பாரதியார் தமிழிற்காக, சமூக சிந்தனைக்காக, பெண் விடுதலைக்காக, தமிழின் இலக்கியப் போக்கினை மாற்றியதற்காக அதிகமாக பேசப்படுகிறார், போற்றப்படுகிறார். ஆனால் அதிகம் பேசப்படாத பாரதியின் பக்கம் பாரதியின் ஸக்தி உபாசனை; யோக சாதனை!
பாரதியாரும் ஸ்ரீ அரவிந்தரும் ஒரே காலத்தில், ஆங்கிலேய அரசினை பகைத்துக்கொண்டமைக்காக பாண்டிச்சேரிக்கு வருகிறார்கள்.
இருவரும் சேர்ந்து மகத்தாக மக்களின் மனத்தில் புரட்சி ஏற்படுத்த உழைத்த உழைப்பைப் பற்றி புதுச்சேரியில் அவர்கள் காலத்தில் வாழ்ந்த பாரதிதாசன் கூறுவதை படத்தில் காண்க;
பாரதியார் பதஞ்சலி யோக சூத்திரத்திற்கும் சுவாமி விவேகானந்தரின் உரையை ஒட்டி தமிழில் உரை கண்டிருக்கிறார்.
அரவிந்தரின் யோகத்தின் வடிவத்தை தமிழில் பாரதியின் பாடல்களில் காணலாம்.
பாரதியின் அதிவேகமாய் இயங்கும் மனமும், வலிமையற்ற உடலும் அரவிந்தரைப் போல் யோகத்தை பூரணமாக உடலில் இருந்து சாதிக்கும் நிலையைத் தரவில்லை. ஆனால் பாரதியார் மனத்தளத்தில் மிக வலிமையான ஒரு யோகியாக கொள்ளப்பட வேண்டியவர்.
அரவிந்தர் கூறும் அதிமனத்தின் இலட்சியம் எல்லாம் தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் வீறுகொண்ட ஆற்றலுடன் சூக்ஷ்மமாக செயற்படும் வலிமையுடையவர். அரவிந்தரின் இலட்சியம் மனித குலத்திற்கானது என்பதால் தனது அனுபவம் முழுவதும் ஆங்கிலத்திலேயே எழுதினார். அவை அனைத்தும் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று பாரதி தமிழில் பாடி வைத்தார்.
இலட்சியமான மனிதகுலத்தில் தமிழர்களின் பண்பும், பங்கும் எப்படி இருக்க வேண்டும் என்ற யோக இலட்சியத்தை வகுத்துத் தந்தவர் பாரதியார்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.