குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, May 31, 2021

தலைப்பு இல்லை

ஹம்ஸ யோகம் - 24 பயிற்சியின் அடிப்படை நுணுக்கங்களைக் குறிப்பிடுகிறது. 

பயிற்சி நுணுக்கங்கள் எப்போதும் குருமுகமாக பயிலவேண்டும் என்பது யோகத்தின் எழுதப்பட்ட, எழுதப்படாத அடிப்படை விதி!


Sunday, May 30, 2021

தலைப்பு இல்லை

“மேதா சக்தி என்பது அறிவினை சேகரித்து, தொகுத்து, மனதில் ஒழுங்குபடுத்தி அறிவினை மனதில் தரிக்கும் ஆற்றல் ஆகும்.

இதை நவீன மூளை-உளவியல் அறிவியலில் Cognition என்று சொல்லப்படும் சொல் மூலம் புரிந்து கொள்ள முனையலாம்.”

மேதா சக்தி பெறுவதால் என்ன பயன்? அதன் விளக்கம் என்ன? அதை பெறுவதற்கான பண்புகள் என்ன? போன்ற முழு விபரமும் “யோகமும் இயற்கையும்” என்ற இந்நூலின் இரண்டாம் தலைப்பில் படித்தறியலாம்!

நூல் வாங்க: https://imojo.in/SVVVol01

(அ) WhatsApp/Telegram order +918072549625


Saturday, May 29, 2021

தலைப்பு இல்லை

இன்று ஹதயோகத் திறவுகோல் வகுப்பு சிறப்பாக ஆரம்பித்தாயிற்று; இன்று ஸ்ரீ கண்ணைய யோகியாரின் ஆங்கிலத் திகதி பிறந்த நாள். 

1964ம் ஆண்டு கார்த்திகை மாதம் வெளிவந்த ஆத்ம ஜோதி இதழில் குரு நாதர் இராஜயோகமும் ஹடயோகமும் என்று ஒரு ஒப்பீட்டு கட்டுரையை எழுதியிருக்கிறார். 

ஸ்ரீ கண்ணைய யோகியார் யோகேந்திர மீட்யம் எனும் யோகத்தின் அதியுச்ச நிலையை அடைந்தவர். ஹத யோகம், இராஜயோகம், தந்திர யோகம், மந்திர யோகம் என்று அனைத்திலும் சித்தி பெற்ற ஒரு யோகீந்திரர். 

அகஸ்தியர் வழி வந்த யோகிகள் மனதை - அகத்தை நெறிப்படுத்திச் செய்யும் இராஜயோக வழியினர். 

கோரக்க மத்ஸ்யேந்திர நாத சம்பிரதாய சித்தர்கள் உடலை, பிராணனை வலுப்படுத்தும் ஹதயோக சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள். 

ஹதயோகம் உலக மாயையிலிருந்து மனதை உடனடியாக கட்டுப்படுத்த முடியாதவர்களுக்குரிய மார்க்கம். 

அனைத்து மாணவர்களும் இந்தக்கட்டுரையைப் படிக்கும்படி வேண்டப்படுகின்றனர். 

நன்றி: Noolaham Foundation


தலைப்பு இல்லை

இன்று எனது குருவின் குருவான ஸ்ரீ கண்ணைய யோகீஷ்வரரின் ஜெனன திகதி! 

திதிப்படி பார்த்தால் வைகாசிப் பௌர்ணமி! இன்னும் நாள் இருக்கிறது! 

தனது மாணவர்களுக்கு 70 வருடங்களுக்கு முன்னர் 03 - 04 கார்பன் வைத்து கையெழுத்தில் பாடங்கள் எழுதி நேர்முக யோகப்பயிற்சி கொடுத்த பெருந்தகை! 

தமிழ் சமஸ்கிருத பண்டிதர்; படிக்க வசதியில்லாத நிலையில் பச்சையப்பா கல்லூரி பண்டிதரின் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கம்பராமாயண வகுப்புகளை செவிமடுத்து தனது ஞாபக சக்தியால் பாடல்களையும் அதன் பொருளையும் ஒப்புவித்து அவரின் அன்பைப் பெற்று பண்டிதர் பரீட்சை எழுதி சித்திபெற்றார். 

அவர் எழுதிய ஆத்ம யோக ஞான எழுத்துக்களை அவரது மாணவர்களான எனது குருநாதர் ஆர். கே. முருகேசு சுவாமிகளும், சென்னை ராஜயோகி ராஜமோகன் ஐயா அவர்களுமாக பதிப்பித்துள்ளார்கள்! இவர்கள் இருவரும் ஸ்ரீ கண்ணைய யோகியராலேயே தனது பணியை முன்னெடுத்துச் செல்ல பணிக்கப்பட்ட அவரது முதன்மை மாணவர்கள்! 

அவரது கைப்பட எழுதிய பாடங்களை படியெடுத்துப் படிக்கும் பாக்கியம் பெற்றவன் என்ற வகையில் நான் புண்ணியசாலி! 

அகத்தியமகரிஷியால் தமிழ் பேசும் மக்கள் தற்கால நிலைக்குத் தகுந்தவாறு உபாசனை ரகசியங்களை எளிமைப்படுத்தி கற்பிக்கும் படியும், அன்னை காயத்ரியின் உபாசனையை தமிழ் பத்ததி (பூஜை முறை) செய்யும்படியும் பணிக்கப்பட்டு அதற்காக அனேக விஷயங்களை எழுதி வைத்துச் சென்றுள்ளார். 

ரிஷி தயானந்தரின் சத்தியர்த்த பிரகாசம் நூலை 1935 இல் தமிழில் மொழிபெயர்த்தவர்! 

இலங்கைக்கு 1963 இல் சேர். பொன். அருணாச்சலம் அவர்களின் மகன் சிவானந்தம் தம்பையா அவர்களின் அழைப்பில் விஜயம் செய்தார். கொச்சிக்கடை தம்பையா சத்திரத்தில் உள்ள அனந்த பத்மநாதர் கண்ணைய யோகியார் பிரதிஷ்டை செய்தது. 

