புரூஸ் லீயைப் பற்றி அதிக அறிமுகம் தேவையில்லை!
போர்க்கலையின் அதியுச்ச ஞானத்தை அனுபவமாகப் பெற்ற ஒருவர்! அவரது Tao of Jeet Kune Do இன் முதல் அத்தியாயம் உடல், மனம், ஆற்றல் ஆகியவற்றை உச்சகட்ட திறனிற்கு எப்படிக் கொண்டு செல்வது என்ற தத்துவங்களின் தொகுப்பு!
நூலின் முதல் பந்தி ஒருவன் போர்க்கலையில் முழுமை பெறுவது பற்றிக் கூறுகிறது. தனியே உடலின் ஒவ்வொரு தசைக்கும் பயிற்சி கொடுத்தால் பூரணத்துவத்தை அடையமுடியாது. மனதை வெறுமைப்படுத்தி எங்கும் நிறைந்த பூரணத்தை உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் நிரப்புவதன் மூலம் மாத்திரமே பூரணத்துவம் பெற முடியும் என்கிறார்.
போர்க்கலையில் ஞானத்தைப் பெறுவதற்கு உண்மை அறிவையும், உண்மையான வாழ்க்கை எது என்பதையும் அறிவதற்கு தடையாக இருக்கக்கூடிய அனைத்து தெளிவற்ற நிலைகளையும் அகற்ற வேண்டும். அதேவேளை இது எல்லையற்ற விரிதலையும் குறிக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அத்துடன் ஒரு திறனை மாத்திரம் விருத்தி செய்து பூரணத்துவம் பெறவேண்டும் என்று பயிற்சிக்காமல் பூரணத்துவத்தை எமக்குள் ஏற்றும் ஒவ்வொரு பகுதியையும் அதனுடன் இணைக்க வேண்டும்.
மேலே கூறிய கருத்து யோகத்தில் பூரணத்துவம் பெற சஹஸ்ராரத்திலிருந்து ஸக்தியை அழைத்து உடல் முழுவதும் நிரப்பி எமது குறையான பகுதிகளை பூரணப்படுத்தும் தந்திர சாஸ்திரத்தின் கூற்று!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.