நாம் கனவு கண்ட கனவாகிய இயற்கை வழி விவசாயத்தினை நோக்கி இலங்கை நகர்கிறது!
மூன்று வருடங்களுக்கு முன்னர் எனது வாழ்க்கைப் பாதையை மாற்ற தெய்வாதீனமாக நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன்! அப்போது முழுமையாக நவீன விவசாயத்தினை பெரும் வணிக அடிப்படையில் செய்ய அனுபவம் உடைய நான், நண்பர் ஒருவரால் "இல்லை இயற்கை விவசாயம் செய்வோம்” என்று உந்தப்பட, அது நான் கற்ற சூழலியலிற்கும் இதயத்திற்கும் அருகில் இருந்ததால் ஏற்றுக்கொண்டு ஆரம்பித்தோம்!
ஸ்ரீ அரவிந்தர் பிரக்ஞை (consciousness) மாற்றத்தினைப் பற்றிப் பேசுகிறார்; உலகை மாற்ற விரும்பினால், நீ விரும்பும் உலகை முதலில் உனக்குள் படைத்து நீ உருமாறு (transform yourself), பின்னர் அதை நூறு பேரை படைக்கும்படி உதவி செய்! அந்த நூறு பேர் அதைப் பயிற்சிக்க, மெதுவாக உலகம் அந்த நிலையை அடையும் தன்மையை தன்னுள் உருவாக்கும் என்று!
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு யோகசாதனையாக நிலம் ஒன்றை எடுத்து இயற்கை விவசாயப் பண்ணையை வடக்கில் அமைத்தோம்! அதேவேளை இன்னொரு பக்கம் யாழ்ப்பாணத்தில் தம்பி Dr. Prabu Nadaraja அவர்களும் நண்பர்களும் இயற்கை வழி இயக்கம் என்று ஆரம்பித்து உணர்வுப் பூர்வமாக செயற்பட ஆரம்பித்தார்கள்! ரஜிந்தன் Rajethan Makeswaran Jenojan Kanthasamy Suje Tharma Nivetha Sivarajah மகேஸ்வரநாதன் கிரிசன் இயற்கைவழி விவசாயிபோன்ற இன்னும் பல இளைஞர்கள் இதில் உணர்வுப்பூர்வமாக ஈடுபட்டு வந்துள்ளார்கள்.
இன்று இலங்கை அரசாங்கம் இதனை எதிர்காலத்தின் தேவையாக உணர்ந்திருக்கிறது. எதிர்காலத்திற்கு பயன்படக்கூடிய அறிவில் நாம் உத்வேகப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்பது மிகவும் மகிழ்வு தரும் செய்தி!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.