இலங்கையில் 1961ம் ஆண்டு ஆத்ம யோக ஞான சபாவினை திருமதி தம்பையாவை தலைவராகவும், ஆர். கே. முருகேசு சுவாமிகளை செயலாளராகவும் கொண்டு ஸ்தாபித்து, ஆத்ம ஜோதி இதழில் பல ஆன்மீக கட்டுரைகள் ஸ்ரீ கண்ணைய யோகியாரால் எழுதப்பட்டது. பின்னர் ஆத்ம யோக ஞான சபை நுவரெலியா காயத்ரி பீடமாக சுவாமிகளால் தனது குருநாதரின் ஆசியும் விரிவும் பெற்றது.

ஸ்ரீ கண்ணைய யோகியார் தான் வாழும் காலத்தில் வெறுமனே ஒரு ஜோதிடராக அறியப்பட்டவர். ஒரு சிறிய மாணவர் குழுவிற்கு மாத்திரமே குருநாதரின் ஆணையின்படி யோகவித்தையை கற்பித்தவர். தனது மாணவனாக இருப்பதற்கு தகுதி என்னவென்பதை வரையறுத்தவர்;

இன்றைய நாளில் ஒருவன் யோகசாதனையில் தனது மாணவனாக இருக்க வேண்டும் என்றால் என்ன தகுதி இருக்க வேண்டும் என்று அவர் கூறியதை இங்கு பகிர்கிறேன்;

*******************************************************************

என் மாணவன்

1) நான் இன்ன சாதி என்று நினையாதவன்.

2) மனைவி மக்களை விட்டு சாமியாராக ஓடினால் தான் சாதனை செய்யலாம் என்று கருதாதவன்.

3)ஆசாபாசங்களைக் கொண்டவன் போலிருந்தும் உள்ளத்தில் அதைக் கொள்ளாதவன்.

4) கோபதாபம் உடையவன் போல் கருதப்பட்டும் அவைகளை அடக்கியவன்.

5) பண்டிகை, விரதம், நோன்பு என்ற பெயரில் பணத்தைச் செலவழிக்காதவன். 

6) எதைச் செய்தாலும் அதை ஏன் செய்கிறோமென்று யோசித்து செய்பவன்.

7) தனக்கு இன்பம் தரும் காரியங்களில் மட்டும் ஈடுபடாமல் தனக்கு நன்மை தரும் காரியங்களில் ஈடுபடுபவன்.

 மாமன், மைத்துனன், தங்கை, அண்ணன் என்ற உறவுகளுக்கு உதவி செய்வதற்காகத் தன் இறை சாதனையினை விட்டுக்கொடுக்காதவன்.

9) வாழ்க்கையில் மற்றைய எல்லா காரியங்களை விடச் சாதனை மிக முக்கியமானது எனக்கருதி எக்காரணத்தாலும் சாதனையினைத் தவற விடாதவன்.

10) கண்ட புத்தகங்களைப் படித்து மனதைக் குழப்பிக்கொள்ளாதவன்.

11) எத்தொழிலைச் செய்தாலும் தன் செயல்களின் மறைவில் ஓர் சக்தி இருக்கிறது என்பதனை உணர முயற்சி செய்த வண்ணமிருப்பவன்.

12) சமயச் சழக்கெனும் (மதம் எனும்) சேற்றிலிருந்து துணிகரமாக மீள முயற்சிப்பவன்.

13) ரிஷி மரபின் உண்மைகளைத் தெரிந்து அதன் வழி நடப்பவன்.

அவனே என் மாணவன். அவனுக்குத்தான் என்னில் பொதிந்து கிடக்கும் ஆன்மீக ரத்தினங்கள் பகிர்ந்தளிக்கப்படும்.

- யோகி கண்ணையா -


வாக்பட ஆரோக்கிய சூத்திரம் அல்லது நோயணுகா விதி

எவனொருவருவன்,

1. உணவை அளவுடனும், ஆகார நியமத்துடனும் (தனது உடல் எதை ஏற்கும் ஏற்காது, குளிர், உஷ்ண காலத்திற்கு உகந்தது, தகுந்தது என்ற அறிவுவுடன் தேர்ந்து) உண்கிறானோ

2) தனது மனதிற்கு இலட்சியத்தை வைத்திருக்கிறானோ - தினசரி எழுந்தவுடன் உற்சாகத்துடன் செய்வதற்கு கடமைகள் உள்ளவனாக இருக்கிறானோ

3) புலன் இன்பங்களில் அதிக நாட்டம் இல்லாதவனாக இருக்கிறானோ

4) மற்றவர்களுடன் பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறானோ

5) உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமல் இருக்கிறானோ

6) நேர்மையாக இருக்கிறானோ

7) பொறுமையுடைய மனதைப் பெற்றிருக்கிறானோ

அகத்தின் வழியே உண்மை இருக்கிறது என்று உணர்ந்து அதை மதித்து நடக்கிறானோ 

அத்தகையவனை நோய் ஒருபோதும் தாக்குவதில்லை! 

மறுதலையாக மேற்கூறிய பண்புகள் அற்றவர்களுக்கே நோய் தாக்குகிறது. 

வாக்பட சூத்திரம் - 4: 36


Friday, May 28, 2021

தலைப்பு இல்லை

14) சமுத்திர அலைகளின் தர்க்கம் (ஸமுத்திர தரங்க நியாயம்)

**********************************************************

சமுத்திரத்தில் எண்ணற்ற அலைகள் எழுந்து மறைந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு அலையையும் பற்றி நாம் கற்கவேண்டும், அறிய வேண்டும் என்றால் அவற்றைத் தனியாகப் பார்க்க வேண்டும். ஆனால் அவை அனைத்தும் நீரின் இயக்கமே, சமுத்திரத்திலிருந்து பிரிந்த தனி இயக்கம் அல்ல! சமுத்திரம் என்ற ஒரு உண்மையின் பலவித இயக்கங்களே அலைகள். 

