{ஏழு வருடங்களுக்கு முன்னர் குரு நாதர் ஸ்ரீ அம்ருதானந்த நாதர் தனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்ததன் தமிழ் வடிவம்}
நீங்கள் கடந்த காலத்தில் வாழமுடியாது, கடந்த காலத்தை அறியலாம். ஆனால் மாற்ற முடியாது!
நீங்கள் எதிர்கால (க் கற்பனையில்) வாழலாம், அறியமுடியாது, ஆனால் உருவாக்கலாம்,
ஆகவே உங்களிடமிருக்கும் எல்லா வளங்களையும் பாவித்து உங்கள் தலைவிதியை நீங்கள் விரும்பியவாறு மாற்றி எழுதுவதற்கு செயற்படுங்கள்!
உதவியற்றவர்களாக நாம் உணர்வதற்கு காரணம் எமது வளங்களை சரியாக பாவிக்காமல் இருப்பதே. நாம் எமக்குத் தெரிந்தவர்களிடமும் தெரியாதவர்களிடமும் (பேஸ்புக், கூகுள்) எமது வளங்கள் இருக்கின்றது என்பதை அறிவோம். அவற்றைப் பயன்படுத்துவோம். நீங்கள் எப்போதும் உதவியற்றவர் இல்லை, எப்படி உதவியைக் கேட்கவில்லை, நான் என்று தனியாக எதையும் செய்ய முடியாது, நாம் ஆக எல்லோரும் செய்யலாம்; இப்படி ஒன்றிணைந்து மேன்மையான உலகை உருவாக்குவோம்.
ஒத்த மனதுடைய மனிதர்கள், ஒன்றிணைந்து செயற்பட்டு எமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்காக அடுத்த நூறு தலைமுறைகளுக்கு நல்லதொரு உலகத்தை உருவாக்குவோம்.
என்ன விதமான உலகம் அவர்களுக்கு தேவையானது? அவர்களுக்கு நாம் என்ன விதமான உலகத்தைக் கொடுக்கப் போகிறோம்?
நான் பார்க்க விரும்பும் உலகம் தேவைகளை அதிகரித்துக் கொண்டு அதன் பின்னால் செல்லாத, வன்முறையற்ற, சுரண்டல் அற்ற அன்பினால் நிறைந்த ஒளி நிறைந்த, ஆக்கத்திறன் கொழிக்கும் உலகத்தை!
உலகில் இருந்து எதையும் எடுக்காமல் உலகிற்கு எதையாவது வழங்கக் கூடியவர்களை, உற்பத்தி அதிகரித்த உலகத்தை! பணமில்லாத ஆனால் மக்களிடன் ஆற்றல் நிறைந்த சமூகத்தை!
என்னைப் பொறுத்த வரையில் தேவதை என்பது இந்த சூழலில், அகத்தின், புறத்தின் உயிர்சக்தி! எனக்கு நல்ல தேவதை அருள் புரிய வேண்டும் என்பது நல்ல தரமான வாழ்க்கை இந்த நிலத்தில், நீரில், வானில் வாழும் அனைவருக்கும் அமைய வேண்டும் என்பது. தனிப்பட ஒருவரது நலனுக்கு உரிமை கொண்டாடும் காப்புரிமை இருக்கக் கூடாது. கடவுள் காற்றிற்கு காப்புரிமையை நடைமுறைப்படுத்தினால் எமக்கு சுவாசிக்க காற்று இருக்காது.
நான் ஏற்கனவே கூறியது போல், ஒரே இலக்குடன் ஒன்றுபட்டு வேலை செய்வதன் மூலம் எண்ணிலடங்காத மக்களின் வாழ்க்கையின் விதியை மீள் எழுத முடியும். உங்களில் ஒவ்வொருவரும் சிறந்த தலைவிதியை எழுத 70000 நபர்களுடன் இணைந்து 70,000x70,000 = 5 billion மக்களின் தலைவிதியை சிறந்ததாக்க முடியும்!
இந்த யோசனை முயற்சிப்பதற்கு உகந்தது என நினைக்கிறேன்?
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.