சிரத்தையுள்ள மாணவன் தனது குருவிடம் தியானம் பயின்று வந்தான். கடுமையான பயிற்சிக்குப் பின்னர் குருவிடம் மகிழ்ச்சியுடன் வந்து குருவே, எனக்கு தியானம் சித்தித்து விட்டது, இன்று தியானம்
அருமையாக இருந்தது, நல்ல அனுபவம் என்றான்.
அதற்கு குரு, நல்லது அன்பனே இதுவும் கடந்து போகும், பயிற்சியைத் தொடர்ந்து செய் என்றார்.
அதற்கு சீடன் " நான் ஆன்மீகத்தில் நல்லதொரு முன்னேற்றம் அடைந்திருக்கிறேன், மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது, மூச்சு ஆழமாக செல்கிறது, தெய்வீக அனுபவங்கள் வருகிறது, ஆகவே நிச்சயமாக நான் முன்னேறி விட்டேன் குருவே என்றான் உறுதியாக.
அதற்கு மீண்டும் குரு " நல்லது, இதுவும் கடந்து போகும், பயிற்சியை தொடர்ந்து செய்" என்று சொல்லிவிட்டு தனது வேலையைப் பார்க்கப் போய்விட்டார்.
சீடனுக்கு பெரிய ஏமாற்றமாகிப் போய்விட்டது. குரு தனது முன்னேற்றத்தை பெரிதாக எடுக்காமல், தன்னை ஊக்கப்படுத்தவில்லை என்று மனம் வருந்திக் கொண்டான். இரண்டொரு வாரம் செல்ல மன உணர்ச்சிகளும், உடல் சோம்பலும் வர தியானம் தடைப்பட்டது. தியானத்திற்கு உட்கார முடியவில்லை. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் தியானம் செய்ய முடியவில்லை என்றவுடன் தனது குரு தன்னை ஆசீர்வதிக்கவில்லை என்று மனம் புலம்பி வருத்தப்பட்டு விரக்தி அடையத் தொடங்கினான். வீட்டில் ஒரே சண்டை சச்சரவு ஆகத்தொடங்கி விட்டது.
நேரே குருவிடம் சென்று, குருவே என்னால் எனது சாதனையை தொடரமுடியவில்லை, மனம் ஒருமைப்படவில்லை என்றான்.
அதற்கு குரு அதே பழைய தொனியில் "நல்லது, இதுவும் கடந்து போகும், பயிற்சியைத் தொடர்ந்து செய்" என்றார்.
அதற்கு சீடன், குருவே என்னால் மனதை ஒருமைப்படுத்த முடியவில்லை என்றான்,
அதற்கு மீண்டும் "நல்லது, இதுவும் கடந்து போகும், பயிற்சியை தொடர்ந்து செய்" என்று கூறிவிட்டு தனது வேலையைப் பார்க்க சென்றுவிட்டார்.
கதையின் நீதி, தியானம் சாதனை என்பது கணியன் பூங்க்குன்றனார் கூறியது போல் "வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே" என்பது போல் நன்றாக நடக்கிறது என்று மனம் மகிழ்ந்துக் கொண்டிருப்பதும், நன்றாக நடக்கவில்லை என்று துன்பப்படுவதையும் விடுத்து தொடர்ந்து பயிற்சியை செய்வது மட்டுமே தேவையானது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.