இப்படித்தான் இயற்கையும், பிராணனும் இயங்குகிறது! சூரியனில் இருந்து வெளிப்படும் ஏழு வர்ண அலைகளில் சில அலைகளை தாவரம் ஈர்ப்பதால் அது தாவரத்தில் உணவாக்கப்படுகிறது. சமுத்திர தரங்க நியாயம் புரிந்தவனுக்கு தான் உண்ணும் உணவு சூரிய சக்தியின் அலைவரிசை மாற்றிய உருவம் என்ற உண்மை புரியும். இப்படி ஸ்தூலத்தில் சமுத்திர தரங்க நியாயம் புரிந்தவனுக்கு இந்த பிரபஞ்சமே இறைசக்தியின் கதிர்ப்பு என்ற நியாயம் புரியும். 

15) ஸ்படிக வர்ண நியாயம் - சார்ந்ததன் வண்ணம் இயங்குதல்.

***************************************************

தூய ஸ்படிகம் எந்த நிறமும் அற்றது! ஆனால் நிறமுடைய பொருளுக்கு அருகில் செல்லும் போது அந்த நிறத்தைப் பிரதிபலிக்கும். 

இதைப்போல் மனம் தூய நிலையில் எந்தக் களங்கமும் அற்ற ஆன்மாவின் சொருபம். அது ஆன்மாவையும் இறையையும் சார்ந்திருந்தால் ஸ்படிகம் தூய்மையுடன் இருக்கும் நிலை. அது புலன்கள் வழி சார்ந்திருந்தால் வண்ணங்கள் நிறைந்த - அசுத்தமான நிலை. 

பலரும் தினசரி கண்களாலும், காதாலும், நாக்காலும் தீயவற்றை மனதிற்கு கொடுத்துவிட்டு மனம் கவலையாக இருக்கிறது, துன்பமுறுகிறது என்பது இந்தத்தர்க்கம் புரியாததால். 

மனதின் இயக்கம் புரிய வேண்டியவன் ஸ்படிக வர்ண நியாயம் புரிந்திருக்க வேண்டும். 

16) பத்ம பத்ர நியாயம் - தாமரை இலைத் தண்ணீர்

************************************************************

பத்மம் என்றால் தாமரை 

பத்ரம் என்றால் இலை என்று பொருள்

தாமரை நீரில் நிலை கொண்டாலும் அதன் இலை நீரிற்கு மேல் மிதக்கும். அதன் இலை நீருடன் ஒட்டாது. நீர் அதை அழுக வைக்க முடியாது. மற்றத் தாவரங்களின் இலை நீரில் போட்டால் அழுகி விடும். 

இந்த நியாயம் புரிந்தால் உடல், மனம் என்ற சேற்றிற்குள் தான் ஒட்டாமல் ஆன்மா அல்லது சிவம் உள்ளிருக்கிறது என்ற அறிவு கிடைக்கும். 

ஆன்மாவின் இயக்கம் புரிய, உலகில் எல்லாச் செயல்களையும் செய்து கொண்டு கர்ம யோகியாக வாழ பத்ம பத்ர நியாயம் தெரியவேண்டும். 


17) வாத கந்த நியாயம் 

**********************************

வாதம் என்றால் காற்று; கந்தம் என்றால் மணம் என்று பொருள். 

இது ஸ்படிக வர்ண நியாயம் போன்றது; காற்று நல்ல மணமோ, கெட்ட மணமோ தான் கலப்பதை எல்லாம் பரப்பும். இதுபோல் எமது மனம் புலன்களூடாக கலக்கும் அனைத்தையும் எடுத்துக்கொண்டு காவும் என்பது மனதை அறிய விரும்புவனுக்கு தெரியவேண்டிய நியாயம். 

அதுபோல் பிரம்மம் அல்லது சிவம் இந்த பிரபஞ்சப் பொருட்கள் அனைத்திலும் கலந்து இருக்கிறது. அதற்கு நல்லது, கெட்டது என்ற பாகுபாடு இல்லை என்பது இந்த நியாயம் புரிந்தவனுக்குத் தெரியும்.


தலைப்பு இல்லை

10) கயிற்றை சர்ப்பமென மயங்குதல் (ரஜ்ஜு ஸர்ப்ப நியாயம்)

இருளில் கயிற்றை மிதித்த ஒருவன் நச்சுப்பாம்பு தன்னைக் கடித்துவிட்டதாக குதித்து, பயத்தால் அழும் நிலை. அவன் நண்பர் விளக்கினைக் கொண்டுவந்து ஒளி பாய்ச்சியவுடன் சட்டென பயம் மறைந்து மனம் அமைதியடையும். 

இதைப்போலதான் நாம் எமக்கு ஏற்படும் துன்பங்களை, அறியாமை இருள் நிறைந்த மனதினால் தேவையற்ற பயங்களையும், குழப்பங்களையும் உருவாக்கிக்கொண்டு குழம்பி அழுகிறோம். அமைதியாக அறிவு எனும் ஒளிகொண்டு பிரச்சனைகளை ஆராயத்தொடங்க, அவை அனைத்தும் தீர்க்கக்கூடியவையே என்ற புரிதல் ஏற்பட்டு மனம் பயம் நீங்கி அமைதியடையும். 

எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதைத் தீர்க்கும் அறிவு என்ற ஒளி இல்லாததால் அந்தப்பிரச்சனையை பூதாகாரமாக்குகிறோம் என்பதைப் புரிந்திருத்தல் அவசியம். 

11) கானல் நீர் நியாயம் (ம்ருக த்ருஷ்ன நியாயம்)

பாலைவனத்தில் கானல் நீர் போலியானது; அதைப்பார்த்து ஓடக்கூடாது என்ற அறிவில்லாமல் பாலைவனத்தில் பயணிக்கும் ஒருவன் கானல் நீரை உண்மை என்று நம்பி அந்த இடத்தை அடைந்துவிட்டால் நீர் கிடைத்துவிடும் என்று அதை நோக்கி ஓடத்தொடங்குகிறான். இப்படி ஓடத்தொடங்கும்போது அவன் உடலில் சேர்த்து வைத்திருந்த ஆற்றலும் அதிகமாக இழந்து அங்கு நீரும் இருப்பதில்லை. அங்கிருந்து பார்க்க இன்னும் தூரத்தில் நீர் இருப்பதைப் போல் தோன்றி மீண்டும் ஓடுவான். இப்படி ஓடும் ஒருவன் எப்போதும் நீரைப் பெறுவதில்லை. தனது ஆற்றலை பாலைவனத்தின் வெப்பத்திற்கு இழந்து இறக்க நேரிடும். 

