குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, January 30, 2018

கேள்வி பதில்: ஸ்ரீ ஸக்தி சுமனன்

தங்களுக்கு ஒன்றிற்கும் மேற்பட்ட குருமார்களின் தொடர்பு உள்ளது . மேலோட்டமாக பார்த்தால் ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாதவர்கள் போல் தெரிந்தாலும் நிச்சயமாக ஏதோ ஒரு புள்ளியில் அவர்கள் அனைவரும் தங்களில் இனைகின்றனர்.இது தங்களின் வாழ்க்கையில் எந்த கால கட்டத்தில் எவ்வாறு நிகழ்ந்தது.


முதலில் குருவை நான் தேடி எங்கும் அலையவில்லை! எனக்கு பதின்மூன்றாவது வயதிருக்கும்போது எனது தந்தையார் கூறிய "அகத்திய மகரிஷி எமது குடும்பத்தின் மூல குரு" என்ற வார்த்தையை முழுமையாக நம்பி அவரை ஒரு மரியாதை நிமித்தம் வணங்கி வந்தேன். அடுத்த வருடங்களில் எனது ஞானகுரு ஸ்ரீ காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளை சந்தர்ப்ப வசமாக திட்டமிடாமல் சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. அந்த சந்திப்பில் அவர் என்னை தனிப்பட ஒவ்வொரு பௌர்ணமிக்கும் வந்து பூஜையில் பங்குபெற்றுங்கள் அப்பா! என்று கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளுக்கு மதிப்பளித்து நாட்டு சூழலையையும் பொருட்படுத்தாது சிறுவனாக மாதாமாதம் 100 கிலோமீட்டர் பயணம் செய்வேன். 

ஒருவருடம் கழிந்த பின்னர் எனது தயாரை சந்திக்கவேண்டும் என்று கூறினார். அழைத்துச் சென்றபோது ரிஷி பரம்பரை பற்றிய விளக்கம் கூறி, உங்கள் மகனை மாணவனாக ஏற்றுக்கொள்ளச் சொல்லி குரு நாதர் உத்தரவு, அவன் நீங்கள் விரும்பியபடி கல்வி கற்று, பட்டம் பெற்று, நல்ல தொழில் செய்து, நீங்கள் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து வாழ்வான், அதற்கு ஆன்மீகத்திற்கும் தொடர்பு எதுவுமில்லை. இவற்றை எல்லாம் செய்து கொண்டு ரிஷிகளின் ஆன்ம வித்தைகளை கற்று சாதனை செய்யும் வழியையே நாம் சொல்லிக்கொடுக்கிறோம், அதனால் பயம் வேண்டாம், என்று உறுதி கூறி அடுத்த வைகாசிப்பௌர்ணமியில் உங்களுக்கும் மகனிற்கும் தீக்ஷை கொடுக்கிறோம் என்று சமாதானப்படுத்தி எனது தாயரின் அனுமதி வாங்கிக்கொண்டார். 

பின்னர் அவர் உபதேசித்த வழி இன்றுவரை கடைப்பிடித்து வருகிறோம். அவர் எனது தாயாருக்கு கொடுத்த வாக்கின் படி எனது வாழ்க்கையில் அனைத்தும் நடக்கிறது. 

அவர் உடலை விடுத்த பின்னர் நாமாக எவரிடமும் குருவை தேடி செல்லவில்லை. அவர் உபதேசித்த சாதனையை ஒரு நாள் விடாமல் தினசரி பயிற்சித்து வந்ததுமட்டுமே நான் செய்த முயற்சி. இப்படி பதின்மூன்று வருட சாதனையின் போது பல்வேறு ஆன்மீக வழிகாட்டல்கள் கிடைக்கப்பெற்றன. பற்பல வழிகள் சாதனைமுறைகள் கிடைத்தது. 

பதின்மூன்றாவது வருடத்திற்கு பிறகு ஏற்பட்ட ஒரு ஆன்மீக அனுபவத்தினை விளக்கம் பெற அணுகியபோது தேவிபுரம் குருஜியின் தொடர்பு கிடைத்தது. நான் எனது அனுபவத்தை அவரிற்கு எழுதியபோது அவர் அனுப்பிய பதில் "Can you please come & meet me once?", நான் குருஜியை பார்க்க வேண்டும் என்று வேலை செய்த இடத்தில் லீவு கேட்டபொழுது General Manager இடமிருந்து லீவு தரமுடியாது என்ற பதில் வந்தது. அதற்கு முடிவாக எனது வேலையை ராஜினாமா செய்து விட்டு குருஜியை சந்திக்க சென்றேன். 

சந்தித்த போது அவர் " I will initiate you into Srividya" என்றார். அப்பொழுது ஸ்ரீ வித்யா என்றால் என்ன என்று எனக்கு எதுவும் தெரியாது. அதற்கு நான் " Guruji, I am 1000 km away from you, I cannot come and meet you frequently, possibly I can once a year, then how I can learn from you?" என்று கேட்டேன். 

