குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Monday, January 01, 2018

சாதனை நோக்கமும் தெளிவும்

நோக்கமும் தெளிவும்
இந்தக் குழுவில் நீங்கள் இணைவதற்கு பலவித நோக்கங்கள் இருக்கலாம். அவையாவன;
தினசரி வாழ்வில் துன்பங்களும், பிரச்சனைகளும், ஆரோக்கிய கேட்டையும் உடையவர்களாக அதற்கு தீர்வு தேடுபவர்களாகவோ, அல்லது நீண்டகாலமாக நான் யார், எனக்கு ஏன் துன்பங்கள் வருகிறது, கடவுள் இருக்கிறாரா? சித்தர்கள் என்பவர்கள் யார்? ரிஷிகள் என்பவர்கள் யார்? நான் வாழ்வில் முன்னேற குரு தேவை என்ற தாகம் என்னுள் இருந்தது, எனது குடும்பத்தில் நிம்மதி இல்லை! இப்படி நூற்றுக்கணக்கான காரணங்கள் ஒவ்வொருவரும் கூறக்கூடும்.  
இந்தக்காரணங்கள் எதுவாக இருந்தாலும் அதற்கு ஞானம் பெற்ற ரிஷிகள் சித்தர்களின் பதில் மனம் செம்மையில்லாத வாழ்க்கை வாழ்வதால் நீயே உனக்கு துன்பம் ஏற்படுத்திக்கொள்கிறாய், மனமும் மனதினை சலனிக்க உள்ளிருந்து செயற்படும் ஆழ்மனமான சித்தமும் தூய்மையாக இருந்தால் மனது செம்மையாகும், மனம் செம்மையானால் வாழ்வு செம்மையாகும், வாழ்வு செம்மையானால் இன்பமான வாழ்வு உண்டாகும்.          
இப்படி மனம் செம்மையாக என்ன வழி?
1.     எம்மை விட பலசாலியான ஒருவரிடமிருந்து உதவி பெறல், அந்த உதவியே குரு உபதேசம் என்று குருபரம்பரையில் கூறப்படுகிறது.
2.     பெற்ற உபதேச வழி நிற்றல் – இதுவே சாதனை என எம்மால் குறிப்பிடப்படுகிறது.

சாதனை என்றவுடன் பலரும் செய்யும் தொழில், குடும்பம் என்பவற்றை துறந்து சாமியாராக போய் விடவேண்டும் என்று பலரும் தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இது உண்மை இல்லை.

ஆர்வமும் தாகமும் உள்ள ஒருவன் தான் வாழும் வாழ்க்கையில் இருந்து கொண்டே இறை நிலையை, அதற்கான சாதனையை செய்ய முடியும்.

அந்த வழியை சொல்லுவதே இந்த குரு – அகத்திய – காயத்ரி உபதேசம்.

 நீங்கள் உங்கள் வாழ்வின் துன்பம் தீர, நன் நிலை பெறும் நோக்கத்திற்காக சாதனைக்கு வந்திருந்தாலும் அந்த நோக்கத்தை குருமண்டலத்தின் உதவியுடன் நீங்கள் தினசரி பயிற்சிமூலம் உங்களை மேம்பட்டுத்துவதன் மூலம் சாதிக்கலாம்.
ஆகவே இந்தக்குழுவில் இணைத்திருக்கும் நீங்கள் நாம் இங்கு கூறும் சாதனை முறையை தினசரி நேரம் ஒதுக்கி செய்யும் அர்ப்பணிப்பு உள்ளவர்கள் என்ற அனுமானத்தில் அடுத்து வரும் பதிவுகளை பகிர்கிறோம்.

அடுத்த பதிவில் குருமார்கள் பற்றிய அறிமுகம்….

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

எம்மை மாற்றும் இரசவாதம் - நல்ல நூற்கள் படித்தல்

மனித மனம் எதையும் ஈர்த்து பதிவித்து அதை பின்னர் கதிர்ப்பிக்கும் ஆற்றல் உடையது. இது எந்த சூழலில் இருக்கிறதோ அந்தச்சூழலை எண்ணமாக தன்னில் பதி...