ஸ்ரீ அரவிந்தர் இந்திய தேசத்தை பண்டைக் காலத்தில் உபநிஷத்துகளும், வேதங்களும் காட்டிய வாழ்வின் உயர் இலட்சியங்களை அடைய விரும்பும் ஒரு இலட்சிய ஆன்ம பூமியாக இருந்த நிலையை மீண்டும் பெறவேண்டும் என்று சங்கல்பித்திருந்தார்!
ஏன் இந்தியா ஆன்மீக இலட்சியத்தில் பண்டைக் காலத்தில் அடைந்திருந்த உயர் நிலை மீண்டும் பெறவேண்டும் என்பதற்கு அவரது இலக்கு தனது நாடு என்ற சுயநல எண்ணம் காரணமல்ல. ஒரு வலுப் பெற்ற தேசம் உலகில் அமையும் போது அதன் கலாச்சாரம் மனித குலத்திற்கு அடிப்படையாக அமையும்! அறிவியலை அடிப்படையாகக் கொண்ட மேற்கத்தேய நாடுகள் வலுவாக அமைந்ததால் உலகம் மேற்கத்தேய கலாச்சாரத்தையும், வாழ்வியலையும் மோகம் கொண்டது. இது மனித குலத்தை துன்பத்தில் ஆழ்த்தும் இருளையே அதிகரித்தது. ஆன்ம உயர்வை வழிகாட்டும் இந்திய கலாச்சாரம் உலகின் கலாச்சாரமானால் உலகம் இன்ப மயமாகும் என்பது அவரது எண்ணம்!
இதற்காக அவர் துர்க்கை சக்தியை இளைஞர்களில் ஆவாஹனம் செய்தார்! துர்க்கை என்றால் துன்பத்தை எதிர்க் கொண்டு வெற்றி பெறுபவள் என்று அர்த்தம்!
இன்று பலருக்கு துன்பத்தை எதிர்க் கொள்ளும் ஆற்றல் விழிப்படைவதில்லை! சிறு துயரம் வந்தவுடன் துவண்டு மன விரக்தி அடையும் சமூகத்திலேயே நாம் வாழ்கிறோம்.
துர்க்கா என்றால் தாக்கப்பட முடியாதவள் என்று அர்த்தம், எந்த துன்பத்தாலும் தாக்கப்பட முடியாதவள் என்று பொருள்.
துன்பத்தைக் கண்டு துவண்டு விடாமல் போராடி வெற்றி காணும் இத்தகைய சக்தி ஒவ்வொரு இளைஞர்களிலும் உருவாக வேண்டும் என்று ஸ்ரீ அரவிந்தர் பாவனை செய்தார்!
இந்தப் பாடல் பெங்காலி மொழியில் எழுதப்பட்டது!
முதலாவது பாடல்,
துர்க்கை அன்னையே! சிம்மவாகினி, ஆற்றல் அனைத்தும் அளிப்பவளே! அன்னையே! சிவனின் அன்பிற்குரியவளே! உன் சக்திக் கூறுகளிலிருந்து பிறந்த இந்திய இளைஞர்களகிய நாங்கள் இங்கு உன் கோயிலில் அமர்ந்து வேண்டுகிறோம்! எங்களைச் செவிமடுபாயாக! இவ் இந்திய மண்ணில் உன்னை வெளிப்படுத்துவயாக!
இரண்டாவது பாடல்,
துர்க்கை அன்னையே, யுகம் யுகமாக ஒவ்வொரு பிறப்பிலும் மனித உடல் எடுத்து உன் பணி ஆற்றி, ஆனந்தத்தின் உறைவிடத்துக்குத் திரும்புகிறோம். இப் பிறப்பிலும் உன் பணி ஆற்றவே உறுதி கொள்கிறோம். எங்களைச் செவிமடுப்பாயாக, அன்னையே, புவியில் தோன்றி எங்களுக்கு உதவுவாயாக!
மூன்றாவது பாடல்,
சிம்மவாகனமு உடையவளே, திரிசூலம் ஏந்தியவளே! கவசம்பூண்டவளே, அழகிய உடலைக் கொண்டவளே! தாயே வெற்றி தருபவளே! இந்தியா உனக்காக காத்திருக்கிறது, உன் மங்கள உருவத்தைக் காண ஆவலாய் இருக்கிறது, செவிமடுப்பாயாக! இவ் இந்தியமண்ணில் உன்னை வெளிப்படுத்துவாயாக!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.