ஒரு பாடசாலையின் நிர்வாகம் தனது இலக்கினை, வினைத்திறனை எப்படி நிர்ணயிக்க வேண்டும். இதற்குரிய ஆய்வு முறை என்ன?
நடந்து முடிந்த பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடும் போது இத்தனை சதவீதம் சித்தி என்று வெறுமனே ஒற்றை இலக்கத்தில் இதனைக் கூறிப் பெருமைப்பட்டுகொள்ள முடியாது.
நிர்வாகம் ஒவ்வொரு வருடமும் அதன் முன்னைய வருடங்களிலிருந்து தாம் எவ்வளவு முன்னேறி இருக்கிறோம், பின்னே சறுக்கியிருக்கிறோம் என்ற ஆய்வு அதி முக்கியமானது.
O/L சித்தியடைந்த மாணவர்களில் எத்தனை பேரை A/L வரை கொண்டு சென்று பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினை, சூழலை பாடசாலையில் ஏற்படுத்துகிறோம் என்பதும், அதற்கான திட்டம் என்ன என்பதும் அதிமுக்கியமானது.
O/L சித்தியடையாத மாணவர்களை மீண்டும் சித்தியடைய வைக்கும் வாய்ப்பினை எப்படி உருவாக்குகிறோம் என்பது கேட்கப்படவேண்டும்.
O/L இலிருந்து A/L முடியும் இரண்டு வருடத்திற்குள் பொருளாதாரம், உளவியல் காரணங்களிற்காக எத்தனை மாணவர்கள் பாடசாலைக் கல்வியை விட்டு நீங்குகிறார்கள் என்பது ஆராயப்பட வேண்டும்.
இந்தக்காரணங்களை நிவர்த்தி செய்ய பெற்றோர் ஆசிரியர் சங்கம், பழைய மாணவர்கள் சங்கம், கல்வி அபிவிருத்திச் சங்கங்களின் வளங்களை, உதவிகளை எப்படிப் பெறுவது என்ற மூலோபாயம் இருக்க வேண்டும்.
பாடசாலையில் மாணவர்கள் தகுந்த பெறுபேறுகளைப் பெறவில்லை என்றால் அதற்குரிய உளவியல் காரணம், பாடசாலைச் சூழல், ஆசிரியர் உத்வேகம், குடும்ப பொருளாதாரம் என்பவை ஆராயப்படவேண்டும்.
இவற்றை வெறுமனே அட்டவணைப்படுத்தி அறிக்கைகளில் உறங்கவிடாமல் உரையாடல் களங்கள், வாதப்பிரதிவாதங்களுக்கு உட்படுத்தி அடுத்த வருடம் இன்னும் சிறப்பாக பெறுபேறுகளைப் பெறுவது எப்படி என்று சிந்திக்கவேண்டும்.
இதற்கு சிறுபிள்ளைத் தனமான அதிபரைக் குற்றம் சாட்டுதல், ஆசிரியரைக் குறைகூறுதல், பெற்றோரைக் குறைகூறுதல் என்று குட்டையை குழப்பாமல் பிரச்சனையை சரியாக அறிவுப் பூர்வமாக புரிந்துகொண்டு ஊர்கூடி தேர் இழுக்க வேண்டும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.