உலகவாழ்க்கையில் போலியான நட்புகள், அனைத்து இன்பங்களும் பாலைவனத்து கானல் நீர் போன்றவையே! இவை இன்பம் தரும் என்று ஓடிய எவரும் எந்த இன்பத்தையும் பெற்றதில்லை. 

12) ஆகாயம் நீலம் என்று நம்பும் நியாயம் (ஆகாஸ நீலிம நியாயம்)

பகலில் மாத்திரம் ஆகாயத்தைப் பார்த்த ஒருவன் ஆகாயம் என்றால் நீலம் என்று மாத்திரம் நம்பும் அறியாமையைக் குறிக்கும் தர்க்கம் இது. 

நாம் பலரையும் சில நேரங்களில் போடும் வேடங்களில் இவர் இப்படித்தான் என்று முத்திரை குத்தி நம்பிக்கொண்டிருக்கும் மனதின் அறியாமையைப் புரிந்துகொள்ள உதவும் தர்க்கம். 

இரவில் வானம் கறுப்பாக இருக்கும், மழையில் கருமுகில்களால் சூழப்பட்டிருக்கும் என்ற யதார்த்த உணர்வினை அறிந்திருத்தல் மூலம் ஆகாயம் பற்றி தெளிவான அறிவினைப் பெறலாம். 

இந்தத் தர்க்கம் ஒரு பொருளில் பல அமிசங்களை ஆழ்ந்து அகன்று நுண்ணி கற்க வேண்டும் என்பதைக் கூறும். 

13) கனக குண்டல நியாயம்

ஒரே தங்கத்தினை பொற்கொல்லன் தனது கலை நயத்தினால் பல்வேறு வகையான ஆபரணங்களாக வடிப்பான். அதே போல் பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருட்களும் ஒரு மூல வஸ்துவிலிருந்துதான் வந்திருக்கிறது என்ற அறிவு இருப்பவன் பேத புத்தியை வளர்த்து துன்பத்தில் விழமாட்டான்.


Thursday, May 27, 2021

தலைப்பு இல்லை

இன்னும் சில நியாய சாஸ்திர விளக்கங்கள்

6) மரச் சந்திர தர்க்கம் (ஸாக சந்திர நியாயம்)

******************************

சந்திரனை நேராகக் காண முடியாமல் வனத்திற்குள் தவிக்கும் ஒருவனிற்கு முதலில் மரத்தின் கிளைகளைப் பார்க்கச் சொல்லி பிறகு கிளைகளுக்கு பின்னால் இருக்கும் சந்திரனைப் பார் என்று படிப்படியாக புரிதலை உருவாக்கும் முறை. 

இதுபோல் இறைவனைக் காணவேண்டும் என்று கேட்பவனுக்கு அவனது மனம் என்று காடு இருள் சூழ்ந்து இறை ஒளியைப் பார்க்க முடியாமல் இருந்தால் முதலில் மனதைச் செம்மைப்படுத்த உபாசனை, பூஜை, மந்திரம் என்று கிளைகளைக் காட்டி பின்னர் அதற்குப் பின்னால் இருக்கும் ஜோதியான இறைவனைக் காட்டும் முறை. 

7) கூப மண்டூக தர்க்கம்

****************************

கூபம் என்றால் கிணறு, மண்டூகம் என்றால் தவளை; கிணற்றுத்தவளை கடல் என்ற ஒன்றோ, ஆறு என்ற பெரிய நீரோட்டம் இருக்கிறது என்றோ நம்பாது! அதுபோல் தமது அனுபவம் மாத்திரமே உண்மை என்று நம்பும் முட்டாள்தனம். 

இன்று யோகம் உபாசனை, கற்பவர்கள் கற்கும் ஆசிரியரிடம் இப்படி கிணற்றுத்தவளைத் தர்க்கத்துடன் தான் கேள்வி கேட்க வருகிறார்கள். தமது அனுபவம் மாத்திரமே உண்மை என்றும் அதற்கு மேல் ஏதும் இருக்க முடியுமா என்ற செருக்குடன் கேள்வி கேட்கும் பாங்கினைக் காணமுடியும். 

அறிவைப் பெறவிரும்புபவர்கள் தமது கிணற்றுத்தவளைத்தனத்தை விடவேண்டும். 

 தண்டுல விருக்ஷிக தர்க்கம்

**********************************

அரிசி மூட்டையில் இருந்து தேள் குஞ்சுகள் வந்தால் அரிசியில் இருந்துதான் தேள் உருவாகிறது என்ற முட்டாள்தனம். அரிசிக்குள் தாய்த்தேள் இட்ட முட்டைகள் அரிசியின் சூட்டினால் பொரிந்து அவை வருகிறது என்ற ஆழ்ந்த தெளிவு இல்லாமை. 

இதைப்போல் மனிதன் தனக்கு நடக்கும் அனைத்துக்கும் மேலோட்டமாக ஸ்தூல காரணிகளே காரணம் என்று ஆழமான சூக்ஷ்ம காரணிகளைப் பற்றி அறியாமல் இருக்கும் முட்டாள்தனம் இதனால் புரியப்படும். 

9) காக்கை இருக்க பனம் பழம் விழுதல் என்ற தர்க்கம்

******************************************************************

பனம் பழம் வெகு இலகுவாக குலையை விட்டுக் கழராது; இதனால்தான் நோகாமல் நுங்கு தின்ன ஆசைப்படுரான் என்று கூறுகிறோம். இப்படி உறுதியாக குலையுடன் இருக்கும் பனம் பழம் எளிய காகம் இருக்க விழுந்தது என்று வாதிடும் ஆழமற்ற முட்டாள்தனத்தைக் கூறும் தர்க்க முறை.


