குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, September 08, 2019

தலைப்பு இல்லை

இது நல்ல சுவாரசியமான ஒரு கருத்துரையாடலுக்கான வாய்ப்பு! 
இன்றைய பதிவில் நான் நண்பர் JaiGanesh S Nadar ஐ நாடாரே என்று விளிக்க தம்பி Mynthan Shiva "நாடார்’களையும் ‘மேனன்’களையும் தேவர்களையும் கவுண்டர்களையும் ஹலைட் பண்ணிக்காம இருக்கலாம்ல.  பெயர் எதுக்கு இருக்கு" என்று கேட்க, 
அது எனது சிந்தனையைத் தூண்ட, சில நாட்களுக்கு முன்னர் அண்ணன் அமைச்சர் Mano Ganesan ஜாதி சங்க மண்டபத்தைத் திறக்கச் சென்று நெட்டிசங்களின் கண்டத்திற்காக "எவ்வளவு நல்லது செய்தாலும் எமது மக்களிற்கு குறையே தெரிகிறது" என்று நொந்து கொள்ள, 
இது பற்றி என் கருத்து என்ன என்பதே இந்தப்பதிவு! 
அண்மையில் வாசித்த யுவால் நோவா ஹராரியின் சேப்பியன்ஸ் நூல் இது பற்றி விரிவாக உரையடுகிறது. 
அறிவுள்ள மனிதனின் (Homo sapiens) இனது பலமே ஒற்றுமை! 
எப்படி உடல் வலிமை குறைந்த விலங்கான மனிதன் வலிமையான விலங்குகளை எல்லாம் கட்டி இந்த பூமியை ஆள்கிறான் என்றால் மனிதன் தனது சிக்கலான மூளையினை கூட்டாகச் சேர்ந்து பயன்படுத்தத் தெரிந்திருப்பதால், வலிமையானவன் என்பதை அவன் அறிந்திருப்பதால்! மனிதன் தனியொருவனாக எதையும் சாதிக்க முடியாதவன்! 
சந்திரயான்- 2 திட்டத்தை நடைமுறைப்படுத்த 16500 மனிதர்களின் அறிவு தேவைப்படுகிறது. நாம் இந்த Facebook தளத்தைப் பயன்படுத்த 35,587 மனிதர்கள் தமது உழைப்பைச் செலவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். 
ஆகவே மனிதனின் பலம் ஒற்றுமை! பல மூளைகளும், மனமும் ஒருங்கிணைத்து ஒரு இலக்கில் செலுத்தப்பட வேண்டும்! 
அந்த பலத்திற்காக ஏற்பட்டவை தான் சமூகக் குழுக்கள்! ஒரு பொது அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டு அனைவருமாக குறித்த இலக்கிற்குப் பாடுபட்டால் இந்த உலகில் பலமுடையவர்களாக இருக்கலாம் என்பதே குழு நடத்தையின் (Group Behavior) அடிப்படை! அரசியல் கட்சிகள், ஜாதிக்கூட்டங்கள், மதக்கூட்டங்கள் எல்லாம் இப்படி கூட்டமாக பலமாக இருப்பது எப்படி என்ற தந்திரோபாயத்திற்காகவே உருவாக்கப்படுகிறது. 
இப்படி தமது உணவுத்தேவைக்கும், பாதுகாப்பிற்கும் கற்காலத்தில் உருவாகிய மனிதக் குழுக்கள், படிப்படியாக பூமியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தபின்னர், வேறு வேலை இல்லாமல் (   ) காலப்போக்கில் தமக்குள்ளேயே யார் பலமானவை என்ற போட்டிக்குள் இறங்கியதால், மற்றவிலங்குகளுடன் போட்டி போடுவதை விட்டு விட்டு தமக்குள்ளேயே போட்டி போடத் தொடங்கியது! இதன் வடிவங்கள்தான் ஜாதிச் சண்டைகள், மதம், இனம், கறுப்பு வெள்ளை, அதிகார, அரசுச் சண்டைகள்! 
ஒற்றுமைக்காக ஏற்படுத்தப்பட்ட இன, மத, ஜாதி அடையாளங்கள் மனிதனின் மனதிற்குள் இருக்கும் ஆணவம் - Ego செயற்பட, புத்தி நிலை குலைய பிளவிற்கான காரணிகளாயின! வர்க்க பேதங்கள் உண்டாயிற்று! மனித குழுக்களுக்கிடையிலான மோதல் வளங்களுக்கான போட்டியால் உருவான ஒன்று என்று கூறப்படுவது என்னைப் பொறுத்த வரையில் தவறானது! மனிதனது அடிப்படைத் தேவைகள் சொற்பமானவை! தானாக உருவாக்கிக்கொண்ட ஆசைகள், பேராசைகள் அதிகமானவை. ஆகவே அவனது சிக்கலான மூளையும், சலனிக்கும் மனமும் ஏற்படுத்தும் சிக்கல்களே இந்த உலகின் பெரும் பிரச்சனைகள்! மனிதன் அடிப்படைத் தேவைகளை விட கற்பனைத்தேவைகளுக்கு அதிகமாக உழைப்பவன்! 
ஆக குழுக்களின் அடையாளங்களை களைவதால் எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை! மனப்பாங்கு செம்மையாகவேண்டும்! அனைத்து மனிதரும் ஒற்றுமையாகச் செயற்பட்டாலே நாம் பலமாக வாழலாம் என்ற அறிவியல் உண்மை தெளிவிக்கப்பட வேண்டும். 
ஆக எல்லோரும் ஒற்றுமையாக ஒருவருக்கு ஒருவர் உதவி, வாழ எந்தவொரு அடையாளமும் துணைபுரியுமானால் அது நல்லதே! 
மனிதரைப் பிரித்து கூட்டு வலிமையைக் குன்றச் செய்யும் எதுவும் தவிர்க்கப்பட வேண்டியவை! 
ஆகவே ஜாதி, மதம் போன்ற வெளி அடையாளத்தினைத் தூக்கி எறிவதால் நன்மை உருவாகும் என்று மேலோட்டமாக எண்ணுவதைவிட மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒருங்கிணைய என்ன மனப்பாங்கினை உருவாக்க வேண்டும் என்பதே நாம் உரையாட வேண்டும் என்றே நினைக்கிறேன்! 
ஏனென்றால் இந்தப் பிரபஞ்சம் ஒற்றுமையையும் ஒத்திசைவையும் (Harmony) நோக்கியே அசைகிறது, அதற்கு எதிரானவை எல்லாம் வலிமை இழக்கச் செய்யப்படுகிறது என்றே நான் கருதுகிறேன்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...