இன்னும் சில நியாய சாஸ்திர விளக்கங்கள்
6) மரச் சந்திர தர்க்கம் (ஸாக சந்திர நியாயம்)
******************************
சந்திரனை நேராகக் காண முடியாமல் வனத்திற்குள் தவிக்கும் ஒருவனிற்கு முதலில் மரத்தின் கிளைகளைப் பார்க்கச் சொல்லி பிறகு கிளைகளுக்கு பின்னால் இருக்கும் சந்திரனைப் பார் என்று படிப்படியாக புரிதலை உருவாக்கும் முறை.
இதுபோல் இறைவனைக் காணவேண்டும் என்று கேட்பவனுக்கு அவனது மனம் என்று காடு இருள் சூழ்ந்து இறை ஒளியைப் பார்க்க முடியாமல் இருந்தால் முதலில் மனதைச் செம்மைப்படுத்த உபாசனை, பூஜை, மந்திரம் என்று கிளைகளைக் காட்டி பின்னர் அதற்குப் பின்னால் இருக்கும் ஜோதியான இறைவனைக் காட்டும் முறை.
7) கூப மண்டூக தர்க்கம்
****************************
கூபம் என்றால் கிணறு, மண்டூகம் என்றால் தவளை; கிணற்றுத்தவளை கடல் என்ற ஒன்றோ, ஆறு என்ற பெரிய நீரோட்டம் இருக்கிறது என்றோ நம்பாது! அதுபோல் தமது அனுபவம் மாத்திரமே உண்மை என்று நம்பும் முட்டாள்தனம்.
இன்று யோகம் உபாசனை, கற்பவர்கள் கற்கும் ஆசிரியரிடம் இப்படி கிணற்றுத்தவளைத் தர்க்கத்துடன் தான் கேள்வி கேட்க வருகிறார்கள். தமது அனுபவம் மாத்திரமே உண்மை என்றும் அதற்கு மேல் ஏதும் இருக்க முடியுமா என்ற செருக்குடன் கேள்வி கேட்கும் பாங்கினைக் காணமுடியும்.
அறிவைப் பெறவிரும்புபவர்கள் தமது கிணற்றுத்தவளைத்தனத்தை விடவேண்டும்.
தண்டுல விருக்ஷிக தர்க்கம்
**********************************
அரிசி மூட்டையில் இருந்து தேள் குஞ்சுகள் வந்தால் அரிசியில் இருந்துதான் தேள் உருவாகிறது என்ற முட்டாள்தனம். அரிசிக்குள் தாய்த்தேள் இட்ட முட்டைகள் அரிசியின் சூட்டினால் பொரிந்து அவை வருகிறது என்ற ஆழ்ந்த தெளிவு இல்லாமை.
இதைப்போல் மனிதன் தனக்கு நடக்கும் அனைத்துக்கும் மேலோட்டமாக ஸ்தூல காரணிகளே காரணம் என்று ஆழமான சூக்ஷ்ம காரணிகளைப் பற்றி அறியாமல் இருக்கும் முட்டாள்தனம் இதனால் புரியப்படும்.
9) காக்கை இருக்க பனம் பழம் விழுதல் என்ற தர்க்கம்
******************************************************************
பனம் பழம் வெகு இலகுவாக குலையை விட்டுக் கழராது; இதனால்தான் நோகாமல் நுங்கு தின்ன ஆசைப்படுரான் என்று கூறுகிறோம். இப்படி உறுதியாக குலையுடன் இருக்கும் பனம் பழம் எளிய காகம் இருக்க விழுந்தது என்று வாதிடும் ஆழமற்ற முட்டாள்தனத்தைக் கூறும் தர்க்க முறை.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.