கொரோனாவில் உலகம் ஆடிக்கொண்டிருக்க அமேசன் நிறுவனர் Jeff Bezos தனது வாழ்நாளை நீட்டிக்க வழி தேடுகிறாராம்!
https://interestingengineering.com/jeff-bezos-is-funding...
இதைத்தானே பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னராக சித்தர்கள் உடலை காயம் ஆக்கி - காயம் என்றால் அக்கினி - கல்ப காலம் வரை இருத்த வேண்டும் என்று சொன்னார்கள்.
அம்ருதம் என்ற சொல்லை அ+ம்ருதம் என்று பிரிக்கலாம். ம்ருத என்றால் மரணம் என்று அர்த்தம். அம்ருத என்றால் மரணமற்ற என்று அர்த்தம்.
ம்ருத்யு என்றால் மரணம் என்று அர்த்தம் ம்ருத்யுஞ்ஜெய என்றால் மரணத்தை வெல்லுதல் என்று அர்த்தம். சிவ உபாசனையில் ம்ருத்யுஞ்ஜெய என்று அர்த்தம்.
நான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் நானிருந்த வீட்டு தாத்தாவிற்கு வயது 95; அவரது நீண்டகால ஆயுளிற்கு இரகசியம் என்னவென்றால் காலை நாலு மணிக்கு எழுந்து, தியானம் செய்து, பஞ்சாட்சரம் ஜெபித்து திருவாசகம் படித்து விட்டு, எழுந்து கோயிலிற்கு சென்று வணங்கி வருவார்; தினசரி மண்வெட்டி பிடித்து புல்லு செதுக்குவார். எப்போதும் மனதை சந்தோஷமாக வைத்துகொள்ள வேண்டும் என்று சொல்வார்! வாரம் இரண்டு மூன்று நாள் அவரின் பழங்காலத்து கதை கேட்பது வழக்கம்! அவன் பெரிய ஆளாக வருவான் என்று என்னைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லுவாராம்! இறுதியாக 104 வயதில் சிவபதம் அடைந்தார்.
மற்றொருவர் எனது குருவின் குருவான ஸ்ரீ கண்ணைய யோகியாரிடம் உபதேசம் பெற்ற யோகி, சுப்பிரமணியம் ஐயா அவர்கள். 94 வயதில் பூரண ஆரோக்கியத்துடன் திடமாக வாழ்ந்து வருகிறார். மது, மாமிச உணவு தவிர்த்தல், தினசரி தீர்க்க சுவாசமும், புருவமத்தி தியானமும் செய்து வருதலும் மாத்திரமே தனது ஆரோக்கியமும் நீண்ட ஆயுளினதும் இரகசியம் என்று கூறுகிறார். இவரை அண்மையில் எமது மாணவர் ஒருவர் சென்று புத்தகங்கள் கொடுத்து ஆசிபெற்று வந்தார்.
எம்மிடமும் தொலைபேசியில் "எமக்கு மேற்பட்ட சக்தி ஒன்று உள்ளது, அது அனைவரையும் ஆசீர்வதித்துக்கொண்டிருக்கிறது, அதனுடைய ஆசிகள்" என்று ஆசி கூறினார்.
அதேபோல் ஸ்ரீ கண்ணைய யோகியார் பல்லாண்டு காலம் வாழும் வழி என்று போதித்து அதன்படி 108 வருடங்கள் வாழ்ந்து காட்டினார்.
ஹதயோக பிரதீபிகை மூச்சினை கும்பித்து, சித்த சலனமற்று, புருவமத்தியில் விழியினை செலுத்துவாரை காலன் தீண்டமாட்டான் என்று சொல்கிறது.
ஆகவே Jeff Bezos இற்கு நம்முடைய பக்கமும் நீங்கள் தேடிக்கொண்டிருக்கிற நிறைய விஷயம் இருக்கிறது என்று ஒரு மின்னஞ்சல் எழுதலாம் என்று நினைக்கிறேன்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.