வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்!


எமது பதிவுகளை தொடர்ந்து வாசித்துவரும் அன்பர்களுக்கு எமது வேலைப்பளு காரணமாக தொடர்ச்சியாக எழுத முடியாமல் போனமைக்கும் வருத்தத்தினை தெரிவித்துக்கொண்டு குருவருளால் உங்கள் எதிர்பார்ப்பினை சிறிதளவாவது பூர்த்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். 

இதுவரைகாலமும் யோகமார்க்கம், சித்தர்களது வித்தைகள் என்பவற்றிற்கு எமது கற்கையில் எமது மனதில் உண்டாகும் தெளிவுகளை நேரம் கிடைக்கும் போது எழுத்துருவேற்றி பதிவித்து வந்தோம். எது வித ஒழுங்குமுறையும் இருக்கவில்லை. சில பதிவுகள் அரைகுறையாக விடுபட்டும் உள்ளன. ஆதலால் குருவருளுடன் ஒரு சில எல்லைகளை வகுத்துள்ளோம். இனி வரும் ஒரு மாதகாலத்திற்கு அக்டோபர் 31 ம் திகதிவரையிலான காலப்பகுதியிற்கு ஒவ்வொரு நாளும் காலை 10.00 மணியளவில் ஒரு பதிவு பதிப்பிக்கும் படி கட்டுரைகளை ஒழுங்கு படுத்த எண்ணியுள்ளோம். செப்டெம்பர் 30 வரையிலான பதிவுகள் முற்றாக எழுதி வலையேற்றியாகி விட்டது, ப்ளாக்கர் தானியங்கியாக தினசரி 10.00 IST மணிக்குபதிப்பிக்கும். 

இந்தப்பதிவுகள் கீழ் வரும் விடயங்களை உள்ளடக்கி இருக்கும்; 

காயத்ரி சாதனை: அடுத்த மாதம் நவராத்ரியினை ஒட்டி எமது வலைப்பின்னலைப்படிப்பவர்கள் பயன் பெற எமது குருபரம்பரையில் பெற்ற காயத்ரி சாதனை நுணுக்கங்களை எதுவித பாகுபடின்றி அனைவரும் செய்யக்கூடிய விதத்தில் வெளியிட உள்ளோம். இதுவே நவராத்ரி முடியும் வரையிலான பெரும்பகுதியாக இருக்கும். 

சூஷ்ம திருஷ்டி பதிவுகள்: இதன் மிகுதி பகுதிகள் பதிவிக்கப்படும், கிட்டத்தட்ட 05 - 06 பதிவுகளில் இது முடியும். இது முடியும் தருவாயின் அடுத்த பதிவாக முன்னைய பதிவுகளில் விடுபட்ட ஞானகுரு, அகத்தியர் ஞானம் மற்றும் சிறு குறிப்புகள் பதிவுகள் முடிவுக்கப்படும். 

வாசகர்களே எம்மை எழுதவேண்டும் எனத்தூண்டுவது யாராவது ஒருவரவது இந்த எழுத்துக்களால் பயன்படுகிறார்கள் என்ற மனத்திருப்தியே! ஆதலால் வாசிக்கும் பதிவுகளுக்கு ஒருவரியிலாவது உங்கள் ஆவலை தெரியப்படுத்துங்கள், இது எம்மை மேலும் சிரத்தையுடன் எழுதத்தூண்டும். அந்த வகையில் சிரத்தையுடன் கருத்து தெரிவுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்! 

Comments

 1. வணக்கம்
  தங்களது பதிவுகளை தினமும் பார்க்கிறேன். குருவருளால் உங்கள் முலம் பல தகவல்களை அறியமுடிகிறது. பாராட்டுக்கள்.

  வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 2. எண்களின் விருப்பத்தை ஏற்று சிரத்தை எடுத்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி....

  தங்களின் பதிவுகள் படிப்பவர்கள் அனைவரும் கருத்து வெளியிட வேண்டும் என எதிர்பார்ப்பது சரியன்று...பதிவிடுங்கள் அவை என்றாவது ஒருநாள் எவருக்கேனும் பயனுள்ளதாக அமையலாம்....கவலையை விடுத்து,தொடருங்கள்...

  ReplyDelete
 3. I'm reading your blog daily. Its very useful. Please continue posting. - CSRK

  ReplyDelete
 4. Sir,
  You are doing an wonderful job sharing all these information with everyone.

  Thanks a lot
  Rajasimhan

  ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு