இதற்கு ஆதி தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் சுருக்கமான ஆனால் ஆழமான பொருள் பொதிந்த சூத்திரத்தினை வரைவிலக்கணமாக தரும். அது "நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த, மறைமொழிதானே மந்திரம் என்ப” (தொல்காப்பியம், சொல்லதிகாரம், 480). இதற்கு பலவாறாக தமிழறிஞர்களால் பொருள் கொள்ளப்பட்டாலும் இதன் மந்திர சாத்திர பொருள் முக்கியமான ஒன்றாகும். அத்துடன் இது மந்திரம் எப்படி உருவாகிறது, யார் உருவாக்குகின்றார்கள் என்ற விளக்கத்தினையும் தருகிறது. இனி இந்த தொல்காப்பிய சூத்திரத்தின் பொருளினை சுருக்கமாக பார்ப்போம்.
நிறை மொழி என்றால் இன்று பொருள் கொள்ளூம் அறிஞர்கள் நன்றாக மொழியினை அறிந்தவர்கள் எனப்பொருள் கொள்கிறார்கள், அது சரியாக இருப்பினும் வெறும் மேலோட்டமான பொருள்தான் அது. அப்படியானால் இன்றைய தமிழ் அறிஞர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அனைவரது வார்த்தைகள் அனைத்துமே மந்திரமாகி விடுமல்லவா? அதன் சூஷ்ம அர்த்தம் வேறு!
தொல்காப்பியம் மந்திரத்தின் உற்பத்தி, அதன் சித்தி, அது பயிற்சி செய்யவேண்டிய முறை ஆகியவற்றை ஒரே சொல்லால் சொல்லிவிடுகிறது, அதுதான் " நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த" வரியில் வரும் நிறைமொழி மாந்தர் எனும் சொல். நிறை மொழி மாந்தர் என்பவர் தனியே மொழி அறிந்தவர மட்டுமல்ல, சொல்லினால் வரும் ஒலி, அண்ட ஒலி சூஷ்ம உடலில் உருவாகும் இடம், உருவாக்கி பிரபஞசத்தில், மனித உடலில் செயல் கொள்ளும் தன்மை அறிந்தவர்கள்தான் நிறை மொழி மாந்தர் எனப்படுவர். அதாவது சைவ சித்தாந்த வார்த்தையில் சொல்வதானால் சிவத்துடன் இரண்டறக்கலந்தவர்கள், வேதாந்த மொழியில் சொல்வதானால் பிரம்மத்துடன் கலந்தவர்கள் இவர்களே நிறைமொழி மாந்தர் எனப்படுவர். இவர்கள் சொல்லும் மொழி எல்லாம் மந்திரங்கள் எனப்படும். இதன் படி வேதங்கள் கூறும் ரிஷிகள், சித்தர்கள், நாயன்மார்கள் கூறிய பாடல்கள், தோத்திரங்கள் எல்லாம் மந்திரம் என்ற வரைவிலக்கணத்திற்குள் வரும்.
இவை மட்டுமல்ல மந்திரங்கள் யார் ஆத்மா சித்தி பெற்றவர்களோ அவர்களது வார்த்தைகளும் மந்திரங்களே! இவ்வாறு கோரக்கர் போன்ற சித்தர்களால் உருவாக்கப்பட்ட சபர் மந்திர பத்ததிகள் பற்றி பின்னொரு தடவை பார்ப்போம்,
மந்திர என்ற வடமொழி சொல்லிற்கு மனனம்+திரயதே என்று பிரிக்கலாம். மனனம் என்றால் நினைப்பது, ஜெபிப்பது, உச்சரிப்பது எனப் பொருள் கொள்ளலாம். திரயதே என்றால் காப்பாற்றுதல் என்று பொருள். ஆக ஜெபிப்பவரை உச்சரிப் பவரை காப்பாற்றுவது என்று பொருள்.
இவை பற்றி அடுத்து வரும் பதிவுகளில் விரிவாக பார்ப்போம்.
ஆக உங்கள் மந்திரம் தமிழர்கள் சொல்லலாமா? என்ற கேள்விக்கு சரியான விடை கிடைத்திருக்கும் என்று எண்ணுகிறோம், மந்திரம் என்ற சொல்லிற்கு முழுமையான பொருளை அறிந்தவர்கள் தமிழர்கள் தாம், சமஸ்கிருதத்தில் மந்த்ர என்றால் நினைப்பவரை காப்பது என்றுதான் பொருள் ஆனால் தமிழில் அதற்கான வரைவிலக்கணம் அதன், உற்பத்தி, செயல்முறை, இருப்பு என முழுமையாக கூறி நிற்கும். ஆகவே தமிழர்கள் தான் மந்திரத்தின் செயற்பாட்டை அறிந்த மெய்ஞாநிகழ என்ற பெருமையுடன் தாராளமாக மந்திரங்களை கூறலாம் என்பதில் உறுதி கூறுகிரோம்.
ஆனால் எந்தவொரு செயலையும் செய்வதற்கு ஒரு ஒழுங்கு முறையிருக்கிறது அதன் படி செயல்புரிந்தால் மட்டுமே பலனளிக்கும்,அது மந்திர யோகத்தின் மூலம் பயனடைய விரும்புபவர்களுக்கும் நிச்சயம் பொருந்தும். அவற்றை படிப்படியாக மற்றைய பதிவிகளில் பார்ப்போம்.
வளரும்.....
ஸத்குரு பாதம் போற்றி!
Monday, January 07, 2013
காயத்ரி மந்திரம் ஜெபிக்கும்போது மனதில் ஏதேனும் நினைக்க வேண்டுமா அல்லது கவனிக்க வேண்டுமா?
மந்திரங்களை வாய் விட்டு சொல்வது மனதிற்குள்ளே சொல்வது எது சிறந்தது?
பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்
பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள் எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால் சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...
-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...
-
குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் தனது ஸௌபாக்யா மந்திர சாதனா ஒலி நாடாவில் மூன்று ஆசீர்வாத மந்திரங்களை கூறியுள்ளார். இந்த மூன்று மந்திரங்க...