எவரையும் நாம் குரு என்று அழைப்பதால் அவர் குருவாகி விட முடியாது.
எல்லோரும் எம்மை குரு என்று அழைப்பதாலும் நாமும் குருவாகி விட முடியாது!
மனிதருக்கு மனிதர் மாற்றி மாற்றி பட்டம் சூட்டிக் கொள்வதால் எவரும் குருவாகி விடமுடியாது!
குரு என்பது தத்துவம்! அஞ்ஞானம் எனும் இருளை நீக்கும் தத்துவம் குரு!
எவரது வழிகாட்டல் எமது மனதிலுள்ள இருளை நீக்கி ஒளியைக் காட்டுகிறதோ அவரை நாம் குரு என்று அழைக்கிறோம்.
ஆனால் அவருள் இருந்து வழிகாட்டுவதும் அந்தப் புத்தியை தூண்டும் பேரொளி தான்! அதுவே இலக்கு என்பதில் கவனம் வேண்டும்.
பலர் அந்த இலக்கை அடையும் பயணமாகிய தமது தினசரி சாதனையை விட்டு விட்டு இலக்கை காட்டுபவரைப் புகழ் பாடி, தாஜா பண்ணி முன்னேறலாம் என்ற தமது பயணத்தைக் குழப்பிக் கொள்பவர்கள் அதிகமானோர்!
குருவின் மீது நல்ல பாவத்தை - உணர்ச்சியை வளர்த்தால் அவரிடமிருந்து வரும் தூண்டலை பெறுவது இலகுவாக இருக்கும் என்பதற்காக குரு பக்தி கட்டாயமாக்கப்பட்டது! ஆனால் குருவைத் துதி பாடிக் கொண்டு தமது தர்மத்தை, சாதனையைக் கடைப் பிடிக்காதவர் எவரும் முன்னேற்றம் பெறுவது குதிரைக் கொம்பு! பயணம் செக்குச் சுற்றும் மாடு போலாகிவிடும்!
புத்தியை தூண்டி எம்மை நல்வழியில் நடாத்தும் எல்லா inspirations - தூண்டல்களும் குரு தத்துவத்தை வெளிப்படுத்தும்!
ஆகவே குருதத்துவம் வெளிப்படுபவை எல்லாம் எமது புத்தியைத் தூண்டி நல்வழிப்படுத்திக் கொண்டு இருக்கும்!
குரு என்பது நிரந்தர பதவியும் அல்ல! ஞானத்தை ஒளிர்வது, தருவது குரு, பெறுவது, வளர்ப்பது சிஷ்யன்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.