சித்தர்களின் ஸ்ரீ வித்யா பஞ்சாக்ஷர காயத்ரி உபாசனை சாதனை முறைக்கு மிகப் பொருந்தி வரக் கூடிய யோகமுறை தாவோப் பயிற்சியாகும்.
தாவோ என்பது சீன பண்டைய மறையியல் பயிற்சிகளில் ஒன்றாகும். இந்த தத்துவத்தில் மனிதன் உடலே கோவில், உடலை செம்மைப்படுத்தி உபயோகப்படுத்துவதால் அண்டத்தின் நட்சத்திர சக்திகளை ஏற்று உயிரை வளர்த்து பேரொளி நிலை அடைய வைக்கலாம் என்பதே அடிப்படை தத்துவம்.
இதற்கு மனிதனிடம் மூன்று சொத்துக்கள் காணப்படுப்படுகிறது.
1) சீ எனும் பிராணன், இதை மூச்சால் ஒழுங்குபடுத்த வேண்டும்.
2) ஜிங்க் எனப்படும் விந்து அல்லது சுக்கிலம், இதை உடல் பயிற்சியால் ஒழுங்கு படுத்த வேண்டும்.
3) சென் எனப்படும் மனம், இதை விழிப்புணர்வால் எண்ணங்கள் அற்றதாக ஆக்க வேண்டும்.
இப்படி மூன்று நிதியங்களையும் சரியாக ஒழுங்குபடுத்தி தனது உடலிற்குள் ஒளி நிலைப்படுத்தக் கூடிய பயிற்சியை நீண்டகாலம் செய்து வரும் சாதகன் தனது ஒளியுடலை வளர்த்து மகாகாரண சரீரம் பெறுகிறான்.
இதை காயத்ரி சாதனையில் பஞ்ச பூத சாதனை, பஞ்சகோச சாதனை என்று கூறுகிறோம். இப்படி பஞ்ச பூத கோஸங்களை சுத்தி செய்த சாதகன் ஸ்ரீ வித்யா சாதனையூடாக உயர் மண்டலங்களின் சக்தியை ஈர்த்து தனது ஒளியுடலை பெருக்கலாம் என்பதே சித்தர்களின் வாசி சிவ யோகங்களில் அடிப்படை.
பெரும்பாலான சித்தர்கள் பஞ்சாஷர மந்திர வித்தெழுத்துக்களையே இந்த சாதனைக்கு பயன்படுத்தியுள்ளார்கள். ஐந்தெழுத்து பஞ்ச பூதங்களை உடலில் சமப்படுத்தி ஈர்த்து உயிரை அழியா நிலை ஆக்குவதால் - அக்ஷரம் என்றால் அழியாதது என்று பொருள்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.