அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள் !
தைத்திரு நாளிற்குரிய காரணங்கள் உழவர் திருநாள் என்பது சமூகவியல் காரணியாக இருக்க வானியலிலும் மனித உடலிலும் இது எதைக் குறிக்கிறது என்று ஆராய்வோம்.
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு என்பது சித்தர்கள் வாக்கு. பிண்டத்தில் பிரக்ஞைக்கு (Consciousnesses) காரணம் உயிர், உயிர் எப்படி உடலில் மூலாதாரம் தொடக்கம் ஆக்ஞா சக்கரம் வரை எப்படி பயணித்து உடலை போசிக்கிறதோ அதைப் போல் சூரியன் அண்டத்தின் ஆதாரங்களான ராசி மண்டலங்களில் பயணித்து புவியை வளப்படுத்துகிறது.
பூமியின் ஆறு ஆதாரங்கள் வருமாறும்,
மூலாதாரம் - மகரம், கும்பம்
சுவாதிஷ்டானம் - மீனம், தனுசு
மணிப்பூரகம் - மேஷம், விருட்சிகம்
அனாகதம் - ரிஷபம், துலா
விசுத்தி - மிதுனம், கன்னி
ஆக்ஞா - கடகம், சிம்மம்
உத்தரஅயனம் என்பது சூரியன் தனுசிலிருந்து மகரத்திற்கு செல்வதுடன், தைப்பொங்கலுடன் ஆரம்பிக்கிறது. அதாவது அண்டத்தில் உயிராகிய சூரியன் மகரமாகிய மூலாதரத்தில் பிரவேசிக்கிறது. இனி வரும் ஆறு மாதங்களுக்கு கும்பம், மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம் ஆக மேலே ஏறிச்செல்லும்.
இதை மனித உடலில் குண்டலினி மேலேறுகிறது என்று குறிப்பிடுவார்கள். குண்டலினி மேலேறுவது என்பது எமது பிரக்ஞை உயர்ந்த நிலையை அடைவதைக் குறிக்கும். பிரக்ஞை உயர்ந்தால் மனம் விரிவுறும், மனம் விரிவுற்றால் வாழ்வு உயரும்.
தக்ஷிண அயனம் தொடங்கும் போது சூரியனாகிய உயிர் அண்டத்தின் ஆக்ஞா சக்கரமான கடகத்தில் புகுந்து கீழிறங்கத் தொடங்கும்.
இப்படி சூரியனின் இயக்கமும், மனித உடலில் உயிரின் இயக்கமும் ஒன்றாக இருப்பதை அறிந்தே அண்டத்திலுள்ளது பிண்டத்தில் உண்டு என்று ஞானியர்கள் கூறி அதன் மூலம் பயன் பெறுவதற்கு வழிகளாக பண்டிகைகளை ஏற்படுத்தி வைத்தார்கள்.
அண்டத்தில் சூரியன் மகர ராசியில் புகும் இந்த வேளையில் எமது மூலாதரத்தில் உயிரை ஒளி நிலைப்படுத்தும் சூரியனின் பிரகாசத்திற்கு மூலகாரணமான அந்த ஸவிதாவின் பேரொளியை எமது மூலதாரத்தில் இருத்தி ஓம் பூர் புவ: ஸ்வ; தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி என்று காயத்ரியால் தியானித்து, இதைக்காண்போர் யாவருக்கும், அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா, ஆயுள் ஆரோக்கியம், வீரம் அசைந்திடா பக்தியன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்பா என்று பிரார்த்திக்கிறோம்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.