தலைப்பு இல்லை

ந்யாய சாஸ்திரம் என்பது ஒருவன் தனது அந்தக்கரணங்கள் {மனம், புத்தி, சித்தம், ஆங்காரம்} நான்கிலும் மனம், புத்தி ஆகிய இரண்டையும் சரியான முறையில் தர்க்க ரீதியில் பயிற்றுவிப்பது என்பதைக் கூறும் ஒரு அறிவு!

மனதைச் செம்மைப்படுத்துவதில் நியாய சாஸ்திரம் கற்பது அவசியமானது! இல்லையென்றால் சாஸ்த்திரங்களை மனம் போன போக்கில் அர்த்தப்படுத்திக் கெடுத்து விடுவோம். 

இது சிந்தனைக்கான சில உருவகங்களைத் (metaphor) தருகிறது. 

1) ஆட்டுப் பால் மடி தர்க்கம்: (அஜ கல ஸ்தான நியாய)

**********************************

ஆட்டின் மடியிலிருந்தே பால் கறக்கப்படுகிறது என்பதற்காக ஆட்டின் மடியிலேயே பால் உற்பத்தியாகிறது என்று நம்பும் அறியாமை. 

பலர் வேலைத்தளத்தில் தமது முகாமையாளர்தான் தனக்கு சம்பளம் தரும் முதலாளி என்று நம்பிக்கொண்டு முட்டாள்களுக்கு அடிமையாகி, விரக்தியடையும் நபர்கள் இப்படியான தர்க்கம் உடையவர்கள். 

2) அந்தகனும் முடவனும் தர்க்கம் (அந்தக கன்ஜ நியாய)

***************************************

ஓரிடத்தில் குருடனும், முடவனும் இருந்தால் குருடன் தோளில் முடவன் ஏறி இருந்து வழிகாட்ட, குருடன் முடவன் கூறுவதைக் கேட்டு அவன் கூறும் வழியில் செல்ல வேண்டும். அப்படியில்லாமல் குருடன் முடவன் தோளில் ஏறி அமர்ந்து அவனை நடக்கச் சொன்னால் எதுவும் நடக்காது. 

இதைப் போல் வேலைத்தளத்தில் சில அறிவில்லாத சோம்பேறிகள் மற்றவர்களை முதுகில் ஏறி சவாரிசெய்யும் முட்டாள்தனத்தை விளங்க இந்தத் தர்க்கம் உதவும்.

3) வாத்து அண்ட தர்க்கம் 

(பகண்ட நியாயம்)

***************************** 

வாத்துகள் தமக்கு முன்னே செல்லும் காளைமாட்டின் குறிகளை (testicles) பார்த்து தமக்கு பெரிய முட்டைகள் விருந்தாகக் கிடைத்திருக்கிறது என்ற மிதப்பில் அலையுமாம். இறுதியில் காளை மாடு ஒரு உதை கொடுத்தால் ஓடிவிடும். 

இதுபோல் பலரும் தமக்கு ஒவ்வாத கற்பனையை வளர்த்துக்கொண்டு, தேவையற்றவற்றிற்கு பின்னால் ஓடிக்கொண்டு கடைசியில் ஏமாந்து போகும் முட்டாள்த்தனத்தை இது குறிக்கும். 

4) சுப்தோதித நியாயம்

****************************

ஒருவன் தூக்கத்தில் கனவை அனுபவித்து விட்டு எழுந்தவுடன் அது உண்மை அல்ல என்று தனது தினசரிக் கடமைகளைச் செய்வதைப் போன்றதே எமது பிறப்பு, இறப்பு என்ற அறிவினை விளக்குவது இந்தத்தர்க்கம்.

5) நிர்வாணக் குழந்தை தர்க்கம் (நக்ன மாத்ரிக நியாயம்)

************************************

ஒரு குழந்தை பிறக்கும் போது நிர்வாணமாகப் பிறந்தது என்பதற்காக வாழ்க்கை பூராகவும் நிர்வாணமாக இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கும் முட்டாள்த்தனம். 

இன்று சோதிடத்தை நம்பும் பலரும் இத்தகைய முட்டாள்தனத்தைத் தான் செய்கிறார்கள். ஒருவன் பிறக்கும் போது இருக்கும் கிரகப் பிரபாவம் தான் ஒருவனுடைய ஜனன ஜாதகம்; அவன் பிறந்த பின் ஒவ்வொரு கணமும் கிரகமும் மாறுகிறது; அவனும் புதிய கர்மங்களைச் செய்கிறான். ஆனால் தான் பிறந்த போது இருந்த கிரக பலம் தான் தனது துன்பம் முழுமைக்கும் காரணம் என்று நம்புகிறான். ஆனால் அறிவு பலத்தால் தனது வாழ்க்கையை மாற்றமுடியும் என்பதை உணராமல் இருக்கும் முட்டாள்தனத்தை உணர இந்தத் தர்க்கம் உபயோகமாக இருக்கிறது. 

தொடரும்...


Wednesday, May 26, 2021

தலைப்பு இல்லை

கடந்த வைகாசிப் பௌர்ணமியுடன் தொடங்கப்பட்ட சிருஷ்டி இன்றுடன் ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்கிறது. உலகெங்கும் புராதன ஞானத்தினை நவீன மனதிற்கு எப்படி எடுத்துச் சொல்வது என்ற முயற்சியில் மூன்று யோகக் கற்கைக் குழுக்களை உருவாக்கி சிரத்தையுள்ள மாணவர்களை உருவாக்கியுள்ளது!

Tuesday, May 25, 2021

தலைப்பு இல்லை

நாளை அறிமுக வகுப்பு தொடங்குகிறது. 

ஆர்வமுள்ளவர்கள் பதிவினை மேற்கொள்ளலாம்.

ஹதயோக மூல நூற்களை அதன் மறைபொருள் உண்மைகளுடன் கற்பதற்கான தளமாக இந்த வகுப்பு அமையும். 

https://forms.gle/DtYtcJKgqN6rWQJF9

 

Monday, May 24, 2021

தலைப்பு இல்லை

பிரபலமான அமேசன் இந்தியா தளத்தில் இப்போது "யோகமும் இயற்கையும்" நூல்!

