தமிழில் அறிவியலை எழுதாமல் எங்காவது எவரையாவது நையாண்டி செய்துக் கொண்டு, உயிர், உடல், உணர்வு, இயற்கைகளின் தொடர்பு பற்றி புரிதலுக்கு முயலாமல், அறிவியல் என்று எதையாவது நம்பிக் கொண்டு உளறும் "so-called" அறிவியலாளர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
சென்ற நூற்றாண்டு இயற்பியலால் ஆளப்பட்டு அதன் புரிதலில் அதி உச்ச எல்லைக்கு வந்துள்ள நிலையில் இந்த நூற்றாண்டு உயிரியலால் ஆளப்படப்போகிறது என்பது பற்றி அறிவியல் விதிகளின் அடிப்படையில் உரையாடுகிறது.
உயிர்களிற்கு பிரக்ஞை உண்டு என்பது உயிரியலாளர்களின் பிரச்சனை மட்டும் அல்ல, இயற்பியலாளர்களின் பிரச்சனையும் கூட, எனும் வாதத்தை முன்வைக்கிறது. நவீன இயற்பியல் மூளையிலுள்ள இரசாயன அணுக்கள் எப்படி பிரக்ஞையை ஏற்படுத்துகிறது என்பது பற்றி எந்த விளக்கத்தையும் இதுவரையும் தரவில்லை. சடத்திலிருந்து எப்படி பிரக்ஞை உருவாகிறது என்பது பற்றி எந்த விளக்கத்தையும் நவீன இயற்பியல் இன்றுவரை முன்வைக்கவில்லை. ஏன் இயற்பியல் இதை தனது பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமலே தனது ஆய்வுகளை முன்னெடுக்கிறது.
குவாண்டம் இயற்பியல் தனது கோட்பாடுகள் அனைத்தையும் அருவ விஞ்ஞானமான (abstract science) கணிதத்தின் மூலமே தனது அறிவை முன்வைக்கிறது. பிரக்ஞை பற்றிய எதையும் கருத்தில் கொள்ளாமலே ஆய்வுகளை முன்னெடுக்கிறது போன்று மிக சுவாரசியமான விஷயங்கள் பலதை முன்வைக்கிறது.
இந்த நூலின் ஆசிரியர்கள் :
Robert Lanza, MD, is one of the most respected scientists in the—a U.S. News & World Report cover story called him a “genius” and “renegade thinker,” even likening him to Einstein.
Bob Berman is the most widely read astronomer in the world. Author of more than one thousand published articles, in publications such as Discover and Astronomy magazine,
Thank you Roshan Akther for Introducing this wonderful book!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.