அனுபந்த சதுஷ்டயம் என்பது முற்காலத்தில் ரிஷிகள் ஆய்வு செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு அறிவியல் முறை.
அனுபந்தம் என்றால் தொடர்புபட்ட என்று பொருள், ஒரு விஷயத்தை தொடர்புபடுத்தி ஆராய்ந்து அறிவைப்பெற நான்கு விஷயங்கள் முக்கியமானவை.
1) அதிகாரி - ஆய்வினைச் செய்பவனது தகுதி
2) விஷயம் - ஆய்விற்குரிய விஷயம் எது?
3) ஸம்பந்தம் - ஆய்வுத் தலைப்பிற்கும் விளக்கத்திற்குமான தொடர்பு என்ன?
4) ப்ரயோஜனம் - ஆய்வின் பயன் என்ன என்பது பற்றிய விளக்கம்.
அதிகாரியின் தகுதி ஆய்வில் ஏகாக்ரமாக மனதை ஒருமைப்படுத்தியவனாக இருத்தல், மனத்தூய்மையுடையவனாகவும் தேவையற்ற கவலைகளும் குழப்பங்களும் அற்றவனாக இருக்க வேண்டும்.
இப்படி ஒரு விஷயத்தைக் கற்பவனால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்!
முன்துணிபுடன் கேள்வி கேட்பவர்கள், மன அமைதியில்லாமல் அறிவைப்பெற ஆர்வமில்லாமல் குதர்க்கத்திற்கு கேள்வி கேட்பவர்கள் கேள்விக்கு தரும் பதில்கள் மாணவனுக்கோ, பதில் தரும் ஆசிரியனுக்கோ எந்தப்பலனையும் தருவதில்லை!
தற்காலத்தில் ஆய்வு மாணவனுக்குரிய அதிகாரம் அவன் பூர்த்திசெய்துள்ள பட்டங்களினால் மட்டுமே பார்க்கப்படுகிறதேவொழிய, அவன் ஏகாக்ர மனம் உடையவனா, சித்த சுத்தி உடையவனா, மனம் அமைதியானவனா என்பதைப் பற்றி எந்தக் கவனமும் எடுத்துக்கொள்வதில்லை! ஆகவே ஆய்வுகள் எதுவும் அவனிற்கோ சமூகத்திற்கோ பலனளிப்பதில்லை! வெறுமனே ஆகாயத்தில் பறக்கும் பட்டங்கள் போல் பெயரிற்கு பின்னால் தொங்கிக்கொண்டு இருக்கின்றன.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.