தலைப்பு இல்லை

To buy Sri Shakti Sumanan Trilogy (within India): அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் + சிவயோக ஞானத்திறவுகோல் + யோகமும் இயற்கையும்: http://www.imojo.in/SV01SAYCombo

People live in Abroad please WhatsApp/Telegram to : +918072549625.


தலைப்பு இல்லை

ஹம்ஸ யோகம் 22 வாரம் தினகரன் சைவ மஞ்சரியில்.

ஹம்ஸ யோக சாதனையின் முக்கிய நிபந்தனைகள், அனுபவங்களைப் பற்றி உரையாடுகிறது!


தலைப்பு இல்லை

நாம் கனவு கண்ட கனவாகிய இயற்கை வழி விவசாயத்தினை நோக்கி இலங்கை நகர்கிறது! 

மூன்று வருடங்களுக்கு முன்னர் எனது வாழ்க்கைப் பாதையை மாற்ற தெய்வாதீனமாக நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன்! அப்போது முழுமையாக நவீன விவசாயத்தினை பெரும் வணிக அடிப்படையில் செய்ய அனுபவம் உடைய நான், நண்பர் ஒருவரால் "இல்லை இயற்கை விவசாயம் செய்வோம்” என்று உந்தப்பட, அது நான் கற்ற சூழலியலிற்கும் இதயத்திற்கும் அருகில் இருந்ததால் ஏற்றுக்கொண்டு ஆரம்பித்தோம்! 

ஸ்ரீ அரவிந்தர் பிரக்ஞை (consciousness) மாற்றத்தினைப் பற்றிப் பேசுகிறார்; உலகை மாற்ற விரும்பினால், நீ விரும்பும் உலகை முதலில் உனக்குள் படைத்து நீ உருமாறு (transform yourself), பின்னர் அதை நூறு பேரை படைக்கும்படி உதவி செய்! அந்த நூறு பேர் அதைப் பயிற்சிக்க, மெதுவாக உலகம் அந்த நிலையை அடையும் தன்மையை தன்னுள் உருவாக்கும் என்று!

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு யோகசாதனையாக நிலம் ஒன்றை எடுத்து இயற்கை விவசாயப் பண்ணையை வடக்கில் அமைத்தோம்! அதேவேளை இன்னொரு பக்கம் யாழ்ப்பாணத்தில் தம்பி Dr. Prabu Nadaraja அவர்களும் நண்பர்களும் இயற்கை வழி இயக்கம் என்று ஆரம்பித்து உணர்வுப் பூர்வமாக செயற்பட ஆரம்பித்தார்கள்! ரஜிந்தன் Rajethan Makeswaran Jenojan Kanthasamy Suje Tharma Nivetha Sivarajah மகேஸ்வரநாதன் கிரிசன் இயற்கைவழி விவசாயிபோன்ற இன்னும் பல இளைஞர்கள் இதில் உணர்வுப்பூர்வமாக ஈடுபட்டு வந்துள்ளார்கள். 

இன்று இலங்கை அரசாங்கம் இதனை எதிர்காலத்தின் தேவையாக உணர்ந்திருக்கிறது. எதிர்காலத்திற்கு பயன்படக்கூடிய அறிவில் நாம் உத்வேகப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்பது மிகவும் மகிழ்வு தரும் செய்தி!

 

Thursday, May 20, 2021

தலைப்பு இல்லை

எதிர்வரும் வைகாசிப் பௌர்ணமி அன்று வெளியாக உள்ள எமது நூல்.

பதிப்பகத்தார் முன்பதிவு செய்யும் அன்பர்களுக்கு 25% கழிவுடன் தருகிறார்கள். 

இந்தியாவிற்குள் இந்த இணைப்பில் வாங்கிக் கொள்ளலாம்; 

One Book Purchase (with 25% discount): http://imojo.in/SVVVol01 

Gift Pack (03 books with discount): 

http://www.imojo.in/3SVVV01

Sri Shakti Sumanan Trilogy: அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் + சிவயோக ஞானத்திறவுகோல் + யோகமும் இயற்கையும்: http://www.imojo.in/SV01SAYCombo

சிவயோக ஞானத்திறவுகோல் + யோகமும் இயற்கையும் : 

http://www.imojo.in/V01SYCombo


தலைப்பு இல்லை

எமது பிறந்தநாளுடன் வைகாசிப் பௌர்ணமி அன்று வெளியிட நாம் எழுதிய பல்வேறு கட்டுரைத் தொகுப்புகளை ஒன்றாக்கி நூலுருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் தம்பிமார்கள் Jayaseelan Matheswaran Vimalathithan Vimalanathan இறங்கி இன்று அச்சிற்கு அனுப்பியாகி விட்டது. 
அட்டைப்படம் ஓவியர் Goabi Ramanan P 

எதிர்வரும் வைகாசிப் பௌர்ணமி அன்று நூல் கிடைக்கும்! 

எமக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிப்பதுடன் வாசிப்பில் ஆர்வமுள்ள அன்பர்கள் நூலினை வாங்கி பதிப்பகத்தினை ஊக்குவிக்குமாறு வேண்டிக்கொள்கிறோம். 

பதிப்பகத்தார் முன்பதிவு செய்யும் அன்பர்களுக்கு 25% கழிவுடன் தருகிறார்கள். 

இந்தியாவிற்குள் இந்த இணைப்பில் வாங்கிக் கொள்ளலாம்; http://imojo.in/SVVVol01 

நூலின் உள்ளடக்கம் மேலேயுள்ள இணைப்பில் பார்த்துக்கொள்ளலாம்.

Tuesday, May 18, 2021

தலைப்பு இல்லை

ஆர்வமுள்ளவர்கள் இணையலாம்!

பதிவுகளிற்கு: https://forms.gle/RnCgujVkVC7Xb9wo6


தலைப்பு இல்லை

21 வாரங்கள் பூர்த்தி!

