இன்று காலை தமிழ் நாட்டு தொல்லியல் துறை வெளியிட்ட கீழடி தொல்லியல் அறிக்கை நண்பர் கிருஷ்ணா மூலம் கிடைத்தது.
படுவேகமாக படித்ததில் கிடைத்த சுவாரசியமான, தொடர்புபடுத்தக் கூடிய விஷயம் சங்ககால நாகரீகமும் இலங்கையும் மிகத் தொடர்புபட்டிருக்கிறது என்பதே!
அதிலும் தற்போது தமிழர் பிரதேசங்கள் என்று கூறப்படும் இடங்கள் தாண்டியும் இந்தத் தொடர்புகள் இருக்கின்றது என்பது.
கீழடி ஆய்வறிக்கையின் ஏழாம் பக்கம், பானைகளில் காணப்படும் குறியீடுகளைப் பற்றிய தகவலில் பெறப்பட்ட குறியீடுகள் கந்தரோடை, மாந்தை, திசமகாராமை, ரிதியாகம பகுதிகளில் பெறப்பட்ட குறியீடுகளுடன் ஒத்துவருவதாகக் குறிப்பிடுகிறது. (கீழடி, வைகை நதிக்கரை சங்ககால நாகரீகம், தொல்லியல்த் துறை, பக்கம் - 07)
இந்தக் குறியீடுகள் தமிழகத்தில் ஏற்கனவே நடத்தப்பட்ட ஆதிச்ச நல்லூர், கொற்கை, அழகன் குளம், கொடுமணல், கரூர், தெரிருவேலி, உறையூர், மாங்குளம், பேரூர் தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்துள்ளது.
ஆக இலங்கை நிலப்பரப்பும் சங்கத்தமிழனும் தொடர்புபட்டிருந்திருக்கிறான் என்பது உறுதியாகிறது.
முழு அறிக்கை இங்கே: https://archive.org/details/20190921_20190921_2102/page/n17
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.