எமது ஸ்தூல உடல் மொத்தமாக 60% நீரினால் ஆனது; இதில் மூளையும் இதயமும் 73%, நுரையீரல் 83%, தோல் 64%, தசையும் சிறுநீரகங்களும் 79%, எலும்புகள் 31% நீரையும் கொண்டிருப்பதாக நவீன ஆய்வுகள் சொல்லுகின்றன.
புருஸ் லீ உடலை வேகமாக இயக்குவதற்கு நாம் ஆபஸ் தத்துவம் - நீர் என்ற பஞ்ச பூத தத்துவ நிலைக்கு மனதைக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறுகிறார்.
இப்படி மனதை நீர்தத்துவ நிலைக்கு கொண்டுசென்றால் மாத்திரமே மனமும் உடலும் ஒன்றிணைந்து வேகமாகச் செயற்படும். ஏனென்றால் உடல் ஏற்கனவே நீர்தத்துவத்தால் நிறைந்திருக்கிறது.
ஆனால் நாம் பொதுவாக மனம் obsession, rigidity, emotions, guilty, arrogance, pride போன்ற இறுக்கங்களிலேயே வைத்திருக்கிறோம். இவற்றை தந்திரசாஸ்திரம் அஷ்டபாசங்கள் என்று சொல்லும். இவற்றிலிருந்து வெளிப்பட்டு பாய்ந்து ஓடும் நீரைப் போல் மாற்றினால் எதையும் மனம் சாதிக்கும்.
இப்படி உருமாற்றம் பெற்ற மனதையே போர்ப்பயிற்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்பதே புரூஸ் லீயின் தத்துவம். மனதைச் செம்மைப்படுத்தி நீர் போன்று ஓட விடாமல் எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் நாம் தேர்ச்சி பெறமுடியாது. அல்லது உடல் முழுமையான ஆற்றலை வெளிப்படுத்தாது.
புருஸ் லீயின் இந்தக்கூற்று இன்று யோகாசனங்கள் பயில்பவர்களுக்கும் பொருந்தும். மனதை நீர்போன்று இளக்கத்தெரியாமல் முரட்டுத்தனமாக ஆசனம் செய்பவர்கள் ஆசனங்களின் பலனை அனுபவிப்பதில்லை.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.