பலருக்கு மற்றவர்களுக்கு கற்பிக்க வேண்டும், அறிவுரை கூறவேண்டும், வழி நடாத்த வேண்டும் என்று ஆவல்!
உண்மையில் ஒருவன் தான் எப்போது கற்கும் மன நிலையில் இருந்துக் கொண்டு, கற்றுக் கொண்டு அதை நிபந்தனை இன்றி பகிர்வதன் மூலம் தான் இதனை சாத்தியமாக்க முடியும்.
இன்று ஆசிரியர்கள் பலருக்கும் மாணவர்களை வழி நடாத்தவும் கட்டுப்படுத்தவும் முடியாமல் இருப்பது அவர்களுடைய அறிவினை, அனுபவத்தினை விஸ்தரிக்க முடியாமல் இருப்பதுவும் ஒரு காரணம்.
மனம் என்ற அக உறுப்பு பற்றி அடிப்படைப் புரிதல் இன்றி கற்றலோ கற்பித்தலோ சரியாக நடைபெற முடியாது.
கற்பிப்பவரது மன நிலையும், கற்பவரது மன நிலையும் மிக அத்தியாவசிய நிபந்தனை.
கற்பிப்பவரது மன உணர்ச்சி மாணவன் முட்டாள் என்ற நினைப்பிருந்தால் கற்பவன் புத்திசாலியாக இருந்தாலும் முட்டாளாவான்.
கற்பவனது மன உணர்ச்சி ஆசிரியரில் குறை கண்டால் ஆசிரியன் எவ்வளவு திறமையாக இருந்தாலும் கற்றல் தடைப்படும்.
இன்றைய கல்வி நிலை குறை காணும் மன நிலையை விருத்தி செய்து குறையையே விதைத்து, குறைகளையே வளர்த்து குறையுள்ள சமூகமாக மாறவே எத்தனிக்கிறது.
கற்பிப்பவன் தன்னை ஒரு தாய், தந்தை ஸ்தானத்திலிருந்து தான் மாணவனை உயர்த்த வந்தவன், மாணவன் எவ்வளவு கற்றலில் ஆர்வம் இல்லாதவனாக இருந்தாலும் எப்படி ஆர்வத்தை உண்டு செய்வது என்ற நோக்கமும் ஆர்வமும் உள்ளவனாக இருத்தல் வேண்டும்.
கற்பவன் ஆசிரியனில் குறைகளை பார்க்காமல் தன் இலக்கான அறிவினை பெற முயற்சிக்க வேண்டும். தனக்கு தேவையான அறிவு கிடைக்கவில்லை என்றால் குறை எதையும் காணாமல் வேறு ஆசிரியனிடம் கற்க செல்ல வேண்டும். ஏனென்றால் குறைகாணும் மன நிலை மாணவனுக்குள் வளர்ந்து விட்டால் கற்றல் என்ற செயல் நின்று விடும். ஆணவம் கூடிவிடும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.