குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Friday, January 12, 2018

கேள்வி பதில்: காயத்ரி சாதனையும் உணவுக்கட்டுப்பாடும்

ஐயா இந்த சாதனையின் போது உணவு கட்டுப்பாடு மற்றும் வேறு எதாவது கட்டுப்பாடு உண்டா?

ஐயா என் மகளுக்கு 4 வயது ஆகின்றது காயத்ரி மந்திரத்தை நன்றாக தவறில்லாமல் சொல்கிறது. தொடர்ந்து சொல்ல வைக்கலாமா?

சிவகுருநாதன் 
பொன்னகரம்,
மணமேல்குடி,
புதுக்கோட்டை - மாவட்டம்


உணவை கட்டுப்படுத்திக்கொண்டு சாதனை செய்வோம் என்றால் நோய் குணமாகிய பின்னர் மருந்து குடிப்போம் என்ற நிலைதான். 


காயத்ரி சாதனை மற்ற மந்திர சாதனைகளைப்போல் சக்தியை மட்டும் விழிப்படையச்செய்யும் பயிற்சியல்ல.  காயத்ரிசாதனை செய்யத்தொடங்கும் ஆரம்ப நாட்களின் சாதனா பலன் ஒருவனை மன, உடல் ஒழுக்கங்களில் சரியான முறைக்கு செல்லும் புத்தி தெளிவினை கொடுக்கும். ஆகவே உணவுப்பழக்கம் பற்றிய மனக்குழப்பங்களை விடுத்து உங்கள் மனதில் நான் இந்த சாதனையை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுமானால் அது உங்கள் பூர்வ கர்மப்பயனாக ஏற்படும் நல்லெண்ணம் என்பதை புரிந்து கொண்டு குருமண்டலத்தை சரியான வழிகாட்டும்படி பிரார்த்தித்துக்கொண்டு சாதனையை தொடங்குங்கள். 

காயத்ரி மந்திரத்தின் பொருளே புத்தியை தூண்டும் பேரொளியை எம்முள் இருத்தி தியானிப்பது, அப்படி நாம் முயற்சிக்க எமது உள்ளிருந்து எது சரியான உணவு என்ற வழிகாட்டல் கிடைக்கும், அப்படி நடக்கும்போது அந்தப் பழக்கத்தை எதுவித மனத்தடையும் இன்றி கடைப்பிடிக்கும் மனப்பண்பு உருவாகிவிடும். 

ஆகவே சாதனை தொடங்குவதற்கு உணவுப்பழக்கம் ஒரு தடையல்ல என்பதை நன்றாக மனதில் இருத்திக்கொண்டு சாதனை செய்ய முயற்சியுங்கள். 

ஐயா என் மகளுக்கு 4 வயது ஆகின்றது காயத்ரி மந்திரத்தை நன்றாக தவறில்லாமல் சொல்கிறது. தொடர்ந்து சொல்ல வைக்கலாமா?

தாராளமாக, எமது மகளும் காயத்ரி சொல்லி வருகிறார். அனைவருக்கும் காயத்ரி சொல்லுவதற்கு அதிகாரம் உள்ளது. சிறுவயது முதல் சொல்லச் செய்வதால் புத்தித் தெளிவுடன் கல்வியும் பண்பும் வளர வளர சிறக்கும். ஆகவே மனக்கலக்கம் இன்றி சொல்லவையுங்கள். 

தாமரை கூறும் வாழ்க்கை தத்துவம்

இந்தப்படம் காலி நகரத்தில் உள்ள புத்த விகாரை ஒன்றில் எடுக்கப்பட்டது. வீட்டில் தாமரை வளர்க்க என்று கிழங்குடன் எடுத்து வந்து ஒரு சீமெந்...