2014 தொடக்கம் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் வரை அகத்தியர் ஞானம் முப்பது, காயத்ரி சாதனை, யக்ஞம் பற்றி உரையாடல் வாராந்தம் கொழும்பில் நடைபெற்று வந்தது.
சிறிய ஆர்வமுள்ள சாதகர்கள் குழுவுடன் உற்சாகமாக சென்று கொண்டிருந்தது.
கடந்த ஆகஸ்ட் நான் இயற்கை வேளாண்மைத் திட்டத்தை நடை முறைப்படுத்துவதற்காக கொழும்பிலிருந்து வந்துவிட்டேன்!
அதன் பின்னர் பல சாதகர்கள் இது தடைப்பட்டுப் போய்விட்டதாக மனம் வருந்தினார்கள்!
இன்றும் ஒரு அம்மையார் எமது அறிவுப்பகிர்வு தடைபட்டுப் போய்விட்டதாக கூறினார்.
அதற்கு நாம் கூறிய பதில்;
அப்போது அறிவுப் பசிக்கு விருந்திட்டுக் கொண்டிருந்தோம்!
இப்போது உடல் ஆரோக்கியம் தரும் உணவு உற்பத்திக்கு நேரத்தைக் கொடுத்திருக்கிறோம் என்றேன்!
இறைவன் அருளாலும், எமது குழுவின் அயராத முயற்சியாலும் முதல் படியை வெற்றிகரமாக தாண்டியிருக்கிறோம்!
எந்த செயற்கை உரமும், பீடைகொல்லியும் வாங்காமல் பசுவின் சாணமும், கோசலமும், சாதாரணமாக கிடைக்கும் மூலிகைகளும் கொண்டு கத்தரிச் சாகுபடி வெற்றியாகியுள்ளது!
படிப்படியாக மற்றைய மரக்கறிகளும் வரும்!
எம்முடன் சேர்ந்து எமது முறையில் செய்யக் கூடிய ஆர்வமுள்ள இளைஞர்கள் சிலரும் இணைந்துள்ளார்கள்! அவர்களது உற்பத்தியும் எமது தரக் கண்காணிப்புடன் உள்வாங்கப்படும்!
விவசாயத்தின் வெற்றி உற்பத்தியை வாங்குபவர்களது கைகளில் உள்ளது! தொடர்ச்சியான ஊக்கம் வாடிக்கையாளர்கள் தரத்தரவே இந்தத் திட்டம் வெற்றி பெறும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.