தாயையும் தந்தையையும் வணங்காமல் ஒரு நாளுமில்லை என்பதால் தாய் தந்தை தினம் நமக்கில்லை!
தந்தையிற்கு நன்றி சொல்லுவது வாழ்த்துச் சொல்லுவதும் சரியல்ல! இவை வெறும் வாய்ஜால ஏமாற்றுகள்!
தந்தையில் கடமை;
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்,
தன் மகன் பூமியில் வாழ்வதற்கு தேவையான அறிவையும், ஆற்றலையும் புகட்டி அவையில் முந்தி இருக்கச் செய்வது.
இந்த வகையில் சிறு பிள்ளையாக இருந்த போது கண்டது கேட்பதை எல்லாம் கற்று அறிவை வளர்க்க வேண்டும் என்று சிறு சிறு புத்தகங்களாக அறிவியல், ஆன்மீகம், தத்துவம் என்று வாங்கித் தந்து வாசித்து உலகின் பார்வையை விசாலமாக்கும் ஆர்வத்தைப் புகட்டி, கற்றலையே போதையாக்கி சரியான வயதில் மகாகுரு அகத்தியரைக் காட்டித் தந்தது தன்னை விட தன் பிள்ளைகள் உயரவேண்டும் என்று “தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது” எனும் தந்தையைப் பெற்றவன் என்ற வகையில் நான் பாக்கியசாலி!
இப்படி தந்தை தனது கடமையைச் செய்தால் மகன் செய்ய வேண்டிய கடன் என்னவென்பதையும் வள்ளுவனார் கூறுகிறார்,
மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்.
ஆகா! “இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு'', என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக் கூடிய உயர்ந்த கைமாறு!
இப்படிக் கடனைச் செலுத்தினால் மட்டும்தான் உண்மையான தந்தையர் தின வாழ்த்தாகும் என்பதே எனது எண்ணம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.