- ஓம் தாயே நமஹ அல்லது போற்றி - சாதகன் பெற்ற தாயினை நினைத்து அவரின் ஆசியினை மானசீகமாக பெறுவதாக பாவிக்கவும், பெற்ற தாயே ஒருவனின் முதல் குரு,
- ஓம் தந்தையே நமஹ அல்லது போற்றி - தந்தையினை நினைத்து அவரின் ஆசியினை மானசீகமாக பெறுவதாக பாவிக்கவும், தகப்பன் இரண்டாவது குரு.
- ஓம் ஸத்குருவே நமஹ அல்லது போற்றி - உங்களை ஞானப்பாதையில் வழிகாட்டிய அனைத்து குருமாரையும் நினைத்து அவர்களின் மானசீக ஆசியினை பெறுவதாக பாவிக்கவும்.
- குரு ப்ரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரஹ குரு சாஷ்ஷாத் பரப்பிரம்மம் தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ - இதன் பொருள் சுருக்கமாக குருவே பிரம்மா, விஷ்ணு, சிவ ஸ்வரூபமாக எனக்கு பிரத்தியட்சமாக இருப்பவர், அவரே பரப்பிரம்ம ஸ்வரூபம் இத்தகைய குருவை நான் வணங்குகிறேன்.
- ஆனந்தம் ஆனந்தகரம் ப்ரசன்னம் ஞானஸ்வரூபம் நிஜபோத ரூபம் யோகேந்திர மீட்யம் பவரோஹ வைத்தியம் ஸ்ரீம் ஸத்குரும் நித்யம் அஹம் பஜாமி
- ஓம் காயத்ரி சித்தரே நமஹ - சூஷ்ம உடலில் இருந்து பூவுலகில் காயத்ரி சாதனை செய்பவர்களுக்கு வழிகாட்டி வரும் குரு
- ஓம் கண்ணைய யோகீஸ்வரரே நமஹ
- ஓம் அகஸ்திய மகரிஷியே நமஹ - இந்த குருபரம்பரையின் ஆதிகுரு, கண்ணைய யோகீஸ்வரரின் குரு.
- ஓம் விஸ்வாமித்திர மஹரிஷியே நமஹ - காயத்ரி மந்திரத்தினை முதலில் உணர்ந்து உலகம் பயன் பெறவேண்டும் என வழங்கியவர்
- ஓம் வஷிஷ்ட மஹரிஷியே நமஹ - காயத்ரி மந்திரத்தின் சக்தி தகுந்த பக்கும் அற்றவர்களுக்கு செயற்படக்கூடாது என சாபம் வழங்க்கியவர்
- ஓம் பிரம்மாவே நமஹ - காயத்ரி மந்திரத்தின் சக்தி தகுந்த பக்கும் அற்றவர்களுக்கு செயற்படக்கூடாது என சாபம் வழங்க்கியவர்
அடுத்த பகுதியில் பிரணாயாமம் பற்றி பார்ப்போம்...
This is really very useful. very excited to see the rest of the parts. Thanks a lot. - CSRK
ReplyDeleteமிக்க நன்றிகள்
ReplyDeleteஅருமையான தகவல்கள்' பாராட்டுகள்.
எனக்கு இரண்டாம் பகுதியின் இரண்டாம் குருமந்திரமும் அதன் தொடர்வையும் சற்று விளக்கவும்.
மற்றவை அணைத்தையும் இலகுவாக விளங்கிகொண்டேன்...
குருவே போற்றி
வாழ்க வளமுடன்