இந்தப் பிரபஞ்சத்தின் இருப்பு பற்றிய அதியுயர் உண்மை அணுத் தன்மை சார்ந்தது. அணுக்கள் கூட்டாகச் சேர்ந்து இந்தப் பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருட்களும் படைக்கப்பட்டுள்ளது. சமஸ்க்ருதத்தில் கண - gaṇa என்பது கூட்டம் அல்லது தொகுப்பு என்று பொருள்படும். கணங்கள் என்றால் ஒருவகைப்படுத்தலின் தொகுப்பு, பொதுவாக ஜோதிடத்தில் மனிச கணம், தேவ கணம், ரக்ஷச கணம் என்று சொல்லுவார்கள். இதன் பொருள் பூமியில் பிறக்கும் மனித ஆத்மாக்கள் பூமிக்கும் வரும் வழியை அவற்றின் சத்துவ, ரஜோ, தமோ குணத்தின் அடிப்படையில் நக்ஷத்திரத்தினூடாக தேர்ந்தெடுக்கும். ஆகவே மனித உடலில் உள்ள உயிரின் அடிப்படையில் மூன்று வகுப்பாக – கணங்களாக பிறந்த நக்ஷத்திர அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது. இப்படி மனிதர்களைப் பகுப்பது போல் உலகில் எதைப்பகுத்தாலும் அதை வகைப்படுத்த கணங்கள் தேவைப்படுகிறது.
இவற்றை ஆழம் வரை ஆராய்ந்து சென்றால் இறுதியில் அணுவும், அணுவிற்குள் இருக்கும் துணிக்கைகளும் மிஞ்சும்.
இவற்றை எல்லாம் வகைப்படுத்தி, செயற்படுத்தும் மூல சக்தியை பராசக்தி என்று குறிப்பிடுவோம். இவற்றை மனிதர்கள் வணங்குவதற்கு இலகுவாக பல பெயர்களை இட்டு கூறிவருகிறார்கள். இந்த மூலசக்தியிலிருந்தே எல்லாவித பாகுபாடான பிரபஞ்சப் பொருட்களும் உருவாகிறது.
இப்படி உருவாகிய பிரபஞ்சப்பொருட்கள் எல்லாம் குழம்பிய நிலையில் (Chaotic state) இலிருந்து ஒத்திசைவாக (Harmonically) நடக்க ஒரு தலைவன் தேவை. அவனே கண+அதிபதி = கணபதி,
மூலசக்தியிலிருந்து கதிர்த்த பிரபஞ்சப் பொருட்களை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்த அந்த சக்தியின் அமிசத்திலிருந்து ஒன்றாலேயே அதைச் செய்ய முடியும். இதனால் தான் பார்வதியின் உடலிலிருந்து வழித்தெடுத்த மஞ்சளில் இருந்து கணபதி உருவாகினார் என்று புராணத்தில் சொல்லி வைத்தார்கள்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.