ஸ்ரீ அரவிந்தர் தனது ஸாவித்ரி காவிய முன்னுரையில் கீழ்வருமாறு அந்தக் காவியத்தின் ஆசிரியர் குறிப்பாக கூறுவதை கீழே தந்துள்ளோம்.
ஸத்தியவான் ஸாவித்ரி கதை என்பது மகாபாரதத்தில் திருமணக் காதல் மரணத்தை வெல்கிறது என்ற கதையாக இருக்கிறது. ஆனால் இந்தப் புராணம் மனிதனின் பல சிறப்பமிசங்களைக் கூறுகிறது, வேத பரிணாம சுழற்சியின் பல குறீயீட்டு இரகசியங்களைக் கூறுகிறது.
ஸத்யவான் தெய்வீக உண்மைகளைத் தன்னுள்ளே தாங்கிய ஆத்மன், ஆனால் மரணத்தினதும் அறியாமையினதும் பிடிக்குள் சிக்கியவன். ஸாவித்ரி என்பது தெய்வீகச் சொல், சூரியதேவனின் மகள், எல்லையற்ற உண்மைப் பொருளான பெண் தெய்வம், மேலிருந்து கீழிறங்கி ஸத்யவானை காக்க பிறப்பெடுக்கிறது; அஸ்வபதி ஸாவித்ரியின் மனித தந்தை, தபஸின் அதிபதி, இறப்பிலிருந்து அமரத்துவத்திற்கு முயற்சிக்கும் ஏகாக்கிரமடைந்த ஆன்ம சக்தி, தியுமசேனன் தெய்வீக மனம், ஆனால் குருடாகிவிட்டது, தனது தெய்வீக இராச்சியத்திற்கான பார்வையை இழந்து விட்டது. அதனால் தனது இராச்சியத்தின் பெருமையை இழந்து விட்டவன். இந்த கதையில் வரும் அனைத்தும் வெறும் கற்பனைகள் அல்ல, கதையில் உள்ள பாத்திரங்கள் குணங்களை மட்டும் காட்டுகிற ஆளுமைகளில்லை, ஆனால் ஆழமாக நாம் தொட்டுணரக் கூடிய உயிர்சக்தி அல்லது உணர்வுச் சக்தியின் அவதாரங்கள், அவை மனித உடல் எடுத்து மனிதனிற்கு உதவி அவனது மரணத்தைத் தழுவும் வாழ்விலிருந்து மரணமற்ற தெய்வ உணர்வு வாழ்க்கைக்கு வழிகாட்டுபவை.
ஒரு மனிதன் தனது ஆன்ம உயர்வினை அடைய ஸாவித்ரி என்ற பேரொளி அறிவுசக்தி எப்படி கீழிறங்கி வந்து அன்பு செலுத்தி உயர்த்துகிறது என்ற அற்புதக் கதை!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.