மூச்சின் இரகசியமும் யோகசாதனையும்


Monday, May 10, 2021

தலைப்பு இல்லை

மலையகத்திற்கு அந்நிய செலாவணியை பெற்றுத்தருவது தேயிலை, இறப்பர், கொக்கோ என்று பழைய சமூகக்கல்விப் பாடத்திட்டத்தில் கற்பிப்பதை நம்பிக்கொண்டு அந்தப் பெருந்தோட்டத்தினை முகாமைத்துவம் செய்யும் கம்பனிகளுடன் போராடிக்கொண்டிருக்கும் அரசியல் வழக்கத்திற்கு ஜனாதிபதி எடுத்த ஒரு முடிவு game changer ஆக மாறுமா?

உர இறக்குமதியைத் தடை செய்தல்; இது மேலோட்டமாகப் பார்த்தால் விவசாயிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்று எண்ணத்தோன்றும்; ஆனால் ஒவ்வொரு தடையும் அதைத்தாண்டி புதிய நிலையை அடைவதற்கான பரீட்சை என்ற பார்வையில் பார்த்தால் இது மிகப்பெரிய வாய்ப்பு! 

நுவரெலியாவின் மரக்கறிச் செய்கையை Organic ஆக மாற்றுவதற்கு இதைவிட வேறு அரிய சந்தர்ப்பம் இல்லை என்று சொல்லலாம். 

இப்படியொரு சந்தர்ப்பம் கியூபாவிற்கு 1989 களில் நடந்தது. 

சோவியட் யூனியனை மாத்திரம் ஒற்றை நம்பிக்கையாக ஏற்றுமதி நாடாகக் கொண்டு கரும்புச் செய்கையில் ஈடுபட்ட கியூபா 1989 இல் சோவியட் யூனியன் உடைந்ததுடன் விவசாயத்திற்கு தேவையான உர இடுபொருட்களை பெறமுடியாமல் போனது. உடனே மக்கள் அனைவரும் அரசினைக் குறைகூறாமல், கொள்கை வகுப்பாளர்கள் இப்படி ஆகிவிட்டதே என்று புலம்பாமல் மாற்றி யோசிக்க ஆரம்பித்தார்கள். இதனால் உருவாகியது Organic revolution. 

இதில் இரண்டு உத்திகளைப் பயன்படுத்தினார்கள்;

1. Urban agriculture: நகரத்தில் கிடைக்கும் சிறு இடங்களில் எல்லாம் உற்பத்தி செய்வது. 

2. Organic Production: கியூபாவின் சேதன விவசாய முறையை ஆராய்ந்த Peter Rosset கூறுகிறார்; அவர்கள் (கியூபா) இரண்டு விடயங்களைச் செய்தார்கள்; 1) அவர்களுடைய முன்னோர்கள் நவீன உரம், பீடை நாசினிக்கு முன்னர் எப்படி விவசாயம் செய்தார்கள் என்பதை ஞாபகப்படுத்தினார்கள்- ஊடுபயிர்களுடன், பயிர் சுழற்சி, இலைகுழை, விலங்குக் கழிவுகளை மண்ணிற்குக் கொடுத்தல் - இவற்றை பயிற்சிக்கத் தொடங்கினார்கள். 2) தாவர இடுபொருள்களிலிருந்து நவீன அறிவியலைக் கொண்டு biopesticides and biofertilisers தயாரிப்பில் ஈடுபடத்தொடங்கினார்கள். 

இன்று இலங்கை அமைச்சரவையின் இளம் அமைச்சரும், இலங்கையில் அதிக விவசாயிகள் வசிக்கும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற மக்கள் பிரதிநிதியுமான கௌரவ அமைச்சர் Jeevan Thondaman அவர்கள் உர இறக்குமதித்தடை காரணமாக விவசாயிகளுக்கு ஏற்படுள்ள இந்தப்பிரச்சனையைப் பற்றி கலந்துரையாடியதாக தனது முகநூலில் தெரிவித்துள்ளார். வழமையாக இப்படியான பிரச்சனைக்கு உடனடியாக உரத்தை இறக்குமதி செய்ய அரசிடம் விண்ணப்பிப்போம் என்ற திசையில் சிந்திக்காமல் இதை, நுவரெலியா ஒரு பெரும் விவசாய பூமி, இதை நாம் organic ஆக மாற்றினால் தேயிலைக்கு ஈடாக மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு மரக்கறி ஏற்றுமதி செய்யலாம்; தேயிலைத் தோட்டங்களைத் தாண்டி வளமான எதிர்காலத்தை எமது மக்களுக்கு ஏற்படுத்தலாம் என்ற அடிப்படையில் சிந்திக்க வேண்டும். 

அரசியல் பிரச்சனையாகப் பார்க்காமல் மாற்றுவழிகள், அறிவியல் வழிகள் இருக்கிறதா என்று ஆராய வேண்டும். பாரதத்தில் தமிழ் நாடு, மகாராஷ்ரா ஆகிய இடங்களில் வெற்றிக்கதைகள் நிறைய இருக்கிறது. இதை எப்படி எமது சமூகத்திற்கு பாவிக்கலாம் என்ற சிந்தனை உருவாக வேண்டும். 

கீழே உள்ள நூல் இந்த சந்தர்ப்பத்திற்குரிய வழிகாட்டி;


Sunday, May 09, 2021

தலைப்பு இல்லை

ஒரு பாடசாலையின் நிர்வாகம் தனது இலக்கினை, வினைத்திறனை எப்படி நிர்ணயிக்க வேண்டும். இதற்குரிய ஆய்வு முறை என்ன? 

நடந்து முடிந்த பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடும் போது இத்தனை சதவீதம் சித்தி என்று வெறுமனே ஒற்றை இலக்கத்தில் இதனைக் கூறிப் பெருமைப்பட்டுகொள்ள முடியாது. 

நிர்வாகம் ஒவ்வொரு வருடமும் அதன் முன்னைய வருடங்களிலிருந்து தாம் எவ்வளவு முன்னேறி இருக்கிறோம், பின்னே சறுக்கியிருக்கிறோம் என்ற ஆய்வு அதி முக்கியமானது. 