அதற்கு அவர் "Don't worry, I will give you the Guru paduka, that will guide you, also Devi is inside you, she will teach you how to do the sadhana, further If you need any clarification please write to me through email, I will provide you only a short answer, being old man I cannot write long mails" என்று அவரது தெய்வீக புன்னகையுடன் கூறினார். அதை நான் முழுமையா ஏற்றுக்கொண்டு எனது சாதனையை தொடர்ந்தேன். வேலை இல்லாமல் போன சந்தர்ப்பத்தை முழுமையாக எனது சாதனையை பூர்த்தி செய்யும் வாய்ப்பாக மாற்றினேன். குருஜி கூறியபடி சாதனையை முடிக்க எனது நண்பர் ஒருவர் மூலம் உயர்ந்த ஆலோசனை நிறுவனத்தில் வேலை தானாக தேடி வந்தது. 

இதை குருஜியிடம் தெரிவிக்க "when you come next time you will receive poorna deeksha, it is recommended to visit on Navarathri" என்று பதில் வந்தது. அதுபோல் அடுத்தமுறை செல்லும்போது பூரணதீக்ஷை தந்து மற்றவர்களுக்கு கற்பிக்கும் அனுமதியும் தந்தார்.

அதன்பின்னர் அவர்கூறிய ஆசியில் சித்தர்களின் பாடல்களில் உள்ள யோக, ஞான, தாந்திர விளக்கங்கள் மனதில் தெளிவாக புரிய ஆரம்பித்தது, அவற்றை இப்படி கட்டுரை மூலம் வெளிப்படுத்துகிறோம். 

இதன்படி நான் நேரில் வழிகாட்டல் பெற்ற குருமார் இவர்கள் இருவருமே. 

குருமண்டலத்தில் இருக்கும் மற்றவர்கள் சாதனையின் ஒவ்வொரு கட்டத்திலும் தாமாக உதவும் கருணை உள்ளம் உள்ளவர்கள்.  

மேலே கூறிய சுருக்கமான எனது கதையில் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய அனுபவ உண்மை என்னவெனில்;
 1. நானாக எந்த குருவையுன் ஆசையில் உத்வேகத்தில் தொடர்பு கொண்டதில்லை, அதேவேளை எனது குருமார்கள் காட்டிய வழியில் இன்றுவரை தவறாமல் நிற்பது, இறுதி வரை நிற்பேன் என்ற எனது உறுதியும் மட்டுமே எனது முயற்சிகள். 
 2. குருவை தேடி அலைவதும், குருவை நாம் ஏற்றுக்கொள்வது போன்றவை உண்மையில் அப்படி ஒன்றும் நிகழ்வதில்லை. எமது மன இச்சையினை விட நமது பக்குவமும், நாம் குருவழி நடக்கிறோமா என்பதே மிக முக்கியம். 
 3. குரு சொல்லித்தரும் உபதேசப்படி நடப்பது மட்டுமே நமது கடமை, நமக்கு எதுதேவை என்பது இறைசக்தி தானாக எமது பக்குவமறிந்து சுரக்கும். ஆக எமது முயற்சிகள் எல்லாம் சரியான பக்குவத்தை எம்மில் உருவாக்குவதுதான். 
 4. குருமண்டலத்தின் நோக்கத்திற்கு தம்மை இணைத்துக்கொள்பவர்களுக்கு அவர்கள் தானாக உதவுகிறார்கள். 
 5. வாழ்க்கையில் ஒருகட்டத்தில் மட்டுமல்ல எல்லா கட்டங்களிலும் எம்மை வழி நடாத்துவதற்கு குருமார் தயாராக திறந்த மனதுடன் தான் உள்ளார்கள், நாம் எமது ஆணவத்தையும் மனக்குழப்பத்தையும் விட்டு சரணாகதி அடைவதில்லை. 

4 comments:

 1. நன்றி ஐயா.

  ReplyDelete
 2. அருமை குருஜி மனவலிமை மிக உறுதியாக தேவை என்பதினை புரிந்துகொள்ள முடிகிறது

  ReplyDelete
 3. அருமை! நன்றியும் குருவே, விரிவான விளக்கத்திற்கு!

  ReplyDelete
 4. ஊக்கம் தரும் விளக்கம். நன்றி ஐயா

  ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

குரு அகத்திய காயத்ரி சாதனா அனுபவம் - வாழ்க்கை எப்படி சீராகியது என்று ஒரு சாதகியின் அனுபவம்

சாதனை அனுபவம்   இரண்டரை வருடங்களுக்கு முன் என்னிடம் காயத்ரி சாதனை செய்வதற்கு சுமனன் அண்ணா வழிகாட்டுகிறார் நீங்களும் சாதனை செய்ய விண்ணப்பியுங...