குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, November 02, 2023

கர்ம யோகம் கற்கை நெறி

 

கர்ம யோக சாதனை பாடங்கள் தயார்!

சென்னையில் இருந்து வந்து இறங்கி இரண்டு நாட்களுக்குள் கற்கை நெறியைத் தயார் செய்தாயிற்று!
மொத்தம் எட்டுப் பாடங்கள் - இது சுவாமி விவேகானந்தரின் கர்ம யோகம் உரையினை அனைவரும் புரிந்துகொண்டு தமது வாழ்க்கைக்கு எப்படி பயன்படுத்துவது என்ற இலக்கினை உடையது.
இந்த எட்டுப் பாடங்களதும் மையக் கருத்து (core concept) என்ன என்பதை விளக்கி, அதைப் புரிந்துகொள்ள வைப்பது இந்த முயற்சி!
நீங்கள் முதலாவது பாடத்தை கற்றபின்னர் கீழ்வரும் விஷயங்களைப் புரிந்துகொண்டு உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடியவராவீர்கள் என்பதை கீழ்வரும் பட்டியல் சொல்கிறது.
ஒவ்வொரு பாடமும் நான் கு பகுதிகளைக் கொண்டது.
பகுதி - 01: குறித்த பாடத்தில் என்ன விடயங்களை கற்றுக்கொள்ளப் போகிறீர்கள் என்ற இலக்கினை நிர்ணயிக்கும்.
பகுதி - 02: சுவாமி விவேகானந்தரது மூல பாடம்; முக்கியமான கருத்துக்கள் bold & highlight இல் இருக்கும்.
பகுதி - 03: பாடத்தின் முக்கிய கருத்துக்களின் சுருக்கம் இருக்கும்.
பகுதி - 04: கற்றுக்கொண்டவற்றை சரி பார்க்க google form இல் பரீட்சை இருக்கும்.
இப்படி எட்டுப் பாடங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
ஒன்பதாவது பாடம் எப்படி கற்றுக்கொண்ட கர்ம யோக தத்துவங்களை நாளாந்த வாழ்க்கையில் பயன்படுத்துவது என்ற ஒவ்வொருவருக்கும் உரிய யதார்த்த திட்டம் கற்பிக்கப்படும்.
முதலாவது பாடத்தில் நீங்கள் கற்றுக்கொள்ள இருக்கும் கர்ம யோக சாதனை தத்துவங்கள்
*********************************************************
1. கர்மம் என்ற சொல்லின் விளக்கம்
2. நாம் செய்யும் கர்மங்கள் எப்படி எமது குணத்தை உருவாக்குகிறது என்ற தொடர்பு
3. குணத்தை உருவாக்கும் காரணிகள் எவை
4. கர்மம் செய்வதன் நோக்கம் என்ன என்ற தெளிவு
5. அறிவு எங்கிருந்து வருகிறது
6. கற்றல் என்பதன் உண்மையான விளக்கம்
7. அறிவு மனதிற்குள் எப்படி மறைந்திருக்கிறது
8. அறிவு மனதிற்குள்ளிருந்து எப்படி வெளிக்கொண்டுவருவது
9. கர்மத்தை சரியான மனப்பாங்குடன் செய்வதனாலேயே அறிவு வெளிப்படுகிறது.
10. கர்மத்தை நாம் எப்படிச் செய்கிறோம்?
11. மனிதன் இந்தப் பிரபஞ்சத்திலிருக்கும் சக்திகள் அனைத்தையும் கவர்ந்து இழுத்து, ஒருங்கிணைத்து, வெளிச் செலுத்தும் ஆற்றல் உள்ளவன் என்ற உண்மையும், அவன் செய்யும் செயல்கள் எப்படி அவனது குணத்தை உருவாக்குகிறது என்பதும்.
12. எண்ணங்களின் வெளித்தோற்றமே செயல் என்ற உண்மை
13. எண்ணங்களுக்கும் சுயேச்சை - will power இற்குமிடையிலான தொடர்பு
14. ஒருவனுடைய சுயேச்சை - will power சக்தி எப்படி உருவாகி செயற்படுகிறது.
15. சுயேச்சை - will power – குணம் – கர்மம் ஆகியவற்றிற்கிடையிலான தொடர்புகள்
16. எமக்குரிய தகுதியை செயல்தான் நிர்ணயிக்கிறது என்ற உண்மை.
17. சரியான செயல் புரிவதன் மூலம் எதிர்காலத்தினை நாம் மாற்றியமைக்க முடியும் என்ற உண்மை
18. கர்ம யோகம் என்றால் என்ன?
19. பலனுக்காக செயல் புரிதலும் – செயலுக்காக செயல் புரிதலுக்கும் உள்ள வேறுபாடு.
20. பலன் கருதாமல் செயல் புரிவதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?
21. ஒருவனுக்கு தர்மத்தில் நிலைத்து நிற்கும் சக்தி எப்படி வாய்க்கிறது?
22. எப்படி எமது ஆற்றலை நாம் வளர்ப்பது?
23. செயல் செய்யும் போது நமக்கு இருக்க வேண்டிய மனப்பாங்கு
24. இலட்சிய மனிதனின் வரைவிலக்கணம் என்ன?
25. கர்ம யோக இலட்சியமும் கர்மத்தின் இரகசியமும்
26. சுய நலமில்லாமல் செயல் புரிவது எப்படி?
கற்கையில் இணைந்து கொள்ள முதலாவது comment இல் உள்ள வாட்ஸப் குழுவில் இணையுங்கள்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...