O/L சித்தியடைந்த மாணவர்களில் எத்தனை பேரை A/L வரை கொண்டு சென்று பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினை, சூழலை பாடசாலையில் ஏற்படுத்துகிறோம் என்பதும், அதற்கான திட்டம் என்ன என்பதும் அதிமுக்கியமானது. 

O/L சித்தியடையாத மாணவர்களை மீண்டும் சித்தியடைய வைக்கும் வாய்ப்பினை எப்படி உருவாக்குகிறோம் என்பது கேட்கப்படவேண்டும். 

O/L இலிருந்து A/L முடியும் இரண்டு வருடத்திற்குள் பொருளாதாரம், உளவியல் காரணங்களிற்காக எத்தனை மாணவர்கள் பாடசாலைக் கல்வியை விட்டு நீங்குகிறார்கள் என்பது ஆராயப்பட வேண்டும். 

இந்தக்காரணங்களை நிவர்த்தி செய்ய பெற்றோர் ஆசிரியர் சங்கம், பழைய மாணவர்கள் சங்கம், கல்வி அபிவிருத்திச் சங்கங்களின் வளங்களை, உதவிகளை எப்படிப் பெறுவது என்ற மூலோபாயம் இருக்க வேண்டும். 

பாடசாலையில் மாணவர்கள் தகுந்த பெறுபேறுகளைப் பெறவில்லை என்றால் அதற்குரிய உளவியல் காரணம், பாடசாலைச் சூழல், ஆசிரியர் உத்வேகம், குடும்ப பொருளாதாரம் என்பவை ஆராயப்படவேண்டும். 

இவற்றை வெறுமனே அட்டவணைப்படுத்தி அறிக்கைகளில் உறங்கவிடாமல் உரையாடல் களங்கள், வாதப்பிரதிவாதங்களுக்கு உட்படுத்தி அடுத்த வருடம் இன்னும் சிறப்பாக பெறுபேறுகளைப் பெறுவது எப்படி என்று சிந்திக்கவேண்டும். 

இதற்கு சிறுபிள்ளைத் தனமான அதிபரைக் குற்றம் சாட்டுதல், ஆசிரியரைக் குறைகூறுதல், பெற்றோரைக் குறைகூறுதல் என்று குட்டையை குழப்பாமல் பிரச்சனையை சரியாக அறிவுப் பூர்வமாக புரிந்துகொண்டு ஊர்கூடி தேர் இழுக்க வேண்டும்.


தலைப்பு இல்லை

கல்வியல் ஆய்வுகள் இத்தனை பேர் தோற்றினார்கள், இத்தனை பேர் சித்தியடைந்தார்கள் என்ற புள்ளிவிபரவியல் சமூகம் உயர்ச்சியடைவதற்குப் போதாது!
இது system & process analysis ஊடாக ratio analysis ஆக ஒன்றிணைந்த ஆய்வு முறையினூடாக ஆராயப்பட வேண்டும்.
இதற்குரிய மாதிரியை கீழே தந்துள்ளேன்.
    சாதாரண தரத்தை (GCE O/L) அடிப்படைக் கல்வித் தகுதி எனவும்,
    உயர்தரத்தை (GCE A/L) மத்திய கல்வித் தகுதி எனவும்,
  பல்கலைக்கழகத்தை (Bachelor Degree) அடிப்படை உயர் கல்வித்தகுதி (ஏனென்றால் உயர் கல்வித்தகுதி முதுமாணி (masters) அதியுயர் கல்வித்தகுதி ஆய்வு முனைவர் (research based PhD) எனவும் கொண்டால் கீழ்வரும் தரவுகளை இப்படி விளங்கப்படுத்தலாம்.
ஒரு சமூகத்தின் 17423 நபர்களில் இறுதியாக மத்திய கல்வித் தகுதியைப் பெறுபவர்கள் 6329 நபர்கள்;
அதாவது மத்திய கல்வித்தரம் குறித்த சனத்தொகையிலிருந்து 36% ஆனோரே அடைகிறார்கள்.
மிகுதி 64% ஆனோர் உயர் கல்வித்தரத்தை அடைவதற்குரிய வழிகள் என்ன? இதற்குரிய திட்டம் என்ன?
பாடசாலைகள், ஆசிரியர், பெற்றோர் ஒட்டுமொத்த சமூகமாக என்ன பங்களிப்புச் செய்கிறார்கள் அல்லது எப்படி கல்வி முன்னேற்றத் திட்டங்களை வினைத்திறனான தாக்கமுள்ள திட்டங்களாக வகுக்கலாம் என்பதும் பெறப்படும்!

Tuesday, May 04, 2021

தலைப்பு இல்லை

மனமதை அறிந்தால் தன்னை உணரலாம்.

மனமதை அறிந்தால் சிந்தை தெளியலாம்.

மனமதை அறிந்தால் கற்பனையின் பிடியிலிருந்து மீளலாம்.

மனமதை அறிந்தால் சித்தியடையலாம்.

மனமதை அறிந்தால் பித்தம் தெளியலாம்.

மனமதை அறிந்தால் பந்தம் எதுவென்றறியலாம்.

மனமதை அறிந்தால் சொந்தம் எதுவென்று புரியலாம்.

ஸ்ரீ ஸக்தி சுமனன்

04-மே-2021

Monday, May 03, 2021

தலைப்பு இல்லை

யதார்த்த வாதம் அல்லது நடைமுறை வாதம் என்பது என்ன?

நாம் சிந்திப்பது என்பது செயற்படுவதற்காக இருக்க வேண்டும் என்பது!

பலரது சிந்தனைகள் கற்பனா வாதமே அன்றி செயலில் இருப்பதில்லை!

தர்க்கம் என்பது நாம் நிர்ணயித்த இலக்கினை நோக்கிய செயலிற்கான சிந்தனை! தர்க்கத்தில் இலக்கு இருக்க வேண்டும், அந்த இலக்கிற்கு ஏற்ப எமது சிந்தனை நகரவேண்டும்! சிந்தனை செயலாக வெளிப்பட வேண்டும்!

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...