மலையகத்திற்கு அந்நிய செலாவணியை பெற்றுத்தருவது தேயிலை, இறப்பர், கொக்கோ என்று பழைய சமூகக்கல்விப் பாடத்திட்டத்தில் கற்பிப்பதை நம்பிக்கொண்டு அந்தப் பெருந்தோட்டத்தினை முகாமைத்துவம் செய்யும் கம்பனிகளுடன் போராடிக்கொண்டிருக்கும் அரசியல் வழக்கத்திற்கு ஜனாதிபதி எடுத்த ஒரு முடிவு game changer ஆக மாறுமா?
உர இறக்குமதியைத் தடை செய்தல்; இது மேலோட்டமாகப் பார்த்தால் விவசாயிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்று எண்ணத்தோன்றும்; ஆனால் ஒவ்வொரு தடையும் அதைத்தாண்டி புதிய நிலையை அடைவதற்கான பரீட்சை என்ற பார்வையில் பார்த்தால் இது மிகப்பெரிய வாய்ப்பு!
நுவரெலியாவின் மரக்கறிச் செய்கையை Organic ஆக மாற்றுவதற்கு இதைவிட வேறு அரிய சந்தர்ப்பம் இல்லை என்று சொல்லலாம்.
இப்படியொரு சந்தர்ப்பம் கியூபாவிற்கு 1989 களில் நடந்தது.
சோவியட் யூனியனை மாத்திரம் ஒற்றை நம்பிக்கையாக ஏற்றுமதி நாடாகக் கொண்டு கரும்புச் செய்கையில் ஈடுபட்ட கியூபா 1989 இல் சோவியட் யூனியன் உடைந்ததுடன் விவசாயத்திற்கு தேவையான உர இடுபொருட்களை பெறமுடியாமல் போனது. உடனே மக்கள் அனைவரும் அரசினைக் குறைகூறாமல், கொள்கை வகுப்பாளர்கள் இப்படி ஆகிவிட்டதே என்று புலம்பாமல் மாற்றி யோசிக்க ஆரம்பித்தார்கள். இதனால் உருவாகியது Organic revolution.
இதில் இரண்டு உத்திகளைப் பயன்படுத்தினார்கள்;
1. Urban agriculture: நகரத்தில் கிடைக்கும் சிறு இடங்களில் எல்லாம் உற்பத்தி செய்வது.
2. Organic Production: கியூபாவின் சேதன விவசாய முறையை ஆராய்ந்த Peter Rosset கூறுகிறார்; அவர்கள் (கியூபா) இரண்டு விடயங்களைச் செய்தார்கள்; 1) அவர்களுடைய முன்னோர்கள் நவீன உரம், பீடை நாசினிக்கு முன்னர் எப்படி விவசாயம் செய்தார்கள் என்பதை ஞாபகப்படுத்தினார்கள்- ஊடுபயிர்களுடன், பயிர் சுழற்சி, இலைகுழை, விலங்குக் கழிவுகளை மண்ணிற்குக் கொடுத்தல் - இவற்றை பயிற்சிக்கத் தொடங்கினார்கள். 2) தாவர இடுபொருள்களிலிருந்து நவீன அறிவியலைக் கொண்டு biopesticides and biofertilisers தயாரிப்பில் ஈடுபடத்தொடங்கினார்கள்.
இன்று இலங்கை அமைச்சரவையின் இளம் அமைச்சரும், இலங்கையில் அதிக விவசாயிகள் வசிக்கும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற மக்கள் பிரதிநிதியுமான கௌரவ அமைச்சர் Jeevan Thondaman அவர்கள் உர இறக்குமதித்தடை காரணமாக விவசாயிகளுக்கு ஏற்படுள்ள இந்தப்பிரச்சனையைப் பற்றி கலந்துரையாடியதாக தனது முகநூலில் தெரிவித்துள்ளார். வழமையாக இப்படியான பிரச்சனைக்கு உடனடியாக உரத்தை இறக்குமதி செய்ய அரசிடம் விண்ணப்பிப்போம் என்ற திசையில் சிந்திக்காமல் இதை, நுவரெலியா ஒரு பெரும் விவசாய பூமி, இதை நாம் organic ஆக மாற்றினால் தேயிலைக்கு ஈடாக மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு மரக்கறி ஏற்றுமதி செய்யலாம்; தேயிலைத் தோட்டங்களைத் தாண்டி வளமான எதிர்காலத்தை எமது மக்களுக்கு ஏற்படுத்தலாம் என்ற அடிப்படையில் சிந்திக்க வேண்டும்.
அரசியல் பிரச்சனையாகப் பார்க்காமல் மாற்றுவழிகள், அறிவியல் வழிகள் இருக்கிறதா என்று ஆராய வேண்டும். பாரதத்தில் தமிழ் நாடு, மகாராஷ்ரா ஆகிய இடங்களில் வெற்றிக்கதைகள் நிறைய இருக்கிறது. இதை எப்படி எமது சமூகத்திற்கு பாவிக்கலாம் என்ற சிந்தனை உருவாக வேண்டும்.
கீழே உள்ள நூல் இந்த சந்தர்ப்பத்திற்குரிய வழிகாட்டி;
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.