சென்னை, தண்ணீர் பிரச்சனையின் உச்சத்தில் இருக்கிறது. பலர் மழை வேண்டிப் பிரார்த்தனை செய்கிறார்கள்! மழைப் பெய்தாலும் பிரச்சனை தீராது என்பது தான் சூழலியல் அறிவியல் உண்மை!
இன்னும் சிலர் மோடியின் சதி என்றும், இலுமினாட்டிகளின் வேலை என்றும் இரண்டொரு நாட்களில் அறிக்கை விடக் கூடும்!
ஆனால் உண்மை நிலை,
நிலத்திற்கு வரும் மழை நிலத்திற்குள் செல்லுமாறு மண்ணின் அமைப்பு இருந்தால் மட்டுமே நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும்!!
அப்படி இல்லாமல் மண் இறுகியோ, தாவரங்கள் இல்லாமலோ, கொங்கிரீட்டால் நிரப்பப் பட்டிருந்தால் மழை நீர் நிலத்திற்குள் செல்லாமல் வெள்ளம் ஏற்படும்.
ஒரு நகரத்தின் நீர்வளம் அதிலிருக்கும் ஈர நிலங்களின் (wetland) அளவிலும், நிலத்தை மூடியிருக்கும் தாவரத்தின் அளவிலும் தங்கியிருக்கிறது. இந்த இரண்டும் சென்னையின் நிலப்பரப்பில் ஏறத்தாழ அற்றுப் போய் விட்டது என்பதே உண்மை!
இனிச் சென்னையில் நிலப் பாவனை பற்றிய ஆய்வுத் தகவல் ஒன்றினை மட்டும் பார்ப்போம்.
(Vidhya Lakshmi & Thomas,MAPPING OF LAND USE AND LAND COVER CHANGES IN CHENNAI USING GIS AND REMOTE SENSING, International Journal of Pure and Applied Mathematics, Volume 119 No. 17 2018, 11-21)
2000 - 2017ம் ஆண்டிற்குட்பட்ட 17 வருடங்களில் மாத்திரம்;
89.64% ஆழ் நீர் நிலைகள் கட்டிடங்களாக அல்லது வேறு நிலப்பாவனைக்கு மாற்றப்பட்டுள்ளது.
52% மேற்பரப்பு நீர் நிலைகள் கட்டிடங்களாக அல்லது வேறு நிலப்பாவனைக்கு மாற்றப்பட்டுள்ளது.
41.4% ஏரிகள் கட்டிடங்களாக அல்லது வேறு நிலப் பாவனைக்கு மாற்றப்பட்டுள்ளது.
13.5% விவசாய நிலங்கள் கட்டிமாக அல்லது வேறு நிலப் பாவனைக்கு மாற்றப்பட்டுள்ளது.
40% கடற்கரை நிலம் கட்டிடங்களாக அல்லது வேறு நிலப் பாவனைக்கு மாற்றப்பட்டுள்ளது.
59% அடர்வனம் கட்டிடங்களாக அல்லது வேறு நிலப் பாவனைக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆக மொத்தம் மொத்தமாக சென்னை 73% கட்டிடங்கள் அல்லது கொங்கிரீட் வனமாக 2000 - 17க்கு உட்பட்ட 17 வருடங்களில் நிலப் பாவனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இப்படி கொங்கிரீட் வனமாக உள்ள ஒரு நிலப் பகுதியில் நிலத்தடி நீர் சேகரிப்பு நடக்காது! மழை பெய்தால் சீரான வடிகாலமைப்பு இல்லை என்றால் பெருவெள்ளம் ஏற்படும் நிலம் தான் இருக்கும்!
இனி அருகிலிருக்கும் கடல் நீரை சுத்திகரித்து பாவனைக்கு எடுத்தாலே அன்றி நிலத்தடி நீர் சென்னைக்கு கானல் நீராகத் தான் இருக்கப் போகிறது!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.