குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, January 11, 2018

கேள்வி பதில்: காயத்ரி எப்படி உலகிற்கு வந்தது?


Respected Acharya,
 1. Kindly tell us how Gayathri mantra came to the world ? 
 2. Kindly tell us about Gayathri Devi, her appearance and it's relation to the syllables of the Gayathri mantra ?
 3. Honourable Acharya, Kindly tell us why every god's / siddhars are having Gayathri mantra, when one universal Gayathri mantra (om pur bhuva suvaha ) is available. Will these different mantras give different result ? 
Sincerely,
Sivasankar,
Chennai.

 உங்களின் முதலாவது கேள்விக்கான பதில்;

காயத்ரி மந்திரம் எப்படி உலகிற்கு வந்தது?  காயத்ரி மந்திரம் உலகிற்கு வரவேண்டிய தேவையில்லை. உலகை இயக்கும், படைக்கும் மூலசக்தியின் அதிர்வுகள் மனிதன் உச்சரிக்கும் படியாக காயத்ரி மந்த்ரமாக்கப்பட்டுள்ளது.  ஆகவே உலகிற்கு காயத்ரி மந்திரம் வரம்வில்லை. உலகில் உள்ள அனைத்திலும் பிராணசக்தியாக காயத்ரி இருக்கிறது. 

பிரபஞ்ச பிராணன் - மூலசக்தி தன்னை அதிர்வுகளாக வெளிப்படுத்தி அலைக்கழிந்து கொண்டு இருக்கிறது. இந்த அதிர்வுகளை தமது தபஸால் உயர்ந்த ஆற்றல் கொண்ட ரிஷிகள் நேருக்கு நேராக உணர்ந்து அதை மனிதன் தனது வாயாலும், மனதாலு உச்சரிப்பதன் மூலம் கவர்ந்ததிழுக்கும் தன்மை பெறுவதற்காக மந்திரங்களாக்கி வைத்திருக்கின்றார்கள்.  இந்த மந்திரங்களை மனதிலும், வாயிலும் உச்சரிக்கும் மனிதன் அந்த பிரபஞ்ச மூல சக்தியுடன் ஒரு பரிவு (resonance) அல்லது ஒத்த அதிர்வினை பெறுவதன் மூலம் தன்னில் ஏற்படுத்திக்கொள்ளலாம். 

இந்த அடிப்படையில் காயத்ரி மந்திரம் பிரபஞ்சத்தில் உள்ள பிராண ஞான சக்திகளின் அதிர்வுகளை கவர்ந்து மனிதனில் அந்த தன்மைகளை உருவாக்கும்படியாக விஸ்வாமித்திர ரிஷியால் உருவாக்கப்பட்டு அனைவருக்குமாக தரப்பட்டுள்ளது. 


காயத்ரி தேவியின் உருவம் , அது மந்திர அக்ஷரங்களுடன் தொடர்பு படும் விதம் பற்றி கூறுங்கள்? 

தெய்வ ரூபங்கள் மனிதன் அடைய வேண்டிய இறுதி நிலையை குறிப்பிடும் குறீயீடுகள். காயத்ரியின் ஐந்து முகங்கள் பஞ்ச பிராணன், கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள், பஞ்ச தன்மாத்திரைகள், பஞ்ச பூதங்களை எப்படி மனிதன் தனது பரிணாம உயர்விற்கு பயன்படுத்துவது என்ற ஞானத்தை தருவது. 

தேவியில் ஆயுதங்கள் ஒருவன் ஆற்றலையும், மனதையும் எப்படி கட்டுப்படுத்தவேண்டும் என்ற செய்தியை தருவது. 

தேவி பெண்ணாக காட்டப்படுவது சாதகன் தாய்மை உணர்வுடன் இறை சக்தியை ஏற்றுக்கொள்ளும் பண்புடையவனாக இருக்க வேண்டும் என்பது பற்றிய குறியீடு. 

இதுவே அடிப்படை விளக்கம், இது பற்றி மேலும் விளங்கிக்கொள்ள வேண்டுமாயின் அதற்கு குறித்தளவு காயத்ரி சாதனையில் நீங்கள் பயணித்திருக்க வேண்டும்.  அப்படியான விளக்கங்கள் நீங்கள் சிரத்தையுடன் சாதனை செய்யும்போது தகுந்த நேரத்தில் சொல்லித்தரப்படும். 

பொதுவான (பூர், புவஹ, ஸ்வஹ) என்ற பொதுவான காயத்ரி மந்திரம் இருக்கும்போது ஏன் எல்லா தெய்வங்களுக்கும்/சித்தர்களுக்கும் காயத்ரி மந்திரம் காணப்படுகிறது? 

இதற்கு எளிமையான பதில் ஒரு நிறுவனத்தில் தலைவர் (Chairman) இருக்கும்போது ஏன் இயக்குனர் (Director) மேலாளர் (Manager), ஊழியர் (worker) இருக்க வேண்டும் என்ற கேள்விதான், 

மூல காயத்ரி (ஓம் பூர் புவஹ ஸ்வஹ தத் ஸவிதுர் வரேணியம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ நஹ ப்ரசோதயாத்) இது Chairman, மற்றவை பிரபஞ்சத்தின் மற்றைய செயற்பாட்டிற்காக இயங்கும் ஞான சக்திகள்! 

6 comments:

 1. படித்து புரிந்து கொண்டேன் ஐயா.

  ReplyDelete
 2. தெளிவான பதில் புரிந்தது

  ReplyDelete
 3. Thanks a lot Guruji
  Mani Vannan M
  SVVS/GS/2018-66

  ReplyDelete
 4. SVVS/GS/2018-16-Kandasamy
  Yes Guruji, i understood.

  ReplyDelete
 5. தெளிவு பெற்றேன் நன்றி ஐயா
  SVVS/GS/2018-44

  ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

ஒரு லக்ஷம் ஸ்ரீ காயத்ரி ஜெபம் பூர்த்தி செய்த சாதகரின் அனுபவம்

சாதனை அனுபவம் -------------- குரு ஸ்ரீ ஸக்தி சுமனன் அண்ணாவின் வழிகாட்டலில் சாதனை செய்ய ஆரம்பித்து இந்த ஆண்டோடு 7 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. ...